இலங்கை அஞ்சல் துறை

இலங்கை அஞ்சல் துறை என்பது இலங்கை அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். இலங்கை முழுவதும் 609 அஞ்சல் அலுவலகங்களும், 3440 உப அஞ்சல் நிலையங்களும், 536 முகவர் அஞ்சல் நிலையங்களும், 46 அஞ்சல் கடைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் திணைக்களத்தின் வழமையான சேவைகளான அஞ்சல் முத்திரை, முத்திரையிடப்பட்ட பொருட்கள், எழுதுகருவிகள், தொலைபேசி அழைப்புக்கள், பிரித்தானிய அஞ்சற் கட்டளை, தொகை அஞ்சல் பொருட்கள் பாரமெடுத்தல், விரைவு அஞ்சல் சேவை, அஞ்சல் தேசிய சேமிப்பு வங்கிச் சேவைகள், அஞ்சல் பெட்டி, அஞ்சல் பை சேவைகள், தந்திச் சேவைகள், தொலைநகல், போட்டோ பிரதிகள், பதிவஞ்சல், சாதாரண அஞ்சல் சேவைகள், உள்நாட்டு வெளிநாட்டு பொதிச் சேவைகள், காப்புறுதி அஞ்சல் சேவைகள், அஞ்சல் அறிமுக அட்டை, புதினப் பத்திரிகைகள் பதிவு செய்தல் என்பவற்றுடன் மேலும் பல நவீன காலத்திற்கு வேண்டிய புதிய பல சேவைகளும் ஆற்றப்பட்டு வருகின்றன.

இலங்கை அஞ்சல் துறை
வகைDepartment
சேவை வழங்கும் பகுதிஇலங்கை
முதன்மை நபர்கள்பந்துல குணவர்தன[1]
தொழில்துறைஅஞ்சலகம்
சேவைகள்அஞ்சலகம், அஞ்சல், வங்கி, விரைதூதர் சேவை
வருமானம் Rs 6.996 billion (2017)[2]
நிகர வருமானம் Rs 477,005 (2017)[2]
உரிமையாளர்கள்Government of Sri Lanka
பணியாளர்>80,000 (2017)[2]
தாய் நிறுவனம்Ministry of Post
இணையத்தளம்www.slpost.gov.lk

அஞ்சல் துறை வளர்ச்சி தொகு

இலங்கையில் 1500களில் ஆண்ட போர்த்துக்கேயர் காலத்திலும், 1600களில் ஆண்ட ஒல்லாந்தர் காலத்திலும் அஞ்சல் துறையில் போதிய வளர்ச்சிகளோ அபிவிருத்திகளோ காணப்படவில்லை. 1700களில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அஞ்சல் துறையில் துரித வளர்ச்சியும், அபிவிருத்தியும் நவீன தொடர்பாடல் உத்திகளும் ஏற்பட்டன.

