இரா சிங்கால்

இந்திய ஆட்சிப் பணி அதிகாரி

இரா சிங்கால் (Ira Singhal) ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், கணினியியல் பொறியாளருமவார். 2014 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர். தில்லி பல்கலைக்கழகத்தின் நேதாஜி சுபாஸ் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து கணினிப் பொறியியலும், தில்லி பலகலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுகள் பீடத்திலிருந்து முதுகலை வணிக மேலாண்மையையும் முடித்தார். இவர் தனது நான்காவது முயற்சியில் தேர்வில் முதலிடம் பெற்று, அரசுப் பணியாளர் தேர்வில் முதலிடம் பிடித்த முதல் மாற்றுத்திறன் கொண்ட பெண் என்ற பெருமையைப் பெற்றார்.[1]

இரா சிங்கால்
உதவி ஆட்சியர்
தில்லி அரசு
பதவியில்
சூன் 2016 – பதவியில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 ஆகத்து 1983 (1983-08-31) (அகவை 41)
மீரட், இந்தியா
தேசியம் இந்தியா
கல்விகணினிப் பொறியியல், முதுகலை வணிக மேலாண்மை
முன்னாள் கல்லூரிநேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப நிறுவனம்
தில்லி பல்கலைக்கழகம்
வேலைஇந்திய ஆட்சிப் பணி
அறியப்படுவது2014 அரசுப் பணியாளர் தேர்வில் முதலிடம் பிடித்த முதல் மாற்றுத்திறன் கொண்ட பெண்
இரா சிங்கால்
பணியகம்இந்திய அரசு
அமைப்பு(கள்)தில்லி அரசு

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

இரா சிங்கால், உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில்[2] இராஜேந்திர சிங்கால் - அனிதா சிங்கால் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு பொறியாளர், தாய் ஒரு காப்பீட்டு ஆலோசகர். இவர் மீரட்டின் சோபியா பெண்கள் பள்ளியிலும், தில்லியின் லோரெட்டோ கான்வென்ட் பள்ளியிலும் படித்தார்.

இராவுக்கு முதுகெலும்பு தொடர்பான ஸ்கோலியோசிஸ் எனப்படும் கோளாறு உள்ளது. இது இவரது கை இயக்கத்தை சீர்குலைக்கிறது.[2] இவர், தௌலா குவானின் இராணுவப் பொதுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். நேதாஜி சுபாஷ் தொழிநுட்ப நிறுவனத்தில் கணினிப் பொறியியல் படித்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுகள் பீடத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

தனது முதல் முயற்சியிலேயே கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், இவரது உடல் ஊனத்தால் அலுவலகத்தில் பதவி ஏற்க அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில் அதிகாரிகள் தள்ளுதல், இழுத்தல், தூக்குதல் போன்றவற்றில் இவரது இயலாமையை மேற்கோள் காட்டினர். இவருக்கு ஸ்கோலியோசிஸ் இருப்பதால் இவருக்கு நியமனம் மறுக்கப்பட்டது. [3] [4] 2012இல் இவர் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வென்றார், அதன் பிறகு இவருக்கு இந்திய வருவாய் சேவையில் உதவி ஆணையராக பணி வழங்கப்பட்டது.[5] சிங்கால், 2010, 2011, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அரசுப் பணியாளர் தேர்வை எழுதினார்.முதல் மூன்று முயற்சிகளில் இவர் இந்திய வருவாய் சேவையைப் பெற்றார். 2015இல் இவர் இந்திய நிர்வாக சேவையைப் பெற்றார்.

ஆட்சிப் பணியில் ச்செர்வதற்கு முன்பாக இவர் சிறுது காலம் கேட்பரி இந்தியாவில் ஒரு வியூக மேலாளராகவும், கோகோ கோலா நிறுவனத்தில் விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றினார். இவர் ஒரு வருடம் எசுப்பானியத்தையும் கற்பித்தார். இவர் சூன் 2016 முதல் தில்லி அரசாங்கத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி)[6] [7] பணி நியமனம் பெற்றார்.

இவர், இந்திய அரசின் ஊனமுற்றோர் துறை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஆகியவற்றின் விளம்பரத் தூதுவராக இருக்கிறார்.[8] மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் , நிதி ஆயோக் ஆகியவற்றின் விளம்பரத் தூதுவர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகக்கூடிய தேர்தல்களுக்கான தேசியக் குழுவில் உள்ளார். மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொடர்பாக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் தேர்வுக் கொள்கையின் வடிவமைப்பிலும் இவர் ஒரு பகுதியாக இருந்தார். இவருடைய விருதுகளில் இந்தியா டுடேவின் 2015 ஆம் ஆண்டின் இந்தியாஅவின் சிறந்த பெண், இந்திய ஆட்சிப் பணி பயிற்சியில் முதலிடம் பெற்று குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம், இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முதல் பெண்கள் விருது ஆகியவை அடங்கும். இவர் லிம்கா சாதனைகள் புத்தகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "A great moment for me and my family, says Ira Singhal". The Hindu. 2015-07-04. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/national/ira-singhal-tops-upsc-exam/article7386497.ece. 
  2. 2.0 2.1 "Not eligible to be sweeper, but I'm IAS officer: UPSC topper Ira". Hindustan Times. 4 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.
  3. "First physically challenged woman to top IAS, Ira Singhal tells how her disability was never an excuse: How I made it". indiatoday.intoday.in. Archived from the original on 2017-11-02. பார்க்கப்பட்ட நாள் 2017-10-28.
  4. "Meet 2014 UPSC topper Ira Singhal, who was earlier barred from civil services due to her disability - Firstpost". firstpost.com. 7 July 2015. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
  5. "A Special Victory: This Woman Just Topped India's Toughest Exam Beating Disability And Discrimination". The Huffington Post. 4 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-11.
  6. "Ira Singhal". supremo.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2016-08-12.
  7. "IRA SINGHAL CSE 2014, AIR 1 has a Lesson You Must Learn". chanakyaiasacademyblog.wordpress.com. 25 April 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-27.
  8. "IAS topper to be brand ambassador for disability | India News - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா_சிங்கால்&oldid=3607881" இலிருந்து மீள்விக்கப்பட்டது