இராம. கண்ணபிரான்

இராம. கண்ணபிரான் (பிறப்பு: 1943) இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இராபிள்ஸ் பள்ளியில் உயர்நிலைக் கல்வியைக் கற்றார்.

தொழில் தொகு

ரோசைத் தொடக்கப் பள்ளியில் ஆங்கில மொழி ஆசிரியராகவும், பின்பு அதே பள்ளியில் தமிழ்மொழி ஆசிரியராகப் தொழிலாற்றியுள்ளார்.

வகித்த பதவிகள் தொகு

இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் ஆரம்ப காலச் செயலவை உறுப்பினராகவும், சிங்கப்பூர் இலக்கியக் களம், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையம், தேசிய கலை மன்றம் போன்ற இலக்கிய, கலை, அரசு அமைப்புகளின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

இலக்கியப் பணி தொகு

சிறுகதை, நாவல், நாடகம், கவிதை என பல்துறைகளிலும் ஈடுபாடுமிக்க இவரின் இவரது முதல் படைப்பு ஒரு சிறுகதையாகும். இதுவரை சுமார் 60 சிறுகதைகளையும், 4 குறுநாவல்களையும், 8 நாடகங்களையும், 7 கவிதைகளையும், 35 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது இத்தகைய மலேசியா சிங்கப்பூர் தமிழ்நாடு போன்ற இடங்களிலிருந்து வெளிவரும் தமிழ் இலக்கிய சிற்றிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேலும் சிங்கை, மலேசியா வானொலிச் சேவைகள் இவரது சிறுகதைகளை ஒலிபரப்பியுள்ளன.

எழுதியுள்ள நூல்கள் தொகு

சிறுகதைத் தொகுப்புகள் தொகு

  • இருபத்தைந்து ஆண்டுகள்
  • உமாவுக்காக
  • வாடைக்காற்று
  • சோழன் பொம்மை

குறுநாவல் தொகு

  • பீடம்

பெற்ற விருதுகளும், கௌரவங்களும் தொகு

  • தமிழ் முரசு நடத்திய சிறுகதைப் போட்டியின் இரண்டாம் பரிசு
  • தமிழ் நேசன் பவுன் பரிசு
  • நாடோடிகள் எனும் சிறுகதைக்ககான முதல் பரிசு
  • தென் கிழக்காசிய எழுத்தாளர் விருது
  • மாண்ட் பிளாங்க் இலக்கிய விருது
  • கலாசாரப் பதக்கம்

உசாத்துணை தொகு

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம._கண்ணபிரான்&oldid=2713068" இலிருந்து மீள்விக்கப்பட்டது