இ. தியாகலிங்கம்

தமிழ் எழுத்தாளர்

இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார்.[1] இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

இ. தியாகலிங்கம்
பிறப்பு1967
இலங்கை, காரைநகர்
புனைபெயர்காரைநகரான், காரையூரான்
தேசியம்நோர்வேஜியர்
காலம்1984– தற்போதுவரை
வகைசிறுகதை, புதினம், குறுநாவல், கவிதை
இணையதளம்
https://karainagaran.com/about/

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார்.

படைப்புகள் தொகு

 • அழிவின் அழைப்பிதழ் (1994) – புதினம்
 • நாளை (1999) – புதினம்[2]
 • பரதேசி (2008) – புதினம்
 • வரம் (2009) – குறுநாவல் தொகுதி
 • துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி
 • திரிபு (2010) – புதினம்[3]
 • எங்கே (2011) – புதினம்[4]
 • ஒரு துளி நிழல் (2014) - புதினம்
 • பாராரிக்கூத்துக்கள் (2014) – புதினம்[5]
 • மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – புதினம்[6]
 • சர்வ உரூபிகரம் (2016) – புதினம்
 • அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம்
 • வப்பு நாய் (2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
 • துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம்
 • காமமே காதலாகி (2016) – புதினம்
 • மொழியா வலிகள் பகுதி-1 (2018) – புதினம்
 • மொழியா வலிகள் பகுதி-2 (2018) – புதினம்
 • மொழியா வலிகள் பகுதி-3 (2018) – புதினம்
 • மொழியா வலிகள் பகுதி-4 (2018) – புதினம்
 • புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
 • நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு
 • இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி
 • மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
 • கடூழியம் (2021) – சிறுகதை, குறுநாவல் தொகுதி
 • உறைவி (2022) – புதினம்
 • ஒப்புரவு (2022) – புதினம்
 • பேடும் மிதிக்கும் (2023) -- புதினம்

பிற மொழிகளில் தொகு

நோர்வே மொழியில் தொகு

 • MENNESKEHETEN FALLER - Romanen, ISBN:979-8734658864
 • I MORGEN - Romanen, ISBN:979-8745895258
 • Allestedsnærværende - Romanen, ISBN:979-8735200659
 • Avhopper? - Romanen, ISBN:979-8734189160

ஆங்கிலத்தில் தொகு

 • Humanity is falling - Novel, ISBN:979-8733094632
 • Tomorrow - Novel, ISBN:979-8733623474
 • Omnipresent - Novel, ISBN:979-8737969943
 • Deserter? - Novel, ISBN:979-8739676320

விருதுகள் தொகு

செந்தமிழ் செல்லும் வழியெது பார்- கவிதை - இலங்கைத் தமிழ்ச் சங்கம் - விக்டோரியா, முத்தமிழ் விழா, 1993.05.23 அன்று பரிசு பெற்றது.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

 1. புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம், திண்ணை, சு. குணேஸ்வரன், செப்டம்பர் 4, 2009
 2. நாளை, நூலகம் திட்டம், பார்த்த நாள் 22 சூலை 2019.
 3. "திரிபு". கூகுல் புக்ஸ். https://books.google.co.in/books/about/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81.html?id=GsLpZwEACAAJ&redir_esc=y. பார்த்த நாள்: 18 சூலை 2019. 
 4. எங்கே பார்த்த நாள் 22 சூலை 2019
 5. பாராரிக்கூத்துக்கள் பார்த்த நாள் 22 சூலை 2019.
 6. மானிடம் வீழ்ந்ததம்மா, க._பூரணச்சந்திரன், மே 19, 2015, பார்த்த நாள் 22 சூலை 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._தியாகலிங்கம்&oldid=3699848" இருந்து மீள்விக்கப்பட்டது