இல்லம்

கேரளத்தில் நம்பூதிரி பிராமணர்களின் இல்லத்தைக் குறிப்பது

இல்லம் (Illam, /ˈɪləm/) மனை என்பது தமிழில் வீட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுச் சொல்லாகும். ஆனால் இல்லம் அல்லது மன, என்பது மலையாளத்தில் நம்பூதிரி பிராமணர் வீட்டை குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது. தென்னிந்தியாவின், கேரளத்தில் சாதிகள் அடிப்படையில் வீடுகளை வகைப்படுத்தவும் அடையாளப்படுத்தப்படுவதன் ஒரு பகுதியாக இ்வாறு குறிப்பிடப்படுகிறது. அந்தப் பாரம்பரியத்தின்படி நம்பூதிரி பிராமண குடும்பங்களின் பாரம்பரிய இல்லமான தராவாடைக் குறிக்க இல்லம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. [1]

1993 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான தேவசும் படம்பிடிக்கப்பட்ட வரிக்காசேரி மனை.

கேரளத்தின் மிக உயர்ந்த சாதியாக விளங்கிய நம்பூதிரிகள், தங்கள் பரம்பரையை பிரம்மாலயம் என்று குறிப்பிடுகின்றனர்.[2] சமசுகிருத மொழியில் " கட்டிடக்கலை " என்று பொருள்படும் வாஸ்து சாஸ்த்திரத்தின், அடிப்படையில் அவர்களின் இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. தற்போது மிகக் குறைவான இல்லங்களே தொடர்ந்து வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டுவருகின்றன. பெரும்பாலானவை அருங்காட்சியகங்கள், ஆயுர்வேத சுகாதாரப் பராமரிப்பு மையங்கள், தங்கும் விடுதிகள் போன்றவையாக மாற்றப்பட்டுள்ளன.

கட்டமைப்பு

தொகு

நம்பூதிரி இல்லத்தின் பாரம்பரிய அமைப்பானது நடுமுட்டம் ('நாடு' என்றால் நடு மற்றும் 'முட்டம்' என்றால் பூமி/தரை என்று பொருள்படும்) என்று அழைக்கப்படும் ஒரு திறந்தவெளி முற்றத்தைக் கொண்டதாக இருக்கும். இந்த இல்லங்கள் நாலுகெட்டு (முற்றத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு அறைகளால் சூழ்ப்பட்டது), எட்டுகெட்டு (மற்றொரு நாலுகெட்டோடு சேர்ந்த இல்லம்), பதினாலுகெட்டு (ஒரு முற்றத்தைச் சுற்றி நான்கு அடுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டது) போன்ற பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டவையாகும்.

பிரபலமான எடுத்துக்காட்டுகள்

தொகு

கேரளத்தில் நன்கு அறியப்பட்ட சில இல்லங்களில் சூர்யகலாடி மன (கோட்டயம்), வரிக்கசேரி மனை (பாலக்காடு), பூதேரி இல்லம் (ஃபெரோக்), எட்டிசேரி மன (கண்ணூர்), தேசமங்கலம் மன (தேசமங்கலம்), நென்மினி இல்லம் (குருவாயூர்), புன்னோர்கொட்டு அல்லது ஸ்வர்ணத்து மன (பழந்தோட்டம்), ஓலப்பமன்ன இல்லம் (வெள்ளிநெஞ்சி) மற்றும் பூமுல்லி மனா (பாலக்காடு) போன்றவை அடங்கும்.

மேலும் வாசிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லம்&oldid=4154112" இலிருந்து மீள்விக்கப்பட்டது