இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013

2013 மாகாணசபைத் தேர்தல்கள் (2013 Provincial Council elections) இலங்கையின் வடக்கு, மத்திய, மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கு 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்றன.[1] இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் இரண்டு மாகாண சபைகள் 2012 சூலை மாதத்தில் கலைக்கப்பட்டன. வடக்கு மாகாண சபைக்கு இம்முறையே முதற் தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.[2]

இலங்கையின் 7வது மாகாண சபைத் தேர்தல்

← 2012 செப்டம்பர் 21, 2013 2014 →

3 மாகாணசபைகளுக்கு 148 உறுப்பினர்கள்
வாக்களித்தோர்65.85%
  First party Second party Third party
 
தலைவர் மகிந்த ராசபக்ச ரணில் விக்கிரமசிங்க இரா. சம்பந்தன்
கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி
கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மொத்த வாக்குகள் 1,504,273 590,888 353,595
விழுக்காடு 55.66% 21.86% 13.08%
உறுப்பினர்கள் 77 28 30
சபைகள் 2 0 1

மாகாண வாரியாக வெற்றியாளர்கள். ஐமசுகூ: நீலம், ததேகூ: மஞ்சள், ஐதேக: பச்சை.

3 மாகாணசபைகளுக்கும் 148 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வடக்கிலிருந்து 38 உறுப்பினர்களும், மத்திய மாகாணத்திலிருந்து 58 பேரும், வடமேல் மாகாணத்திலிருந்து 52 பேரும் தெரிவாகினர். வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது.[3] மத்திய,[4] வடமேல்[5] மாகாண சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கைப்பற்றியது.

பின்புலம்

தொகு

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[6] இதன்படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[7][8] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[9]. வடமேல் மாகாண சபைக்கு முதலாவது தேர்தல் 1988 ஏப்ரல் 28 இல் இடம்பெற்றது.[10] 1988 சூன் 2 இல் மத்திய மாகாணத் தேர்தல் இடம்பெற்றது. இரண்டிலும் இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஆட்சியைக் கைப்பற்றியது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[6] 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.[9] இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தினார்.[11] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதுமே இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[12] இலங்கையின் சிங்களத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவர்களின் நீண்ட கால எதிர்ப்பினை அடுத்து, 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[9] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[9] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைக்கு 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. வட மாகாண சபை தேர்தல்கள் இடம்பெறவில்லை.

வேட்பு மனுக்கள்

தொகு

மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2013 சூலை 25 முதல் ஆகத்து 1 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[13] 210 வேட்புமனுக்கள் (பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் இருந்து 131 மனுக்களும், சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து 79 மனுக்களும்) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 201 மனுக்கள் (அரசியல் கட்சிகளின் 126 உம், சுயேட்சைக் குழுக்களின் 75 உம்) ஏற்றுக் கொள்ளப்பட்டன.[14] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன அனைத்துப் 10 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஏழு மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இல் இணைந்தும் போட்டியிடுகிறது.[15][16]

3 மாகாணசபைகளுக்கும் 148 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி வடக்கில் 7,14,488 பேரும், வடமேல் மாகாணத்தில் 17,54,218 பேரும், மத்திய மாகாணத்தில் 18,89,557 பேரும் தகுதி பெற்றனர். யாழ் மாவட்டத்தில் 426,703 பேரும், கிளிநொச்சியில் 68,589 பேரும், மன்னாரில் 72,420 பேரும், வவுனியாவில் 94,367 பேரும், முல்லைத்தீவில் 52,409 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

முடிவுகள்

தொகு
 
வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் 2013.
 
இலங்கையின் ஒன்பது மாகாணங்கள்

தேர்தல்கள் நடைபெற்ற மூன்று மாகாணசபைகளில் இரண்டை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும், ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கைப்பற்றின.

