இலங்கையில் கிறித்தவம்
இலங்கையில் கிறித்தவம் ஒரு சிறுபான்மைச் சமயமாகவுள்ளது. இயேசுவின் அப்போஸ்தலர்களில் ஒருவர் கி.பி. 52இல் இந்தியாவுக்குக் கிறித்தவத்தை அறிமுகப்படுத்திய காலத்தில், இந்தியாவுக்கு அண்மையிலுள்ள இலங்கைக்கும் கிறித்தவம் அறிமுகமாகியிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் என்ற ஊகக் கருத்தும் உள்ளது.[2] கிறித்தவ வியாபாரிகள் இலங்கையில் 6ஆம் நூற்றாண்டில் தங்கி, தேவாலயத்தினைக் கட்டி கிறித்தவ சமய விடங்களில் ஈடுபட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.[3][4][5] 1505 இல் போர்த்துக்கேயரால் உரோமன் கத்தோலிக்கம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 17ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்துக்காரரால் மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் கிறித்தவர்கள் 10 வீதத்தினால் அதிகரித்தனர். இந்த எண்ணிக்கை பின்னர் குறைந்தது. இலங்கையிலுள்ள கிறித்தவர்கள் சிங்கள, தமிழ், பறங்கியர் இனக்குழுக்களை உள்ளடக்கியவர்களாகவுள்ளனர்.
Anuradhapura cross.png 6th century, known as the அனுராதபுரச் சிலுவை plays a significant role in Christians in Sri Lanka. | |
பின்பற்றுவோரின் மொத்த எண்ணிக்கை | |
---|---|
1,509,606 (2012)[1] | |
பின்பற்றுவோர் கணிசமாக உள்ள இடங்கள் | |
Province | |
மத்திய மாகாணம் | 752,993 |
வடமேல் | 300,367 |
வடக்கு | 204,005 |
மத்திய மாகாணம் | 90,519 |
கிழக்கு | 80,801 |
சமயங்கள் | |
மொழிகள் | |
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ "A3 : Population by religion according to districts, 2012". Census of Population & Housing, 2011. Department of Census & Statistics, Sri Lanka. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-05.
- ↑ "Christianity entered the South Asian region through India". Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
- ↑ "Christmas in ancient Sri Lanka". Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-09-07.
- ↑ ANOTHER ANCIENT CHRISTIAN PRESENCE IN SRI LANKA: THE ETHIOPIANS OF AKSUM[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Did Christianity exist in ancient Sri Lanka?
வெளியிணைப்புக்கள்
தொகு- Open Doors Int'l, Sri Lanka பரணிடப்பட்டது 2007-05-01 at the வந்தவழி இயந்திரம்
- Adherents.com, Religion by Location, Sri Lanka பரணிடப்பட்டது 2013-04-20 at the வந்தவழி இயந்திரம்
- SriLankanChristians.com பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- St. Andrew's Church (Church of Scotland) பரணிடப்பட்டது 2008-08-28 at the வந்தவழி இயந்திரம்