இருபது அடிக்கு சமமான அலகு

இருபது அடிக்கு சமமான அலகு, இருபது-அடி சமமான அலகு (சுருக்கமாக TEU அல்லது teu) சரக்கு கொள்ளளவுக்கான துல்லியமான அலகு ஆகும். இது பெரும்பாலும் கொள்கலன் கப்பல்கள் மற்றும் கொள்கலன் துறைமுகங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது 20-அடி நீளமுள்ள (6.1 மீ) இடைநிலை கொள்கலனின் அளவை (1 TEU) அடிப்படையாகக் கொண்டது. 1 TEU என்பது 20 அடி நீளம், 8'0" அகலம் மற்றும் பொதுவாக 8'6" உயரம் கொண்ட கொள்கலனின் அலகு ஆகும். மெட்ரிக் அடிப்படையில் ஒரு TEU 6.10 மீட்டர் நீளம், 2.44 மீட்டர் அகலம் மற்றும் 2.59 மீட்டர் உயரம் கொண்டது. 40-அடி கொள்கலன் 2 TEU க்கு சமம். 1 TEU இன் வெளிப்புற அளவு 1,360 கன அடி (38.51 கன மீட்டர்) கொள்கலன் கப்பல்கள், இரயில்கள் மற்றும் இழுவையிணைப்பு வண்டிகளில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான கொள்கலன்கள் 2 TEU என குறிப்பிடப்படுகின்றது.[1]

ஒரு 20 அடி நீள கொள்கலன் 1 TEUக்கு சமம்.
இரண்டு 40 அடி நீள கொள்கலன்கள், இரண்டு 20 அடி நீள கொள்கலன்களின் மீது வைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கொள்கலன்கள் 6 TEUக்கு சமம்.

கொள்கலன் அதன் நீளத்தால் வரையறுக்கப்படுகிறது. இருப்பினும் கொள்கலனின் உயரம் தரப்படுத்தப்படவில்லை எனினும் 4 அடி 3 அங்குலம் (1.30 மீ) மற்றும் 9 அடி 6 அங்குலம் (2.90 மீட்டர்) வரை இருக்கும். கொள்கலனின் பொதுவான உயரம் 8 அடி 6 அங்குலம் (2.59 மீ) ஆகும்.[2] 45 அடி (13.7 மீட்டர்) கொள்கலனை 2.25 TEU என்று குறிப்பிடாமல், 2 TEU என்று குறிப்பிடுவது பொதுவானது.

நாற்பது அடிக்கு சமமான அலகு தொகு

 
மேலிருந்து கீழாக அடுக்கப்பட்ட கொள்கலன்கள்: 53 அடி நீளம், 48  நீளம், 45  அடி நீளம், 40  அடி நீளம், மற்றும் இரண்டு 20  அடி நீள கொள்கலன்கள்

நிலையான இடைநிலை கொள்கலன் இருபது அடி நீளம் (6.1 மீட்டர்) மற்றும் 8 அடி (2.44 மீ) அகலம் என குறிப்பிடப்படுகிறது.[1] ஆனால் நாற்பது அடி நீளம் இரட்டிப்பாகும். அதனை 40-அடி (12.2 மீ) கொள்கலன் என்று அழைக்கப்படுகிறது. இது சரக்கு போக்குவரத்தில் ஒரு நாற்பது-அடி சமமான அலகு (பெரும்பாலும் FEU அல்லது feu) சமமாக உள்ளது (இரண்டாக கருதப்படுகிறது. TEU கீழே பார்க்கவும்).

இந்த வகையான கொள்கலனைகளை கப்பலில் அடுக்கி வைப்பதற்காக, நாற்பது-அடி இடைநிலை கொள்கலத்தின் சரியான நீளம் 40 அடி (12.192 மீ). அதே சமயம் நிலையான இருபது-அடி இடைநிலை கொள்கலன் 19 அடி 10.5 அங்குலங்கள் (6.058 மீ) துல்லியமான நீளம் கொண்ட சற்றே குறைவாக உள்ளது. இதனால் இரண்டு நிலையான இருபது அடி கொள்கலன்கள் மூன்று அங்குல இடைவெளியைக் கொண்டுள்ளது. இது ஒரு நாற்பது அடி கொள்கலனை அதன் மேலே வைக்க அனுமதிக்கிறது.[3]

அரை இழுவையிணைப்பு வண்டி மூலம் இழுக்க முடியும் என்பதால், நாற்பது அடி கொள்கலன்கள் பரந்த ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய நாற்பதடி நீளம் கொண்ட கொள்கலன்கள் பல நாடுகளில் தேசிய சாலை விதிமுறைகளின் வரம்பிற்குள் உள்ளது. சிறப்பு அனுமதி தேவையில்லை. சில சாலை விதிமுறைகள் நீண்ட இழுவையிணைப்பு வண்டிகளை அனுமதிப்பதால், நிலையான நாற்பது-அடி கொள்கலனின் மாறுபாடுகளும் உள்ளது. ஐரோப்பா மற்றும் பிற இடங்களில் 45 அடி (13.72 மீ) கொண்ட ஒரு இழுவையிணைப்பு வண்டி மூலம் இழுக்கப்படலாம். 48 அடி (14.63 மீ) அல்லது 53 அடி (16.15 மீ) நீளம் கொண்ட கொள்கலன்கள் வட அமெரிக்காவில் சாலை மற்றும் இரயில் போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 40 அடிக்கு மேல் நீளமாக இருந்தாலும், இந்த மாறுபாடுகள் நாற்பது அடி சமமான அலகுகளின் ஒரே வகுப்பில் வைக்கப்படுகின்றன.

சமன்பாடு (Equivalence) தொகு

TEU பொதுவான கொள்கலன்களின் அளவுகள்
நீளம் அகலம் உயரம் உட்புற கொள்ளளவு TEU குறிப்பு சதுர மீட்டர்
20 அடி (6.1 m) 8 அடி (2.44 m) 8 அடி 6 அங் (2.59 m) 1,172 cu ft (33.2 m3) 1[4] 15,84
40 அடி (12.2 m) 8 அடி (2.44 m) 8 அடி 6 அங் (2.59 m) 2,389 cu ft (67.6 m3) 2[4] 29,77
48 அடி (14.6 m) 8 அடி (2.44 m) 8 அடி 6 அங் (2.59 m) 3,264 cu ft (92.4 m3) 2.4 35,62
53 அடி (16.2 m) 8 அடி (2.44 m) 8 அடி 6 அங் (2.59 m) 3,604 cu ft (102.1 m3) 2.65 39,53
20 அடி (6.1 m) 8 அடி (2.44 m) 9 அடி 6 அங் (2.90 m) 1,520 cu ft (43 m3) 1[2] உயர் கனசதுர கொள்கலன்கள்[5] 15,84
20 அடி (6.1 m) 8 அடி (2.44 m) 4 அடி 3 அங் (1.30 m) 680 cu ft (19.3 m3) 1[2] அரை கனசதுர கொள்கலன்கள் 15,84

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு