இராணுவத்தினர் நல கல்விக் கழகம்
இராணுவ நல கல்விக் கழகம் (Army Welfare Education Society (AWES) இந்தியா முழுவதும் உள்ள இராணுவப் பாசறைகளில் குடியிருக்கும் இந்திய இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை நடுவன் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கல்வி வழங்க 137 இராணுவப் பொதுப் பள்ளிகளையும், 249 மழலையர் பள்ளிகளையும் நிர்வகிப்பதற்காக 1983-இல் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் தில்லியில் உள்ள இராணுவப் பாசறையில் இயங்குகிறது. மேலும் இந்த இராணுவ நல கல்விக் கழகம், நாடு முழுவதும் சட்டம், மருத்துவம், வணிகம் மற்றும் பொறியியல் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த 12 கல்லூரிகளை நிர்வகிக்கிறது.[1] [2]
உருவாக்கம் | 29 ஏப்ரல் 1983 |
---|---|
வகை | Non-Profit |
நோக்கம் | To promote education for the wards of army personnel. |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
சேவை பகுதி | இந்தியா முழுவதும் |
சேவைகள் | பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
நிர்வாக இயக்குநர் | மேஜர் ஜெனரல் ஆர். கே. ரைனா (ஓய்வு) |
Director Coord | கர்ணல் டி. எஸ். சுகாக் (ஓய்வு) |
திட்ட இயக்குநர் | கர்ணல் குல்சன் சதேவ் (ஓய்வு) |
தாய் அமைப்பு | இந்திய இராணுவம் |
சார்புகள் | நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் |
வலைத்தளம் | awesindia |
இராணுவ நல கல்விக் கழகம் நடத்தும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
தொகு- இராணுவப் பொதுப் பள்ளிகள்
- இராணுவ மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (A.I.M.T), நொய்டா பெருநகர், உத்தரப் பிரதேசம்[3][4]
- இராணுவ பல் மருத்துவக் கல்லூரி, செகந்திராபாத், தெலங்கானா [5]
- இராணுவ மருத்துவ அறிவியல் கல்லூரி, புது தில்லி[6]
- இராணுவ மேலாண்மைக் கல்லூரி, கொல்கத்தா [7]
- இராணுவ தொழில்நுட்ப நிறுவனம், புனே
- இராணுவ ஆடை வடிவமைப்புக் கல்லூரி, பெங்களூர் [8]
- இராணுவ மேலாண்மை மற்றும் உணவகச் சேவை தொழில் நுட்பக் கல்லூரி, பெங்களூர்[9]
- இராணுவ சட்டக் கல்லூரி, மொகாலி[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Aboutus பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2015 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "AWES HQ".
- ↑ "Army wards to fight boardroom battles". The Times of India. 31 Aug 2004 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411043517/http://articles.timesofindia.indiatimes.com/2004-08-31/chandigarh/27172701_1_army-personnel-hotel-management-army-institute. பார்த்த நாள்: 28 February 2013.
- ↑ "Uttar Pradesh judges to train at army management institute". Sify. 2 May 2011 இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140409182424/http://www.sify.com/news/uttar-pradesh-judges-to-train-at-army-management-institute-news-national-lfcruqjeggd.html. பார்த்த நாள்: 28 February 2013.
- ↑ "Army College of Dental Sciences, Secunderabad". Archived from the original on 2020-10-13. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
- ↑ Army College of Medical Sciences
- ↑ Army College of Medical Sciences
- ↑ "ARMY INSTITUTE OF FASHION & DESIGN, BANGALORE". Archived from the original on 2020-11-30. பார்க்கப்பட்ட நாள் 2020-10-11.
- ↑ Army Institute of Hotel Management & Catering Technology, Bangalore
- ↑ Army Institute of Law
வெளி இணைப்புகள்
தொகு