இறால் வளர்ப்பு

இறால் வளர்ப்பு. இந்தியாவில் பினாயஸ் மோனோடன் மற்றும் பினாயஸ் வனாமி ஆகிய இரு வகை இறால் பெரும்பாலும் வளர்க்கப்படுகின்றன. வனாமி இறால் உவர்நீர் மற்றும் நன்னீரிலும் வளர்க்கப்படுகின்றன.

வளர்ப்பு முறைகள்தொகு

பெரும்பாலும் குளங்களிலேயே வளர்க்கப்படுகின்றன. இவை இருப்பு செய்யப்படும் அடர்த்தியை பொருத்து எக்ஸ்டன்சிவ், செமி இன்டன்சிவ், இன்டன்சிவ் என வகைப்படுத்தலாம்.

சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7. 5 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம். தீவனத்தை மொத்தமாகப் போடாமல், காலை 6 மணி, 10 மணி, மதியம் 2 மணி, மாலை 6 மணி என்று நான்கு மணி நேர இடைவெளியில், நான்கு பாகங்களாகப் பிரித்து போட வேண்டும். குஞ்சுகள் வளர்ந்தாலும், இதே முறையில்தான் தீவனம் போட வேண்டும். கரையில் இருந்துகொண்டு தீவனத்தைப் போடாமல், மிதக்கக்கூடிய பலகையில் அமர்ந்து கொண்டு குட்டைக்குள் சென்று தீவனம் போட வேண்டும். அதற்கு வசதியாக குட்டையின் நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி வைத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் குட்டைக்குள் தாராளமாக ஆக்சிஜன் கிடைக்குமாறு அதற்கான பிரத்யேக கருவிகளைப் பொருத்த வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 4ppmக்கு குறையாமல் பராமரிக்க வேண்டும். பாம்பு, ஆமை, நண்டு போன்றவற்றைத் தவிர்க்க, குட்டையைச் சுற்றி வலை அமைக்க வேண்டும்(crab fence). பறவைகளின் மூலம் நோய் தொற்றை தவிர்க்க குளத்தின் மேற்புறத்தில் வலை அல்லது மெல்லிய தூண்டில் கயிறு மூலம் பாதுகாப்பு வேலி அமைக்கவேண்டும்(bird fencing).

இறால் வளர்ப்புக்கு உகந்த நீர் அளவுருக்கள்(water parameters)தொகு

ஆக்ஸிஜன் >4 ppm

உப்புத்தன்மை 10-25 ppt

வெப்ப அளவு 26-32 (°C)

கார அமிலத்தன்மை 7.5 - 8.5

நைட்ரைட் & நைட்ரேட் <1.0 ppm

அமோனியா <1.0ppm ppm

ஒளி ஊடுருவும் அளவு 25 முதல் 35 cm

கார்பன் டை ஆக்சைடு <10 ppm

சல்பைடு <0.003 ppm

இறால் வளர்ப்பிற்கான சிறப்பு குறிப்புகள்தொகு

  • கவனமுடனும் பெறுமையுடனும் மேற்கொள்ளல்.
  • இறால் வளர்ப்புக்கு முன்பு குட்டை எப்படி இருக்கிறதோ அறுலடைக்குப் பின்பும் அதே அளவு மேலாண்மை பெறுதல்.
  • வல்லுநர் ஆலோசனை பெறுதல்
  • இறால் குட்டையில் காலநேரம் தவறாமல் சுற்றுச்சுழல் நிலைகளுக்கேற்ப இறால் குஞ்சுகளை இருப்பு செய்தல்.
  • தரமான பொறிப்பகங்களில் இறால் குஞ்சுகளைப் பெறுதல்.
  • தரமான இறால் உணவு அளித்தல்.
  • 4-5 முறை உடவிடல்.
  • நீர் மேலாண்மை பாதுகாத்தல்.

கடலோர மக்கள் மற்றும் மீனவர்களுக்கு இறால் குட்டை மிகவும் பொருளாதாரரீதியாக மீனவர் தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்தியும் தொழில் நுட்ப மேம்பாடு அடையலாம்.[1]

மேற்கோள்தொகு

  1. “சேது சமுத்திரம் கப்பல் கால்வாய் திட்டம் கடலோர சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மீனவர் இறால் வளர்ப்பு பயிற்சி கையேடு” டாக்டர்.டே. கனகராஜ் ஜோசப் டாக்டர்.ஜே. தாகூர் டீரோஸ்மார்ச்-2006கிராம முழு சுகாதார இயக்கம் - திறந்தவெளி
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறால்_வளர்ப்பு&oldid=3181744" இருந்து மீள்விக்கப்பட்டது