இராம் சிரோமணி வர்மா
இராம் சிரோமணி வர்மா (Ram Shiromani Verma) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசத்தின் சிரவசுதி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் வர்மா சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து போட்டியிட்டார்.
இராம் சிரோமணி வர்மா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | தாதன் மிசுரா |
தொகுதி | சிரசுவதி |
பெரும்பான்மை | 5,320 |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | அக்பர்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
முன்னாள் கல்லூரி | அவாத் பல்கலைக்கழகம் |
தொழில் | விவசாயம், வணிகம் |
அரசியல் வாழ்க்கை
தொகுமார்ச் 2019-இல், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் ஆகியவற்றின் மகா கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் வர்மா சிரசுவதி மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜின் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவித்தது.[1] மே 23 அன்று, தனது நெருங்கிய போட்டியாளரும் பாரதிய ஜனதா கட்சி அப்போதைய மக்களவை உறுப்பினரான தத்தான் மிசுராவினை 5,320 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "श्रावस्ती से सपा-बसपा गठबंधन का प्रत्याशी घोषित, बसपा के जोनल कॉर्डिनेटर ने दिया यह बयान" (in இந்தி). Patrika. 12 March 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.
- ↑ "राम शिरोमणि वर्मा बने श्रावस्ती के सांसद". Live Hindustan. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 25 May 2019.