ஈதர்நெட்

(ஈதர்நெற் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணினி வலையமைப்பில் ஈதர்நெட் நுட்பமே பெரும்பாலும் பாவிக்கபடுவதாகும். இது உலகம் எங்கும் நிலைபெற்றிருக்கும் ஈதர் என்ற இயற்பியற் (பௌதீகவியற்) கோட்பாட்டடிப்படையில் உருவாகியதாகும். இதில் ஐபிஎம் உருவாகிய டோக்கின் றிங்(டோக்கன் ரிங்) தொழில்நுட்பம் போன்று தரவு பொதி மோதற் தவிர்ப்பு நுட்பம் போன்றல்லாமல் இங்கே சுவிச் ஊடாக தரவு பொதி மோதல்கள் எதிர்பாக்கப்படுகின்றன. அதாவது இவ்வலையமைப்பில் எல்லாக் கணினிகளுமே எந்த நேரத்திலும் தரவுகளைப் பிறிதோர் கணினிக்கு அனுப்புவதற்கு தடையேதும் இல்லாததினால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் தரவுப் பொதிகளை அனுப்பினால் தரவுப் போதிகள் மோதிக்கொள்ளும் இவ்வாறான மோதல்கள் அடுத்து ஒர் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்புறம் அனுப்ப முயற்சிசெய்யும்.[1][2][3]

ஈதர்நெட்

பெரும்பாலான ஈதர்நெட் வலையமைப்பானது தற்பொழுது நொடிக்கு 100 மேகாபிட்ஸ் வேகத்தில் தரவைப் பரிமாற வல்லன இது தவிர ஜிகாபிட் ஈதர்நெட் வலையமைப்பானது நொட்டிக்கு 1 ஜிகாபிட்ஸ் தரவுகளைப் பரிமாற வல்லது. நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேக வலையமைப்பில் 8 வயர்களில் 4 வயர்கள் மட்டுமே தகவற் பரிமாற்றத்தில் ஈடுபடும் ஏனைய 4 வ்யர்களும் பயன்படாதவை. வயர்கள் 1, 2, 3, 6 ஆகியவையே பயன்படுவை ஏனையவை பயன்படாது. ஜிகாபிட்ஸ் ஈதர்நெட்டை குறுக்குமறுக்கான (Cross Over cable) ஊடாக இருகணினிகளை இணைத்தால் அவை நொடிக்கு 200 மெகாபிட்ஸ் வேகத்தில் தரவைப் பரிமாறும். இரு ஜிகாபிட்ஸ் ஈதர்நெட் கணினிகள் நொடிக்கு 100 மெகாபிட்ஸ் வேகமுள்ள சுவிச் ஊடாக இணைக்கப்பட்டால் 100 மேகபிட்ஸ் வேகத்திலேயே பரிமாறும் அதாவது வலையமைப்பில் எந்த சாதனம் மெதுவானதோ அந்த வேகத்திலே கணினி தரவுகளைப் பரிமாறும்.

மேலும் காண்க

தொகு

வலையமைப்பு நிலைமாற்றி

பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்

திசைவி


மேற்கோள்கள்

தொகு
  1. Ralph Santitoro (2003). "Metro Ethernet Services – A Technical Overview" (PDF). mef.net. Archived from the original (PDF) on December 22, 2018. பார்க்கப்பட்ட நாள் January 9, 2016.
  2. Xerox (August 1976). "Alto: A Personal Computer System Hardware Manual" (PDF). Xerox. p. 37. Archived (PDF) from the original on September 4, 2017. பார்க்கப்பட்ட நாள் August 25, 2015.
  3. Charles M. Kozierok (September 20, 2005). "Data Link Layer (Layer 2)". tcpipguide.com. Archived from the original on May 20, 2019. பார்க்கப்பட்ட நாள் January 9, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈதர்நெட்&oldid=4098624" இலிருந்து மீள்விக்கப்பட்டது