3 சபைகளுக்குமான கூட்டு முடிவுகள்

தொகு
கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள் சபைகள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 1,504,273 55.66% 77 2
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[22] 353,595 13.08% 30 1
  ஐக்கிய தேசியக் கட்சி 590,888 21.86% 28 0
சனநாயகக் கட்சி 91,523 3.39% 5 0
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[21] 52,409 1.94% 4 0
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[17] 29,285 1.08% 2 0
  மக்கள் விடுதலை முன்னணி 33,799 1.25% 1 0
  மலையக மக்கள் முன்னணி 24,913 0.92% 1 0
  சுயேட்சைக் குழுக்கள் 7,450 0.28% 0 0
ஜன செத்த பெரமுன 2,783 0.10% 0 0
இலங்கை மக்கள் கட்சி 1,842 0.07% 0 0
நமது தேசிய முன்னணி 1,495 0.06% 0 0
  ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 1,396 0.05% 0 0
ஐக்கிய இலங்கைப் பாரிய பேரவை 1,023 0.04% 0 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 912 0.03% 0 0
  சனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு 826 0.03% 0 0
தேசியத்துக்கான ஐக்கிய அமைப்பு 762 0.03% 0 0
சோசலிசக் கூட்டணி 726 0.03% 0 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 711 0.03% 0 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 554 0.02% 0 0
புதிய ஜனநாயக முன்னணி 504 0.02% 0 0
ருகுண மக்கள் கட்சி 300 0.01% 0 0
இலங்கை தொழிற் கட்சி 253 0.01% 0 0
புதிய சிங்கள மரபு 154 0.01% 0 0
சோசலிச சமத்துவக் கட்சி 101 0.00% 0 0
முசுலிம் விடுதலை முன்னணி 92 0.00% 0 0
செல்லுபடியான வாக்குகள் 2,702,569 100.00% 148 3
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 170,615
மொத்த வாக்குகள் 2,873,184
பதிவு செய்த வாக்காளர்கள் 4,363,252
வாக்காளர் வீதம் 65.85%

வட மாகாண சபை

தொகு

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:[23]

கூட்டணிகளும்
கட்சிகளும்
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 213,907 84.37% 14 37,079 81.57% 3 33,118 62.22% 3 28,266 78.56% 4 41,225 66.10% 4 2 353,595 78.48% 30
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 35,995 14.20% 2 7,897 17.37% 1 15,104 28.38% 1 7,209 20.04% 1 16,633 26.67% 2 0 82,838 18.38% 7
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 4,571 8.59% 1 199 0.55% 0 1,991 3.19% 0 0 6,761 1.50% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 855 0.34% 0 54 0.12% 0 187 0.35% 0 197 0.55% 0 1,769 2.84% 0 0 3,062 0.68% 0
  சுயேட்சைக் குழுக்கள் 1,445 0.57% 0 29 0.06% 0 49 0.09% 0 54 0.15% 0 327 0.52% 0 0 1,904 0.42% 0
  சனநாயக ஐக்கிய கூட்டமைப்பு 525 0.21% 0 61 0.13% 0 70 0.13% 0 170 0.27% 0 0 826 0.18% 0
  ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 300 0.66% 0 0 300 0.07% 0
இலங்கை மக்கள் கட்சி 292 0.12% 0 0 292 0.06% 0
  மக்கள் விடுதலை முன்னணி 56 0.02% 0 18 0.04% 0 11 0.02% 0 30 0.08% 0 173 0.28% 0 0 288 0.06% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 165 0.07% 0 23 0.04% 0 0 188 0.04% 0
சனநாயகக் கட்சி 111 0.04% 0 5 0.01% 0 11 0.02% 0 2 0.01% 0 41 0.07% 0 0 170 0.04% 0
சோசலிச சமத்துவக் கட்சி 101 0.04% 0 0 101 0.02% 0
ஜன செத்த பெரமுன 74 0.03% 0 2 0.00% 0 7 0.01% 0 5 0.01% 0 2 0.00% 0 0 90 0.02% 0
நமது தேசிய முன்னணி 87 0.16% 0 0 87 0.02% 0
இலங்கை தொழிற் கட்சி 16 0.01% 0 4 0.01% 0 7 0.01% 0 2 0.01% 0 3 0.00% 0 0 32 0.01% 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 6 0.01% 0 1 0.00% 0 6 0.02% 0 2 0.00% 0 0 15 0.00% 0
தேசிய ஐக்கிய அமைப்பு 4 0.01% 0 10 0.03% 0 0 14 0.00% 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 2 0.01% 0 6 0.01% 0 0 8 0.00% 0
முசுலிம் விடுதலை முன்னணி 3 0.01% 0 0 3 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 253,542 100.00% 16 45,459 100.00% 4 53,226 100.00% 5 35,982 100.00% 5 62,365 100.00% 6 2 450,574 100.00% 38
நிராகரிக்கப்பட்டவை 20,279 4,735 2,989 2,820 4,416 35,239
மொத்த வாக்குகள் 273,821 50,194 56,215 38,802 66,781 485,813
பதிவு செய்த வாக்காளர்கள் 426,813 68,600 75,737 53,683 94,644 719,477
வாக்காளர் வீதம் 64.15% 73.17% 74.22% 72.28% 70.56% 67.52%

