இராம. குருநாதன்

தமிழ் எழுத்தாளர்

இராம. குருநாதன் (பிறப்பு சூன் 7, 1945) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர்.

இராம.குருநாதன்
பிறப்புஇராம.குருநாதன்
கும்பகோணம், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஒப்பியல், மொழிபெயர்ப்பு அறிஞர்

படிப்பு, எழுத்து தொகு

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான நூல்களை ஆய்ந்து அறிவதில் ஆர்வம் கொண்டவர். ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு நாவல்கள், 12 கட்டுரைத்தொகுதிகள் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதிவருகிறார்.[1]

சிறப்பு தொகு

ஒப்பியலிலும், மொழிபெயர்ப்பிலும் ஆர்வம் கொண்டவர்.

நூல்கள் தொகு

  • ஐக்கூ சிலபார்வைகள் சில பதிவுகள்[2]
  • இராம. குருநாதன் கவிதைகள்[3]
  • தலித்தியல், கலைஞன் பதிப்பகம் (பத்மாவதி விவேகானந்தனுடன் இணைந்து)[4][5]
  • செந்தமிழ் காவலர் டாக்டர் அ. சிதம்பரநாதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் உரைகள்[6]
  • மண்மகன்[7]
  • சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை[7]
  • காப்பியச்சாளரம் [8]
  • சங்கப்பாடல்களும் ஜப்பானியக் கவிதைகளும், சௌம்யா உதயம், திருப்பத்தூர், 2007 [9]
  • நெடுநல்வாடையும் புனித ஆக்னிசு நற்பொழுதும் ஓர் ஒப்பாய்வு, விழிகள் பதிப்பகம், சென்னை, 2011 [10]

மொழிபெயர்ப்புகள் தொகு

  • பெயர்வு, ராஜம் வெளியீடு, சென்னை, 2007[11]
  • தமிழ் யாப்பியல் உயராய்வு, ஆங்கில மூலம் அ.சிதம்பரநாதனார், விழிகள் பதிப்பகம், சென்னை, 2009 [12]
  • போடோ சிறுகதைகள், ஆங்கில மூலம் ஜெய்காந்த சர்மா, சாகித்திய அகாதெமி 2012[13]

மேற்கோள்கள் தொகு

  1. போடோ சிறுகதைகள், மூலம் ஜெய்காந்த சர்மா, தமிழாக்கம் இராம. குருநாதன், நூலின் பின் அட்டை
  2. "டிஸ்கவரி புக் பேலஸ்". Archived from the original on 2016-09-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
  3. அகரமுதல
  4. நூல் உலகம்
  5. தினமலர்
  6. டயல் பார் புக்ஸ்
  7. 7.0 7.1 "சென்னை மாவட்ட மைய நூலகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
  8. "பொது நூலகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
  9. "ஈரோடு மாவட்ட மைய நூலகம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-12-27.
  10. தினமணி, 22 சூலை 2013
  11. நேஷனல் லைப்ரரி போர்டு, சிங்கப்பூர்
  12. நூல் உலகம்
  13. கூகுள் புக்ஸ்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம._குருநாதன்&oldid=3544126" இலிருந்து மீள்விக்கப்பட்டது