இருமக் கருந்துளை

இருமக் கருந்துளை (binary black hole - BBH) என்பது இரண்டு கருந்துளைகள் நெருக்கமாக ஒரே சுற்றுவட்டப்பாதையில் வரும் ஒர் அமைப்பாகும். கருந்துளைகள் போலவே இருமக்கருந்துளைகளும் பாரிய திணிவு கொண்ட இரும விண்மீன்களின் எச்சங்களால், அல்லது இரும மீப்பெரும் கருந்துளைகளின் அண்ட சேர்க்கையின் விளைவு எனக்கருதப்படுகிறது.

GW150914 என்ற இருமக் கருந்துளை அமைப்பு ஒன்றின் கணினி உருவகப் படம்.[1]

பல ஆண்டுகளாக இருமக்கருந்துளை இருப்பதற்கு ஆதாரம் ஏதும் தெளிவாக காணப்படவில்லை இதற்கு காரணம் இருமக்கருந்துளையின் இயல்பே ஆகும். கருந்துளைகள் நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால், அதனால் ஏற்படும் ஆற்றல் ஈர்ப்பு அலைகளைப்போல் ஒரு மகத்தான அளவு ஆற்றலை வெளியிடும். இதை பொதுச் சார்புக் கோட்பாடு மூலம் கணக்கிட முடியும். 20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போதும் இருமக்கருந்துளைகள் பெரும் ஆர்வத்தை அறிவியல் ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தியது. ஈர்ப்பு அலைகள் ஒரு சாத்தியமான ஆதாரமாக இருமக்கருந்துளைகளுக்கு விளங்குகிறது. இருமக்கருந்துளைகளின் சேர்க்கை பிரபஞ்சத்தின் வலுவான புவிஈர்ப்பு அலைகளாகக் கருதப்படுகிறது[2]

வாழ்க்கை சுழற்சி

தொகு

இருமக்கருந்துளையின் வாழ்க்கை சுழற்சியின் முதல் நிலை படிப்படியாக சுருங்கும் ஒரு சுழல் வட்டப்பாதையாக உள்ளது. இந்த முதல் சுழல் நிலை வெகு நேரம் எடுத்துக்கொள்ளும். அதோடு இதனால் வெளிப்படும் புவிஈர்ப்பானது மிக வலுவிழந்து காணப்படும். இதற்கு காரணம் கருந்துளைகளின் அதிக இடைவேளை ஆகும். புவிஈர்ப்பு அலைகள் வெளிப்படுவதால் சுற்றுவட்டப்பாதை சுருங்குகிறது. விண்மீன்கள் போன்ற பிற பொருட்களோடு நிகழும் இடைவினை காரணமாக கூடுதல் கோண உந்தம் இழப்பு ஏற்படுகிறது. கருந்துளையின் சுற்றுப்பாதை சுருங்கும்போது வேகம் அதிகரித்து புவியீர்ப்பின் உமிழ்வும் அதிகரிக்கும். கருந்துளைகள் நெருக்கமாக இருந்தால் அதனின் சுற்றுப்பாதை விரைந்து சுருங்கும்.

வடிவம்

தொகு

கருந்துளையின் சேர்க்கையின் போது ஏற்படும் ஒரு பிரச்சனையான நிகழ்வெல்லை கட்டமைப்பு அல்லது உருவம்,தீர்க்கமுடியாததாக உள்ளது.எண் மாதிரிகளில், புவிமேற்பரப்புகள் இணைக்கப்பட்டு நிகழ்வெல்லை ஏற்படுகிறதா என்று சோதனை நடத்தப்படுகிறது.இரண்டு கருந்துளைகள் ஒன்றை மற்றொன்று அணுகும் போது, ஒரு டக்பில்(Duckbill) வடிவம் இரண்டு நிகழ்வெல்லைகளிலிருந்து துருத்தியிருக்கும்.இந்த புடைப்பானது மற்ற கருந்துளையின் புடைப்பு அணுகும் வரை நீண்டும் குறுகியும் இருக்கும்.இந்த சந்திப்பின் நேரத்தில் நிகழ்வெல்லை மிகக் குறுகிய எக்ஸ்(X)- வடிவத்தை கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Credits: SXS (Simulating eXtreme Spacetimes) project
  2. Abadie, J.; LIGO Scientific Collaboration; The Virgo Collaboration; Abernathy, M.; Accadia, T.; Acernese, F.; Adams, C.; Adhikari, R. et al. (2011). "Search for gravitational waves from binary black hole inspiral, merger and ringdown". Physical Review D 83 (12): 122005. doi:10.1103/PhysRevD.83.122005. Bibcode: 2011PhRvD..83l2005A. http://arxiv.org/abs/1102.3781. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருமக்_கருந்துளை&oldid=3301564" இலிருந்து மீள்விக்கப்பட்டது