இலக்கணாவத்தை

(இலக்கிணாவத்தை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலக்கணாவத்தை என்பது யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சியில் உடுப்பிட்டித் தேர்தல் தொகுதியில் உள்ள ஒரு கிராமம். இது உடுப்பிட்டிச்சந்தியில் இருந்து வடகிழக்காக ஒரு மைல் தொலைவாகவும், வல்வெட்டித்துறையில் இருந்து தென் கிழக்காக ஒன்றரை மைல்கள் தொலைவிலும், பொலிகண்டியில் இருந்து தென்மேற்காக மூன்று மைல்கள் தொலைவாகவும், நெல்லியடியில் இருந்து வடமேற்காக இரண்டு மைல்கள் தொலைவிலும் இருக்கின்றது.

கிட்டத்தட்ட ஜம்பது குடும்பங்களை கொண்ட இந்தக் கிராமத்தில் கற்பகவிநாயகர் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் மேற்கு வீதியில் ஒரு ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கீழ் அதாவது ஆலயத்தின் வடக்கு வீதியில் ஒரு சனசமூக (அறிவகம்) நிலையமும் இருக்கின்றது.

வரலாறு

தொகு

யாழ்ப்பாண வரலாற்றில் சமரபாகு தேவன் என்றவனின் ஆளுகையின் கீழ் இருந்ததால் இது "சமரபாகு தேவன் குறிச்சி" எனவும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் அப்பெயர் மருவல் அடைந்து தற்போது இலக்கணாவத்தை எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

இக்கிராமத்தவர்கள்

தொகு

இந்தக் கிராமம் பல தேசிய விடுதலைப் போராளிகளை அளித்திருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணாவத்தை&oldid=3099877" இலிருந்து மீள்விக்கப்பட்டது