இளம்பிறை (இதழ்)

இதழ்

இளம்பிறை (ஒலிப்பு) இலங்கை, கொழும்பிலிருந்து 1960-70களில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழ் இலங்கை இசுலாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறிப்பிடத்தக்க இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் பல இசுலாமிய எழுத்தாளர்களை உருவாக்குவதில் இது கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளது.

ஆசிரியர் தொகு

  • ரஹ்மான்.

பணிக்கூற்று தொகு

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்' என்ற திருக்குறளை முழக்கமாகக் கொண்டு வெளிவந்தது. இதன் 1969ஆம் ஆண்டு மீலாத் மலரில் ஈழத்து இஸ்லாமிய இதழ்களைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளிவந்தது.

உள்ளடக்கம் தொகு

கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டரைகள், நூலாய்வுகள், கேள்வி பதில், வாசகர் கருத்து போன்ற பல்சுவை அம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருந்தது.

ஆதாரம் தொகு

தளத்தில்
இளம்பிறை
இதழ்கள் உள்ளன.
  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்பிறை_(இதழ்)&oldid=2993933" இலிருந்து மீள்விக்கப்பட்டது