இரு பீனைல் ஈதர்
இரு பீனைல் ஈதர் (Diphenyl ether) என்ற கரிமச் சேர்மம் (C6H5)2O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. நிறமற்ற திண்மப் பொருளான இது ஓர் எளிய ஈரரைல் ஈதராகும். இரு பீனைல் ஈதர் பல்வேறு முக்கியப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. [5]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1'-ஆக்சியிருபென்சீன்[1] | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
101-84-8 | |
Beilstein Reference
|
1364620 |
ChEBI | CHEBI:39258 |
ChEMBL | ChEMBL38934 |
ChemSpider | 7302 |
EC number | 202-981-2 |
Gmelin Reference
|
165477 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7583 |
வே.ந.வி.ப எண் | KN8970000 |
| |
UNII | 3O695R5M1U |
UN number | 3077 |
பண்புகள் | |
C12H10O | |
வாய்ப்பாட்டு எடை | 170.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திண்மம் அல்லது நீர்மம் |
மணம் | செரானியம் போன்றது |
அடர்த்தி | 1.08 கி/செ.மீ3 (20°செல்சியசு)[2] |
உருகுநிலை | 25 முதல் 26 °C (77 முதல் 79 °F; 298 முதல் 299 K) |
கொதிநிலை | 121 °C (250 °F; 394 K)[3] 1.34 கிலோபாசுக்கல் அழுத்தம் (10.05 மி.மீ பாதரசம்), 258.55 °செல்சியசு 100 கிலோபாசுக்கல் அழுத்தம் (1 பார்) |
கரையாது | |
ஆவியமுக்கம் | 0.02 மி.மீ பாதரசம் (25°செல்சியசு)[2] |
-108.1•10−6 cm3/மோல் | |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Aldrich MSDS |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H319, H400, H411 | |
P264, P273, P280, P305+351+338, P337+313, P391, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 115 °C (239 °F; 388 K) |
வெடிபொருள் வரம்புகள் | 0.7%-6.0%[2] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3370 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) 4000 மி.கி/கி.கி (எலி,வாய்வழி) 4000 மி.கி/கி.கி (கினியா பன்றி,வாய்வழி)[4] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
சராசரி வெளிப்பாட்டு நேரம் 1 மில்லியனுக்குப் பகுதிகள் (7 மி.கி/மீ3)[2] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
சராசரி வெளிப்பாட்டு நேரம் 1 மில்லியனுக்குப் பகுதிகள் (7 மி.கி/மீ3)[2] |
உடனடி அபாயம்
|
100 மில்லியனுக்குப் பகுதிகள்[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு1901 ஆம் ஆண்டிலேயே இரு பீனைல் ஈதரின் பல்வேறு பண்புகள் அறியப்பட்டுள்ளன.[6]வில்லியாம்சன் ஈதர் தொகுப்புமுறையில் சில மாற்றங்கள் மேற்கொண்டு இதை தயாரிக்கிறார்கள். இங்கு பீனால் மற்றும் புரோமோபென்சீனின் வினை ஒரு காரத்தின் முன்னிலையிலும் வினையூக்கி அளவு தாமிரத்தோடும் நிகழ்கிறது.
- PhONa + PhBr → PhOPh + NaBr
இதேபோல நிகழும் பிற வினைகள் சிலவற்றிலும் குறிப்பாக பீனால் தயாரிக்கும் குளோரோபென்சீனின் நீராற்பகுப்பு வினையின் உயர் அழுத்தத்தில் இரு பீனைல் ஈதர் ஒரு பக்க வினைவிளைபொருளாக உருவாகிறது. [7] இருபீனைல் ஈதருடன் தொடர்புடைய சேர்மங்கள் உல்மான் வினையின் வழியாகத் தயாரிக்கப்படுகின்றன.
இருபீனைல் ஈதர் சேர்மம் பிற பீனைல் வளையங்கள் போலவே ஐதராக்சிலேற்றம், நைட்ரோயேற்றம், ஆலசனேற்றம், சல்போயேற்றம், அசைலேற்றம் அல்லது பீரிடல் கிராப்ட்சு வினை உள்ளிட்ட பொதுவான வினைகளுக்கு உட்படுகிறது, [5]
பயன்கள்
தொகுஇருபீனைல் ஈதரின் முக்கிய பயன்பாடு இருபீனைலுடன் சேர்ந்து ஓர் எளிதில் உறைகின்ற கலவையாக வெப்ப பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தப்படுவதேயாகும். திரவ நிலையின் ஒப்பீட்டளவில் பெரிய வெப்பநிலை வரம்பு காணப்படுவதால் வெப்ப பரிமாற்ற ஊடகத்திற்கு இக்கலவை மிகப்பொருத்தமாகப் பயன்படுகிறது. வர்த்தகரீதியாகக் கிடைக்கும் இக்கலவையில் (டௌதர்ம் ஏ) 73.5% இருபீனைல் ஈதரும் 26.5% இருபீனைலும் கலந்துள்ளன. [8][9]
பெராரியோ வினையின் வழியாக பீனாக்சாதைன் உற்பத்தி செய்யப்படும் செயல்முறையில் இருபீனைல் ஈதர் தொடக்க வேதிப்பொருளாகப் பயன்படுகிறது. [10]பாலியமைடு மற்றும் பாலியிமைடு சேர்மங்கள் தயாரிப்பில் பீனாக்சாதைன் பயன்படுத்தப்படுகிறது. [11]
குறைந்த விலை, நிலைப்புத்தன்மை மற்றும் இருபீனைல் ஈதரின் வாசனை காரணமாக சோப்பு வாசனை திரவியங்களில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பாலியெசுத்தர்கள் உற்பத்தியிலும் இருபீனைல் ஈதரின் செயலாக்கமும் உதவியாகப் பயன்படுத்தப்படுகிறது. [5]
தொடர்புடைய பிற சேர்மங்கள்
தொகுபல பல்புரோமினேற்ற இருபீனைல் ஈதர்கள் தீச்சுடர் ஒடுக்கிகளாகப் பயன்படுகின்றன. ஐந்து, எட்டு, பத்து புரோமினேற்ற இருபீனைல் ஈதர்கள் பொதுவான பல்புரோமினேற்ற இருபீனைல் ஈதர்களாகும். இம்மூன்றில் பத்து புரோமினேற்ற இருபீனைல் ஈதர் மட்டும் 2003 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டிருப்பினும் [12]DecaBDE, also known as decabromodiphenyl oxide,[13]இன்னும் பரவலான பயன்பாட்டில் உள்ளது. பத்து புரோமினேற்ற இருபீனைல் ஈதர் டெக்காபுரோமோயிருபீனைல் ஆக்சைடு என்றும் அறியப்பட்டுகிறது. அமெரிக்காவில் ஓர் ஆண்டிற்கு 450,000 கிலோகிராம் அளவுக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. சேடெக்சு 102 என்ற வர்த்தகப் பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் இச்சேர்மம் தீச்சுடர் ஒடுக்கியாக சாயங்கள் மற்றும் நெகிழிகள் உற்பத்ட்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "CHAPTER P-6. Applications to Specific Classes of Compounds". Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 705. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-00648. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0496". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Byers, Charles H.; Williams, David F. (July 1987). "Viscosities of pure polyaromatichydrocarbons". Journal of Chemical & Engineering Data 32 (3): 344–348. doi:10.1021/je00049a018. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9568.
- ↑ "Phenyl ether". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 5.0 5.1 5.2 Fiege, H.; Voges, H.-M.; Hamamoto, T; Umemura, S.; Iwata, T.; Miki, H.; Fujita, Y.; Buysch, H.-J.; Garbe, D. (2005), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_313
- ↑ Cook, A. N. (1901). "Derivatives of Phenylether". Journal of the American Chemical Society 23 (10): 806–813. doi:10.1021/ja02037a005. https://zenodo.org/record/1428908.
- ↑ Fahlbusch, K.-G.; Hammerschmidt, F.-J.; Panten, J.; Pickenhagen, W.; Schatkowski, D.; Bauer, K.; Garbe, D.; Surburg, H. (2003). Flavor and Fragrances. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2.
{{cite book}}
:|journal=
ignored (help) - ↑ Patent Appeal No. 7555 United States Court of Customs and Patent Appeals 7 April 1966 http://openjurist.org/358/f2d/750/application-of-edward-s-blake-and-william-c-hammann
- ↑ "Dowtherm® A 44570".
- ↑ Suter, C. M.; Maxwell, C. E. (1943). "Phenoxthin". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0485.; Collective Volume, vol. 2, p. 485
- ↑ Mitsuru Ueoda; Tatsuo Aizawa; Yoshio Imai (1977). "Preparation and properties of polyamides and polyimides containing phenoxathiin units". Journal of Polymer Science: Polymer Chemistry Edition 15 (11): 2739–2747. doi:10.1002/pol.1977.170151119.
- ↑ "DIRECTIVE 2003/11/EC of the European Parliament and of the Council" (PDF). Archived from the original (PDF) on 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 2021-05-22.
- ↑ Sutker, B. J. (2005). Flame Retardants. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-30673-2.
{{cite book}}
:|journal=
ignored (help)