இலத்திபா நபிசாதா

ஆப்கானித்தானி உலங்கு வானூர்தி விமானி

இலத்திபா நபிசாதா (Latifa Nabizada) ஆப்கானித்தான் விமானப்படையில் ஆப்கானித்தான் உலங்கு வானூர்தி விமானியாவார். மில் எம்.ஐ.-17 பறக்கத் தகுதி பெற்று ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய முதல் இரண்டு பெண் விமானிகளில் இவரும் ஒருவர். 2013 வாக்கில், இவர் புதிய ஆப்கானித்தான் விமானப்படையில் கர்னலாக இருந்தார். ஆப்கானித்தான் இராணுவத்தில் நபிசாதாவின் பணி மற்ற பெண்களையும் இதில் சேர ஊக்குவித்தது.[1]

இலத்திபா நபிசாதா
Colonel Latifa Nabizada in 2013.
பிறப்பு1969கள்
காபுல், ஆப்கானித்தானின்
சார்பு ஆப்கானித்தான்
சேவை/கிளைஆப்கானித்தானின் வான்படை
சேவைக்காலம்
  • 1989–1996
  • 2001–present
தரம்கர்னல்
போர்கள்/யுத்தங்கள்ஆப்கானித்தானில் போர்

ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும் தொகு

1970 களில் நபிசாதா ஒரு நடுத்தர வர்க்கப் பகுதியில் வளர்ந்தார். இருப்பினும் இவரது தந்தை முஜாஹிதீன்ப் உறுப்பினராக குற்றம் சாட்டப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.[2] இன ரீதியாக உஸ்பெக்கியர், மேலும் "ஆழ்ந்த மதவாதி", இசுலாத்தை பின்பற்றுகிறார்.[2] இவரும் இவரது சகோதரி, இலலியுமா நபிசாதா ஆகிய இருவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஆப்கானித்தான் விமானப்படையில் விமானிகளாக மாற விரும்பி ஆப்கானித்தான் இராணுவ பள்ளியில் விண்ணப்பித்தனர்.[3] இவர்கள் "மருத்துவ அடிப்படையில்" பல முறை மறுக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக 1989இல் ஒரு மருத்துவர் அவர்களுக்கு சான்றிதழ் அளித்தபின்னர் அனுமதிக்கப்பட்டனர். [4] இராணுவத்தில் பெண்கள் சீருடைகள் தயாராக இல்லாததால், இரண்டு சகோதரிகளும் தங்கள் சொந்த சீருடைகளை உருவாக்க வேண்டியிருந்தது.[4] 1991ஆம் ஆண்டில், இவர்கள் இருவரும் உலங்கு வானூர்தி விமானப் பள்ளியில் பட்டம் பெற்றனர்.[5] ஆப்கானித்தான் உள்நாட்டுப் போரின்போது இவர்கள் போக்குவரத்துப் பணிகளில் பறக்கத் தொடங்கினர். [5] மற்ற பணிகள் தனித்தனியாக இருந்தாலும், இவர்கள் இருவரும் தங்கள் பணிகளின் போது, அடிக்கடி ஒன்றாகப் பறப்பார்கள். [5] அந்த நேரத்தில் சோவியத் மற்றும் ஆப்கானித்தான் இராணுவ விமானங்களுக்கு எதிராகமுஜாஹதீன் பயன்படுத்திய ஏவுகணைகளை இவர்கள் தவிர்க்க வேண்டியிருந்தது. [5] 1992இல் பொதுவுடைமை ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகும், புதிய முஜாஹதீன் அரசாங்கம் நபிசாதா சகோதரிகளை விமானிகளாக தனது சேவையில் வைத்திருந்தது. [5]

