ஈட்டி எறிதல் (விளையாட்டு)

ஈட்டி எறிதல் என்பது ஈட்டி அல்லது ஈட்டி போன்ற ஒன்றை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் ஒரு தட கள விளையாட்டு ஆகும். ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு தட களத்தில் ஓடிவந்து அந்த விசையுடன் எறிவர். ஒவ்வொருவருக்கும் மூன்று சுற்றுக்கள் தரப்படும். ஈட்டியின் முனை முதலில் நிலைத்தைக் குத்தினால், அந்த முனையில் இருந்து தூரம் கணக்கிடப்படும். ஈட்டி கிடையாக போய் விழுந்தால், ஈட்டியின் இறுதி முனையில் இருந்து தூரம் கணக்கிடப்படும். எந்தப் போட்டியாளர் அதிக தூரம் எறிகிறாரோ அவரே வெற்றியாளர்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
 1. Jukola, Martti (1935). Huippu-urheilun historia (in ஃபின்னிஷ்). Werner Söderström Osakeyhtiö.
 2. Kanerva, Juha; Tikander, Vesa. Urheilulajien synty (in ஃபின்னிஷ்). Teos. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789518513455.
 3. Vélez Blasco, Miguel. "Part III: Llançaments – Tema 12 Javelina" (PDF) (in கேட்டலான்). Institut Nacional d'Educació Física de Catalunya / Federació Catalana d'Atletisme. Archived from the original (PDF) on 2 April 2015.
ஈட்டி எறிதலில் பயன்படும் திறன்களாக 
 *தயாராகுதல்
 *ஓடி அணுகுதல்
 *ஈட்டியை இழுத்தல்
 *பாதங்களை குறுக்காக வைத்தல்
 *வலு நிலை
 *ஈட்டியை விடுவித்தால்
 *உடன்தெடர் நிலை.          போன்றவற்றை குறிப்பிடலாம்


ஈட்டிய எறிதலுக்கான ஓட்ட பாதையின் குறைந்த நீளம் 30m ஆகும்.

நிலப்படம் பிரதேச எல்லை கோடுகளுக்கு இடையிலான கோணம் 29°ஆகும்.

ஈட்டி எறிதலுக்கான விதிமுறைகள்...

✓ ஈட்டி பிடயை தனிக்கையால் பிடித்தல்.
✓ தோளுக்கும் கையின் மேற்பகுதிக்கும் மேலாக எறிதல்.
✓ தூக்கி போட கூடாது.
✓ உலோக முனை முதலில் நிலத்தை தொட வேண்டும்.
✓ ஈட்டி குறிப்பிட்ட கோண சிறையினுள் நிலம்பட வேண்டும்.
✓ நிமிடத்திற்குள் எத்தனிப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும்.
✓ ஈட்டி நிலம்படும் வரை மைதானத்தில் தரித்திருக்க வேண்டும்.


 • மேற்குறிப்பிட்டவற்றை ஒழுங்கான பயிற்றுவிப்பாளரின் முன்னிலையில் மேற்கொள்ளல் சிறந்தது.