இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி (Radhapuram Assembly constituency), திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2.70 இலட்சம் ஆவர். ராதாபுரம் வட்டத்தில் அமைந்த இத்தொகுதியில் நாடார், பட்டியல் சமூகத்தினர், முக்குலத்தோர், மீனவர் மற்றும் யாதவ சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இத்தொகுதி மலைவளமும், கடல் வளமும் கொண்டது. கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திர கிரி திரவ உந்து ராக்கெட் தளம் அமைந்துள்ளது. [1]
இராதாபுரம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
மக்களவைத் தொகுதி | திருநெல்வேலி |
மொத்த வாக்காளர்கள் | 270760 |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | திமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தமிழ்நாடு மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1971 | வி. கார்த்தீசன் | திமுக | 33,630 | 49.00 | கே. பி. கருத்தையா | காங்கிரசு | 31,358 | 45.69 |
1977 | ஒய். எஸ். எம். யூசுப் | அதிமுக | 26,404 | 38% | பி. பால் பாண்டியன் | ஜனதா | 22,810 | 33% |
1980 | எஸ். முத்து ராமலிங்கம் | கா.கா.கா | 38,044 | 53% | நெல்லை நெடுமாறன் | திமுக | 31,408 | 44% |
1984 | குமரி அனந்தன் | கா.கா.கா | 40,213 | 50 | சுப்ரமணிய நாடார் | சுயேச்சை | 25,075 | 31 |
1989 | ரமணி நல்லதம்பி | இதேகா | 29,432 | 32 | கார்த்தீசன் | திமுக | 24,930 | 27 |
1991 | ரமணி நல்லதம்பி | இதேகா | 51,331 | 60 | சற்குணராஜ் | திமுக | 18,600 | 22 |
1996 | எம். அப்பாவு | தமாகா | 45,808 | 44% | எஸ். கே. சந்திரசேகரன் | இதேகா | 16,862 | 16% |
2001 | எம். அப்பாவு | சுயேச்சை | 44,619 | 45 | ஜோதி .எஸ் | பாமக | 26,338 | 27 |
2006 | எம். அப்பாவு | திமுக | 49,249 | 43 | ஞானபுனிதா .எல் | அதிமுக | 38,552 | 34 |
2011 | எஸ். மைக்கேல் ராயப்பன் | தேமுதிக | 67,072 | 48.36 | பி. வேல்துரை | இதேகா | 45,597 | 32.88 |
2016 | ஐ. எஸ். இன்பதுரை | அதிமுக | 69,590 | 41.05 | மு. அப்பாவு | திமுக | 69,541 | 41.02% |
2021 | எம். அப்பாவு | திமுக[3] | 82,331 | 43.95 | ஐ. எஸ். இன்பதுரை | அதிமுக | 76,406 | 40.79 |
மேற்கோள்கள்
தொகு- ↑ ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி நிலவரம், 2021
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ ராதாபுரம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா