இரு வாழ் பரப்பி
இரு வாழ் பரப்பி (Binary vector) என்பது தனது இழை வரிசையில் (DNA sequence) இரண்டு தொடக்க புள்ளிகள் (Ori or Origin) கொண்டுள்ளதால், இவைகளால் இரு வெவ்வேறு வாழ்யிடத்தில் இருக்க அல்லது பல்கி பெருக முடியும். எடுத்துக்காட்டாக பயிர் உருமாற்றத்தில் பயன்படும் அக்ரோ பரப்பிகள் (Ex.pGA vectors or pCAMBIA) இ.கோலியிலும் , பயிர்நோய்கோலுயிரிலும் (Agrobacterium) பல்கி பெருகும் தன்மையெய் கொண்டுள்ளன. ஈசுட்-இரு கலப்பின முறையில் (Yeast-two hybrid system) பயன்படுத்தப்படும் அனைத்து பரப்பிகளும் இதனில் அடங்கும். மேலும் ஈசுட்-இரு கலப்பின முறையில் பாவிக்கப்படும் பரப்பிகளுக்கு "சட்டில்" பரப்பிகள் (Shuttle vectors) எனவும் அழைக்கப்படும். ஏனெனில் இவைகள் ஈசுடின் உட்கருவுக்குள் சென்று வெளியில் வருவதால் அல்லது வெளியில் இருந்து உட்கருவுக்குள் செல்லும் தன்மை உள்ளதால் "சட்டில்" பரப்பிகள் எனப்பெயர்.
உசாத்துணை
தொகு- "T-DNA Binary Vectors and Systems", Lan-Ying Lee and Stanton B. Gelvin, Department of Biological Sciences, Purdue University, West Lafayette, Indiana 47907–1392