தலிபான் சகாப்தமும் நாடுகடத்தலும் தொகு

1996 இல், தாலிபான்கள் காபுலைக் கைப்பற்றியபோது, சகோதரிகள் தளபதி அப்துல் ரஷீத் தோஸ்தம் கண்டுபிடித்த பாதுகாப்பான இடமான மசார்-இ சரீப்புக்குச் சென்றனர்.[4] அங்கு இவர்கள் மறைந்திருந்த இடம் முன்னாள் விமானப்படை உறுப்பினரால் காட்டிக்கொடுக்கப்பட்டது. இவர்கள் தலிபான்களிடம் தங்கள் குடும்பத்துடன் பாக்கித்தானுக்கு தப்பி ஓடினர். [2] 1998ஆம் ஆண்டில், மசார்-இ சரீப் கைப்பற்றப்பட்டபோது, இவரும் இவருடைய சகோதரியும் உசுபெக்கிசுதானில் பாதுகாப்பான புகலிடம் தேசி தப்பிச் செல்லும் நோக்கத்துடன் ஒருஉலங்கு வானூர்தியைத் திருடினர், ஆனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேற முடியாததால் திரும்பி வந்தனர். [5] இந்த காலகட்டத்தில், தாலிபான்கள் சகோதரிகளைத் தேடி வந்தனர். இவருடைய மூன்று சகோதரர்களைக் கைது செய்து சித்திரவதை செய்தனர். அவர்கள் இவர்களது இருப்பிடத்தை வெளிப்படுத்தவில்லை. [5] இவரும் இவரது குடும்பமும் இறுதியாக பாக்கித்தானில் குடியேறினர். அங்கு இவர்கள் 2000 வரை பெசாவரைச் சுற்றியுள்ள அகதி முகாம்களில் வாழ்ந்தனர். பின்னர் மீண்டும் ஆப்கானித்தானுக்குச் செல்ல முடிவு செய்தனர்.[2] தலிபான் ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, நபிசாதாவின் குடும்பம் காபுலுக்குத் திரும்பியது, அங்கு சகோதரிகள் தங்கள் சேவைகளை புதிய ஆப்கானித்தானின் ஹமித் கர்சாய் அரசாங்கத்துக்கு வழங்கினர். மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட ஆப்கானித்தான் தேசிய இராணுவ விமானப் படையில் மீண்டும் உலங்கு வானூர்தி விமானிகளாக நியமிக்கப்பட்டனர்.[4]

தலிபானுக்கு பிந்தைய ஆண்டுகள் தொகு

2004 ஆம் ஆண்டில், இலத்திபா ஒரு மருத்துவரின் உதவியாளருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரது சகோதரியும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் தங்களது திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பறந்தனர்.[2] 2006இல், இரண்டு சகோதரிகளும் கருவுற்றனர். ஆனாலும் இவர்கள் கர்ப்ப காலத்தில் முடிந்தவரை பறக்கும் பணிகளில் இருந்தனர்.[2] இலத்திபாவுக்கு தனது மகள் மலாலாய் பிறப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இவரது சகோதரி இலலியுமா பிரசவத்தில் இறந்தார்.[4] சில மாதங்களுக்குப் பிறகு, நபிசாதா தனது சகோதரி இல்லாமல் முதல் முறையாக இராணுவத்தில் வேலைக்குத் திரும்பினார்.[2]

இவர் மீண்டும் பறந்ததால் 2013ஆம் ஆண்டில், இவரது குடும்பம் தலிபான்களால் மீண்டும் மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டது. எனவே இவர் காபுலில் உள்ள ஆப்கானித்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலக வேலைக்கு மாற்றப்பட்டார்.[6][7]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Annibale, Marcus (28 January 2013). "Women of Islam Soar in the Skies of South Asia". Flying. http://www.flyingmag.com/pilots-places/pilots-adventures-more/women-islam-soar-skies-south-asia. பார்த்த நாள்: 19 December 2016. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Sara, Sally (28 June 2013). "Meet Latifa Nabizada, Afghanistan's first woman military helicopter pilot". Mama Asia (ABC). http://www.abc.net.au/news/2013-02-12/latifa-nabizada-mama-asia-afghanistan/4489756. 
  3. Otitigbe, Jessica (29 May 2015). "Continue To Reach for Equality and Inclusiveness in All Rights". The Approach இம் மூலத்தில் இருந்து 9 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161109013415/http://approach.rpi.edu/2015/05/29/continue-to-reach-for-equality-and-inclusiveness-in-all-rights/. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "Latifa Nabizada - Afghanistan's First Woman of the Skies". BBC News. 19 June 2013. https://www.bbc.com/news/magazine-22943454. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 Moreau, Ron; Yousafzai, Sami (13 August 2013). "Afghanistan's Amelia Earhart". The Daily Beast இம் மூலத்தில் இருந்து 22 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161222084431/http://www.thedailybeast.com/witw/articles/2013/08/13/latifa-nabizada-afghanistan-s-first-female-pilot.html. 
  6. Graham-Harrison, Emma (3 September 2013). "Afghanistan's forces losing more than a few good men. And women". The Guardian. https://www.theguardian.com/world/2013/sep/03/afghanistan-forces-losing-men-women. 
  7. "Women defy Islamists to serve in Afghan army". The Day. 29 January 2014 இம் மூலத்தில் இருந்து 9 ஜூன் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170609055257/http://theday.co.uk/international/women-defy-islamists-to-serve-in-afghan-army. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்திபா_நபிசாதா&oldid=3759043" இலிருந்து மீள்விக்கப்பட்டது