இராமகிராம தூபி


இராமகிராம தூபி (Ramagrama stupa) (நேபாளி: रामग्राम नगरपालिका, கௌதம புத்தர் நினைவாக, நேபாள நாட்டின் மாநில எண் 4ல் உள்ள நவல்பராசி மாவட்டத்தில் உள்ள இராமகிராமம் எனும் நகரத்தில் கிமு 483ல் எழுப்பப்பட்ட நினைவுத் தூபியாகும்.

ராமகிராமம் தூபி
रामग्राम नगरपालिका
Ramagrama, the relic stupa of Lord Buddha கௌதம புத்தர் நினைவாக அசோகர் ராமகிராமத்தில் நிறுவிய தூபி
பேரரசர் அசோகர் (வலது) இராமகிராமத்திற்கு வருகை புரிந்து, (நடுவில்), வளு மிக்க நாகர் இன மக்களிடமிருந்து புத்தரின் நினைவுச் சின்னத்தை கைப்பற்ற முயலாமல் போகும் சிற்பக் காட்சி, சாஞ்சி தூபியின் தெற்கு நுழை வாயில்
ஆள்கூறுகள்27°29′52″N 83°40′52″E / 27.49778°N 83.68111°E / 27.49778; 83.68111
இடம்பராசி, நவல்பராசி மாவட்டம், மாநில எண் 4
வகைதூபி
கட்டுமானப் பொருள்செங்கல் மற்றும் களிமண்
நீளம்50 மீட்டர்கள் (160 அடி)[1]
அகலம்50 மீட்டர்கள் (160 அடி)[1]
உயரம்6.85 மீட்டர்கள் (22.5 அடி)[1]
துவங்கிய நாள்கிமு 483 [2]
முடிவுற்ற நாள்கிமு 483[2]
அர்ப்பணிப்புகௌதம புத்தர்

பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றான இராமகிராமத் தூபியை உலகப் பராம்பரியக் களங்களின் தற்காலிக பட்டியலில் 23 மே 1996 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.[3] [3]

வரலாறு

தொகு
 
மகா ஜனபதங்கள்

கௌதம புத்தரின் பெற்றோர்,. தந்தை சுத்தோதனர் சாக்கிய குலத்தவராவர். தாய் மாயாதேவி கோலிய குலத்தை சார்ந்தவர். இவ்விரு குலங்களும், மகா ஜனபதமான கோசல நாட்டின் சிற்றரசர்கள் ஆவர்

கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பின்னர், அவரது உடலை எரித்துக் கிடைத்த சாம்பல் மற்றும் எலும்புகளைச் சேமித்து, பிரித்து, பல நாடுகளுக்கு அனுப்பி, அதனை புத்தரின் புனிதப் பொருளாகக் கொண்டு, அதன் மீது 8 மகா ஜனபத நாடுகளின் தலைநகரஙகளுக்கு அருகில், புத்தரின் நினைவுத் தூபிகள் எழுப்பப்பட்டது.[4] எட்டு தூபிகளின் விவரம்:

  1. இந்நகரம் அல்லக்கப்பை கண சங்கத்தின் பூலி மக்களின் வாழ்விடம் ஆகும்.[5][6]
  2. கபிலவஸ்து, சாக்கியர்களின் தலைநகரம் [7] (சிலர் நேபாள எல்லைப்பகுதியில் உள்ள இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிப்ரவா எனுமிடம் என்றும் வாதிடுகின்றனர்.) [8][9]
  3. குசிநகர், இந்தியா, உத்தரப் பிரதேசம், (மல்லத்தின் நகரம்) இவ்விடத்தில் கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார்.[10]
  4. பவா நகரம், இந்தியா, உத்தரப் பிரதேசம் [11]
  5. ராஜகிரகம், மகத நாடு (இந்தியாவின் பிகார்) மாநிலம்[12]
  6. இராமகிராமம் தூபி, (பண்டைய கோலியர்களின் நகரம்), நவல்பராசி மாவட்டம், நேபாளம் [13][14]
  7. வைசாலி, வஜ்ஜிகளின் தலைநகரம்[15]
  8. வதாடிபா, (Vathadipa) பண்டைய அந்தணர்களின் குடியிருப்பு, இவ்விடம் இன்னும் அறியப்படவில்லை. [16]

கௌதம புத்தர் இறந்து முன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அசோகர் ஆட்சிக் காலத்தில், கௌதம புத்தரின் நினைவுத் தூபிகளில், ஏழு தூபிகளை மட்டும் திறந்து, அதனடியில் வைக்கப்பட்டிருந்த கௌதம புத்தரின் புனித எலும்புகள், சாம்பல், முடிகள், பற்கள் மற்றும் மண் மட்டும் ஒன்றுசேர்த்து, பின் அவைகளை பல பகுதிகளாகப் பிரித்து, மௌரியப் பேரரசின் முக்கிய இடங்களில் கௌதம புத்தர் நினவாக நூற்றுக் கணக்கான புதிய தூபிகள் எழுப்பப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Shrestha, SS (2001). "Ramagrama excavation II". Ancient Nepal: Journal of the Department of Archaeology 148: 1–29. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/ancientnepal/pdf/ancient_nepal_148_01.pdf. பார்த்த நாள்: 2014-11-30. 
  2. 2.0 2.1 Cousins, LS (1996). "The dating of the historical Buddha: a review article". Journal of the Royal Asiatic Society. Series 3 6 (1): 57–63. doi:10.1017/s1356186300014760. http://indology.info/papers/cousins. பார்த்த நாள்: 2018-03-31. 
  3. 3.0 3.1 யுனெசுகோ (2014). "Ramagrama, the relic stupa of Lord Buddha". Tentative Lists. Paris: UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 2014-11-30.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Shrestha, SS (1999). "Ramagrama excavation". Ancient Nepal: Journal of the Department of Archaeology 142: 1–12. http://himalaya.socanth.cam.ac.uk/collections/journals/ancientnepal/pdf/ancient_nepal_142_01.pdf. பார்த்த நாள்: 2014-11-30. 
  5. "Allakappa". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  6. "Bulī". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  7. "Kapilavatthu". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  8. Peppe, WC (1898). "The Piprahwa Stupa, containing relics of Buddha". Journal of the Royal Asiatic Society (Article XXIII): 573–88. https://books.google.com/books?id=3HjaswkRsSYC&pg=PA927&lpg=PA927&dq=Journal+of+the+Royal+Asiatic+Society+1898&source=bl&ots=RhBcZkHYnp&sig=VK7NshtADztsHJRLTj0PyGsVGPI&hl=en&sa=X&ei=yeh5VKCTLoelNraJgSg&ved=0CDsQ6AEwBA#v=snippet&q=since%20the%20discovery%20of%20the%20pillar&f=false. 
  9. Srivastava, KM (1980). "Archaeological Excavations at Piprāhwā and Ganwaria and the Identification of Kapilavastu". The Journal of the International Association of Buddhist Studies 13 (1): 103–10. http://journals.ub.uni-heidelberg.de/index.php/jiabs/article/download/8511/2418. 
  10. "Kusinārā". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  11. "Pāvā". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  12. "Rājagaha". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  13. "Rāmagāma". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  14. "Koliyā". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  15. "Vesāli". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.
  16. "Vethadīpa". Palikanon.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-16.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகிராம_தூபி&oldid=4049566" இலிருந்து மீள்விக்கப்பட்டது