இளவேட்டனார்
இளவேட்டனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகிய தொகை நூல்களில் காணக்கிடைக்கின்றன.
இவர் மதுரையில் வாழ்ந்தவர். அறுவை வணிகம் செய்தவர். துணி ஆடை பாவும் ஊடையுமாக இருப்பதை அறுத்து, மடித்து அழகாக அடுக்கி வணிகம் செய்தவர். இதனால் அவரை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் என அழைப்பர்.
திருக்குறளுக்கு "வாயுறை வாழ்த்து" என்னும் பெயர் இவராலேயே ஏற்பட்டது.
இவரின் பாடல்கள்
தொகுஇளவேட்டனாரின் பாடல்களாவன: (பாடல் எண்கள் குறிக்கப்பட்டுள்ளன)
- அகநானூற்றுப் பாடல்கள்: 56, 124, 230, 272, 302
- புறநானூற்றுப் பாடல்: 329
- குறுந்தொகைப் பாடல்: 185
- நற்றிணைப் பாடல்கள்: 33, 157, 221, 344
உசாத்துணை
தொகு- இரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் (2003), சென்னை: அருணோதயம்.