இராமச்சந்திரன் மோகேரி
இராமச்சந்திரன் மோகேரி (Ramachandran Mokeri) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாடக நடிகராவார். 1947 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். கேரளாவில் புரட்சிகர சமூக நாடக நடைமுறையில் இராமச்சந்திரன் மோகேரி குறிப்பாக கவனம் செலுத்தினார். தென்னிந்தியாவின் வட கேரளாவைச் சேர்ந்த இவர் நாடக ஆர்வலர், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் மற்றும் அறிஞர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார். கோழிக்கோடு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நாடகம் மற்றும் நுண்கலை பள்ளியில் மோகேரி இயக்குநராக பணியாற்றினார். திருச்சூர் நகரின் புறநகர்ப் பகுதியான அரணட்டுக்கரையில் அமைந்துள்ள பள்ளியில், பல்கலைக்கழகத்தின் இந்தத் துறை நாடகம் மற்றும் நாடகத்தில் முறையான கல்வியையும் பயிற்சியையும் வழங்குகிறது. இந்தப் பள்ளி தேசிய நாடகப் பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ளது .
சிந்த ரவி போன்ற மலையாள திரைப்பட இயக்குனர்களுடன் இவர் இணைந்து பணியாற்றினார்.[1][2][3][4][5][6][7][8][9]
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ore Thooval Pakshikal
- ↑ List of colleges and universities in Thrissur district
- ↑ "A Social Satire"
- ↑ "Youths predicament Dominates"
- ↑ "Seminar K Satchidanandan"
- ↑ "Indian art films"
- ↑ "Kerala Theatre Festival Conference" பரணிடப்பட்டது 2013-01-19 at the வந்தவழி இயந்திரம்
- ↑ fragmentos. YouTube. Archived from the original on 2021-12-08.
- ↑ Archived at Ghostarchive and the Wayback Machine: raagam m band final 0001. YouTube.
- ↑ Actor and drama artiste Ramachandran Mokeri passes away