ஈசா சிங்

ஈசா சிங் (Esha Singh) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 1 ஆம் தேதி இவர் பிறந்தார்.

ஈசா சிங்கு
Esha Singh
Esha Singh.jpg
துப்பாக்கி விளையாட்டு வீராங்கனை
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
குடியுரிமைINDIAN
பிறப்பு1 சனவரி 2005 (2005-01-01) (அகவை 16)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதுப்பாக்கிச்சுடும் விளையாட்டு

தன்னார்வ துப்பாக்கி சுடும் வீராங்கனையான இவர் செருமனி நாட்டின் சுகல் நகரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலக கோப்பைப் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய இளையோர் போட்டியின் 10 மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் பெண்கள் பிரிவிலும் கலப்பு 10மீட்டர் காற்றழுத்த துப்பாக்கி சுடும் அணி ) போட்டியிலும் போட்டியிட்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்புதொகு

ஈசா சிங், இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்து நகரில் பிறந்தார். ராலி கார்ப்பந்தய ஓட்டுனரான சச்சின் சிங் மற்றும் சிறீலதா ஆகியோர் இவரது பெற்றோர்களாவர்.

ஒன்பது வயதில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி விளையாட்டு அரங்கத்தின் துப்பாக்கிச் சுடும் மையத்திற்குச் சென்றது முதல் துப்பாக்கி சுடும் விளையாட்டில் ஆர்வமும் உற்சாகமும் வரப்பெற்றுள்ளார்.[2] காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவைத் தேர்ந்தெடுத்து பயிற்சிபெறத் தொடங்கினார். மகாராட்டிரா மாநிலம் புனேவில் உள்ள ககன் நரங்கின் பயிற்சி மையத்திற்குச் சென்று பயிற்சியைத் தொடர்ந்தார்.[3]

சாதனைகள்தொகு

  1. 13 வயதிலேயே கேரளாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் போட்டியிட்டு ஈசா சாம்பியன் பட்டம் பெற்றார்.[4] இப்போட்டியில் இளையோர், மூத்தோர் பிரிவு போட்டிகளிலும் ஈசா தங்கப் பதக்கங்களை வென்றார்.[5]
  2. 2019 ஆம் ஆண்டு தாய்பெய் நகரில் நடைபெற்ற 12 ஆவது ஆசிய காற்றழுத்த துப்பாக்கி சாம்பியன் பட்டப் போட்டியில் 10மீ காற்றழுத்த துப்பாக்கி சுடும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[6]
  3. 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய இளையோர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் பட்டப் போட்டியில் ஈசா வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.[7]
  4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் மைய பயிற்சி அணியில் ஈசா சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[8]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசா_சிங்&oldid=3108432" இருந்து மீள்விக்கப்பட்டது