வடமேற்கு மாகாண சபை

தொகு

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 6வது வடமேல் மாகாணசபைக்கான தேர்தல் முடிவுகள்::[24]

கூட்டணிகளும் கட்சிகளும் குருநாகல் புத்தளம் கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 540,513 69.05% 23 164,675 59.10% 9 2 705,188 66.43% 34
  ஐக்கிய தேசியக் கட்சி 169,668 21.67% 7 87,343 31.34% 5 0 257,011 24.21% 12
சனநாயகக் கட்சி 36,096 4.61% 2 10,018 3.60% 1 0 46,114 4.34% 3
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 17,130 2.19% 1 10,730 3.85% 1 0 27,860 2.62% 2
  மக்கள் விடுதலை முன்னணி 16,311 2.08% 1 3,313 1.19% 0 0 19,624 1.85% 1
ஜன செத்த பெரமுன 627 0.08% 0 1,112 0.40% 0 0 1,739 0.16% 0
  சுயேட்சைக் குழுக்கள் 850 0.11% 0 448 0.16% 0 0 1,298 0.12% 0
தேசிய ஐக்கிய அமைப்பு 232 0.03% 0 516 0.19% 0 0 748 0.07% 0
நமது தேசிய முன்னணி 541 0.07% 0 202 0.07% 0 0 743 0.07% 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 277 0.04% 0 98 0.04% 0 0 375 0.04% 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 192 0.02% 0 160 0.06% 0 0 352 0.03% 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 291 0.04% 0 0 291 0.03% 0
இலங்கை தொழிற் கட்சி 51 0.01% 0 23 0.01% 0 0 74 0.01% 0
ருகுண மக்கள் கட்சி 53 0.01% 0 17 0.01% 0 0 70 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 782,832 100.00% 34 278,655 100.00% 16 2 1,061,487 100.00% 52
நிராகரிக்கப்பட்டவை 36,562 16,653 53,215
மொத்த வாக்குகள் 819,394 295,308 1,114,702
பதிவு செய்த வாக்காளர்கள் 1,227,810 526,408 1,754,218
வாக்காளித்தோர் வீதம் 66.74% 56.10% 63.54%

மத்திய மாகாண சபை

தொகு

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 6வது மத்திய மாகாணசபைக்கான தேர்தல் முடிவுகள்::[25]

Alliances and parties கண்டி மாத்தளை நுவரெலியா கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 355,812 55.76% 16 135,128 59.99% 7 225,307 68.87% 11 2 716,247 60.16% 36
  ஐக்கிய தேசியக் கட்சி 200,187 31.37% 9 63,365 28.13% 3 67,263 20.56% 4 0 330,815 27.79% 16
சனநாயகக் கட்சி 37,431 5.87% 2 4,423 1.96% 0 3,385 1.03% 0 0 45,239 3.80% 2
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 18,787 2.94% 1 10,498 4.66% 1 0 29,285 2.46% 2
  மலையக மக்கள் முன்னணி 1,458 0.23% 0 23,455 7.17% 1 0 24,913 2.09% 1
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 11,137 1.75% 1 6,651 2.95% 0 0 17,788 1.49% 1
  மக்கள் விடுதலை முன்னணி 7,640 1.20% 0 3,937 1.75% 0 2,310 0.71% 0 0 13,887 1.17% 0
  சுயேட்சைக் குழுக்கள் 996 0.16% 0 578 0.26% 0 2,674 0.82% 0 0 4,248 0.36% 0
இலங்கை மக்கள் கட்சி 1,550 0.24% 0 0 1,550 0.13% 0
  ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் 1,096 0.34% 0 0 1,096 0.09% 0
ஜன செத்த பெரமுன 756 0.12% 0 161 0.07% 0 37 0.01% 0 0 954 0.08% 0
சோசலிசக் கூட்டணி 726 0.22% 0 0 726 0.06% 0
நமது தேசிய முன்னணி 466 0.07% 0 199 0.09% 0 0 665 0.06% 0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை 544 0.09% 0 49 0.02% 0 63 0.02% 0 0 656 0.06% 0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி 342 0.05% 0 66 0.03% 0 129 0.04% 0 0 537 0.05% 0
ஐக்கிய சோசலிசக் கட்சி 523 0.16% 0 0 523 0.04% 0
புதிய ஜனநாயக முன்னணி 504 0.08% 0 0 504 0.04% 0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி 117 0.05% 0 138 0.04% 0 0 255 0.02% 0
ருகுண மக்கல் கட்சி 167 0.03% 0 47 0.02% 0 16 0.00% 0 0 230 0.02% 0
புதிய சிங்கள மரபு 154 0.02% 0 0 154 0.01% 0
இலங்கை தொழிற் கட்சி 77 0.01% 0 49 0.02% 0 21 0.01% 0 0 147 0.01% 0
முசுலிம் விடுதலை முன்னணி 89 0.01% 0 0 89 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 638,097 100.00% 29 225,268 100.00% 11 327,143 100.00% 16 2 1,190,508 100.00% 58
நிராகரிக்கப்பட்டவை 39,148 15,336 27,677 82,161
மொத்த வாக்குகள் 677,245 240,604 354,820 1,272,669
பதிவு செய்த வாக்காளர்கள் 1,015,315 366,549 507,693 1,889,557
வாக்களிப்பு வீதம் 66.70% 65.64% 69.89% 67.35%

