இறைவன் (அகப்பார்வை)

இறை, இறைவன் என்னும் சொற்களைக் கையாண்டு திருக்குறள் விளக்கும் கருத்துகளை மட்டும் தொகுத்துப் பார்ப்பது அகப்பார்வை.

இறைவன் நமக்கு உள்ளேயும் வெளியேயும் இறைந்து கிடப்பவன். காலத்தாலும் இடத்தாலும் நமக்குள்ளும், நம்மைக் கடந்தும் இறைந்துகிடப்பவன் இறைவன். கண் முன்னே ஆளும் அரசனாகிய இறைவன் போலக் கண்ணுக்குத் தெரியாமல் தலைமை தாங்கி ஆள்பவன் இறைவன்.

வள்ளுவர் வழியில் சொல் விளக்கம்

தொகு
  • நீர் பாய்ச்சுதலை நீர் இறைத்தல் என்கிறோம்.[1], நீர் பாய்ச்சுவது போலத் தன்னை நமக்குள் பாய்ச்சுபவன் இறைவன்.
  • இறை என்னும் சொல் தோளைக் குறிக்கும்.[2] நமக்குத் தோள் கொடுப்பவனை இறைவன் என்கிறோம்.
  • கண்ணைக் கண்ணன் என்பது போலவும், கதிரைக் கதிரவன் என்பது போலவும், இறையை இறைவன் என்கிறோம். கடவுள் கண்ணுக்குத் தெரியாத இறைவன் [3] அரசன் கண்ணுக்குத் தெரியும் இறைவன்.[4]
  • அரசனாகிய இறைவனுக்கு நாம் தரும் வரி இறை எனப்படும். அவன் அதனை நமக்கு இறைப்பதனாலும் அதற்குப் பெயர் இறை.[5]
  • காப்பாற்றுதல்,[6] முறைசெய்து காப்பாற்றுதல்,[7] குற்றத்துக்குத் தண்டனை வழங்குதல்,[8] - போன்ற செயல்களைப் புரிந்து தலைவனாக விளங்கிவதால் கடவுளும், அரசனும் இறைவன் எனப் போற்றப்படுகின்றனர்.
  • இறைவனைத் தலை தாழ்த்தி வணங்குகிறோம். இப்படித் தலை தாழ்த்துவதை இறைஞ்சுதல் என்கிறோம்.[9] (இறை – இறைஞ்சு)

அடிக்குறிப்பு

தொகு
  1. இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் - திருக்குறள் 1161
  2. இறை இறவா நின்ற வளை - திருக்குறள் 1157,
  3. திருக்குறள் 5, 10,
  4. திருக்குறள் அதிகாரம் 39, 432, 436, 564, 778
  5. இறைவற்கு இறை ஒருங்கு ஈவது நாடு - திருக்குறள் 733
  6. இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை முறை காக்கும் முட்டாச் செயின் 547,
  7. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும் 388,
  8. ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் இறை புரிந்து - திருக்குறள் 541,
  9. நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் - திருக்குறள் 1093,

இவற்றையும் காண்க

தொகு
இறைவன், வள்ளுவர் பார்வை
இறைவன், அகப்பார்வை | ஆதிபகவன் | வாலறிவன் | மலர்மிசை ஏகினான் | வேண்டுதல் வேண்டாமை இலான் | பொறிவாயில் ஐந்து அவித்தான் | தனக்கு உவமை இல்லாதான் | அறவாழி அந்தணன் | எண்குணத்தான் | இறை வணக்கம் | நீத்தார் | தெய்வம் | ஊழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைவன்_(அகப்பார்வை)&oldid=3944910" இலிருந்து மீள்விக்கப்பட்டது