வரலாறு தொகு

  • இலங்கையில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனியாரின் தகவல் பரிமாற்ற வசதிக்காக இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான ஒரு ஒழுங்கமைக்கப்படாத தபால் சேவை கெப்டன் ஏ. கென்னடி என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
  • 1804 தொடக்கம் 1817 வரை அஞ்சல் துறையின் தலைமைப் பொறுப்பிலிருந்த திரு. ஈ. பிளாட்டமன் 1815 இல் கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய ஆறு இடங்களில் அஞ்சல் அலுவலகங்களை ஆரம்பித்தார்.
  • 1832 இல் ஆசியாவிலேயே முதல் தடவையாக கொழும்புக்கும் கண்டிக்கும் இடையிலான குதிரை வண்டித் தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1838 இல் இச்சேவை கொழும்புக்கும் காலிக்குமிடையில் விஸ்தரிக்கப்பட்டது.
  • 1850 இல் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் பழக்கப்பட்ட தபால் புறாக்கள் மூலம் அவசர தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • ஏப்ரல் 1, 1857 இல் 6 பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரை வெளியிடப்பட்டது.
  • இலங்கையில் புகையிரதச் சேவை வந்ததன் பின்னர் முதல் தடவையாக 1865 இல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸவுக்கும் இடையிலான தபால் புகையிரத சேவை உருவாக்கப்பட்டது.
  • 1867 இல் தனியாருக்கான தபால் பை, தபால் பெட்டி சேவைகள் கொழும்பிலும் கண்டியிலும் ஆரம்பிக்கப்பட்டன.
  • ஆகஸ்ட் 22, 1872 இல் தான் முதன் முறையாக தபால் அட்டை வெளியானது.
  • 1873 இல் கொழும்புக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான காசுக் கட்டளை சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1877 இல் உள்நாட்டு காசுக்கட்டளைச் சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தும், ஏப்ரல் 1, 1877 இல் இலங்கை அகிலதேச அஞ்சல் சங்கத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து கொண்டதிலிருந்தும், தபால்துறை துரித அபிவிருத்தி காணத் தொடங்கியது.
  • 1880 இல் இலங்கை இந்திய காசுக்கட்டளை சேவை தொடங்கியது.
  • மே 1, 1855 இல் அஞ்சல் அலுவலக சேமிப்பு வங்கியும் ஆரம்பமானது.
  • 1893 இல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது.
  • ஆகஸ்ட் 19, 1895 இல் கொழும்பு பிரதம அஞ்சல் அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
  • 1913 தொடக்கம் 1923 வரை இலங்கையில் அஞ்சலதிபதியாக இருந்த திரு. எப். ஜே. ஸ்மித் அவர்கள் முதல்முறையாக 6 உப தபால் அலுவலகங்களை அக்மீமன, திவுலப்பிட்டிய, ஆனமடுவ, கிரியெல்ல, மூதூர், சிலாபத்துறை ஆகிய ஆறு இடங்களில் அமைத்தார்.
  • 1928 இல் இலங்கையின் முதலாவது வான்கடிதம் மாஸெல்ஸ் நகரத்திற்கு விமானஅஞ்சல் வாயிலாகப் பறந்தது.
  • 1936 இல் அஞ்சல் அறிமுக அட்டை விநியோகம் செய்யப்பட்டது. இங்கிலாந்திலிருந்து தபால்கள் விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தன.
  • 1947 இல் இலங்கை நாட்டவரான திரு. ஏ. இ. பெரேரா அஞ்சல் அதிபதியாக நியமனம் பெற்றார்.
  • 1949 இல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் வான் அஞ்சல் சேவை ஆரம்பித்தது.
  • 1958 இல் இலங்கை போக்குவரத்துச் சேவையுடன் இணைந்து தபால் பஸ்சேவை தினமும் ஓடத் தொடங்கின. இலங்கை மக்கள் அனைவரும் அஞ்சல்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக் கொண்டனர்
  • ஜனவரி 1 1967இல் இலங்கை முத்திரைப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • செப்டெம்பர் 1967 இல் முதல் முத்திரைக் கண்காட்சி மக்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.
  • 1972 இல் முத்திரைகளை வெளியிடும் பணி முத்திரைப் பணியகத்திற்கு வழங்கப்பட்டது.
  • பெப்ரவரி 3 2011 இல் இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் புகைவண்டி, சுற்றுலாத் துறையில் ஈடுபடுத்தப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அதன் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிடப்பட்டது. இதன் அகலம் 132 செ.மீற்றர். உயரம் 30 செ.மீற்றர். இது இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரை எனத் தபால்சேவை அமைச்சு அறிவித்துள்ளத

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. (PDF) http://documents.gov.lk/files/egz/2020/1/2159-12_E.pdf. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. 2.0 2.1 2.2 "Sri Lanka Post Annual report 2017" (PDF). www.parliament.lk. இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 31 March 2018.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_அஞ்சல்_துறை&oldid=3931134" இலிருந்து மீள்விக்கப்பட்டது