மேற்கோள்கள்

தொகு


  1. "Districts wise Details of Provincial Councils" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
  2. Ranga Sirilal; Shihar Aneez (5 சூலை 2013). "Sri Lanka to hold polls in ex-war zone for first time in 25 years". ராய்ட்டர்ஸ் இம் மூலத்தில் இருந்து 2013-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927174439/http://in.reuters.com/article/2013/07/05/sri-lanka-politics-elections-idINDEE96406B20130705. 
  3. "Provincial Council Elections 2013 - Northern Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2013-09-22.
  4. "Provincial Council Elections 2013 - Central Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-09-22.
  5. "Provincial Council Elections 2013 - North-Central Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2013-09-26. பார்க்கப்பட்ட நாள் 2013-09-22.
  6. 6.0 6.1 "Indo Sri Lanka Agreement, 1987". TamilNation.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Introduction". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
  8. "Amendments to the 1978 Constitution". Official Website of the Government of Sri Lanka. இலங்கை அரசு. Archived from the original on 2009-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
  9. 9.0 9.1 9.2 9.3 "North-East merger illegal: SC". LankaNewspapers.com. 17 October 2006. http://www.lankanewspapers.com/news/2006/10/8947.html. 
  10. database/ethnic conflict/time line.shtml "Ethnic Conflict of Sri Lanka: Time Line - From Independence to 1999". International Centre for Ethnic Studies9. {{cite web}}: Check |url= value (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  11. Ferdinando, Shamindra (10 செப்டம்பர் 2000). "I'm no traitor, says Perumal". ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2009-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090501173226/http://www.priu.gov.lk/news_update/features/20000912no_traitor.htm. 
  12. V.S. Sambandan (14 November 2003). "Sri Lanka's North-East to remain united for another year". த இந்து இம் மூலத்தில் இருந்து 25 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040225085959/http://www.hindu.com/thehindu/2003/11/14/stories/2003111411881500.htm. பார்த்த நாள்: 10 அக்டோபர் 2009. 
  13. "Nominations for North, NWP and Central from July 25 - Aug 1". சண்டே டைம்சு. 11 சூலை 2013 இம் மூலத்தில் இருந்து 2013-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130711084325/http://sundaytimes.lk/latest/35253-nominations-for-north-nwp-and-central-from-july-25-aug-1.html. 
  14. "Summary of Nomination Received and Rejected" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Contesting Political Parties and Independent Groups" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. 2013 இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் 21 இல் நடைபெறும், விக்கிசெய்திகள், ஆகத்து 2, 2013
  17. 17.0 17.1 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ உடன் கூட்டுச் சேர்ந்தும் போட்டியிட்டது.
  18. 18.0 18.1 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மாவட்டத்தில் சோசலிசக் கூட்டணியுடனும், ஏனையவற்றில் ஐமசுகூ உடனும் இணைந்து போட்டியிட்டது.
  19. 19.0 19.1 [[[சனநாயக இடது முன்னணி (இலங்கை)|சனநாயக இடது முன்னணி]] ஒரு மாவட்டத்தில் சோசலிசக் கூட்டணியுடனும், ஏனையவற்றில் ஐமசுகூ உடனும் இணைந்து போட்டியிட்டது.
  20. 20.0 20.1 லங்கா சமசமாஜக் கட்சி ஒரு மாவட்டத்தில் சோசலிசக் கூட்டணியுடனும், ஏனையவற்றில் ஐமசுகூ உடனும் இணைந்து போட்டியிட்டது.
  21. 21.0 21.1 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஏழு மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ உடனும் இணைந்து போட்டியிட்டது.
  22. The ததேகூ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலும் அக்கட்சியின் பெயரிலும் போட்டியிட்டது.
  23. "Provincial Council Elections 2013 : Northern Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  24. "Provincial Council Elections 2013 : North Western Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  25. "Provincial Council Elections 2013 : Central Province". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.