ஈரயோடின் நான்காக்சைடு

வேதிச் சேர்மம்

ஈரயோடின் நான்காக்சைடு (Diiodine tetroxide) என்பது I2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டை அயோடின் டெட்ராக்சைடு என்ற பெயராலும் இது அறியப்படுகிறது. அயோடினும் ஆக்சிசனும் சேர்ந்து அயோடின் ஆக்சைடு சேர்மமாக உருவாகும் இச்சேர்மம் ஒரு கலப்பு ஆக்சைடாகும். இச்சேர்மத்தில் அயோடின்(III) மற்றும் அயோடின்(V) ஆகிய இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளிலும் காணப்படுகிறது.

ஈரயோடின் நான்காக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அயோடோசில் அயோடேட்டு
இனங்காட்டிகள்
1024652-24-1 Y
InChI
  • InChI=1S/I2O4/c3-1-6-2(4)5
    Key: XHTWXUOEQMOFEJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 54579881
  • O=IOI(=O)=O
பண்புகள்
I2O4
வாய்ப்பாட்டு எடை 317.80 g·mol−1
அடர்த்தி 2.57
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

அயோடிக் அமிலத்தின் மீது சூடான செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தைச் சேர்த்து பலநாட்களுக்கு வினைபுரியச் செய்தால் ஈரயோடின் நான்காக்சைடு உருவாகிறது.[1]

3HIO3 -> I2O4 + HIO4 + H2O

ஈரயோடின் ஐந்தாக்சைடுடன் கந்தக அமிலத்தில் உள்ள அயோடின் அல்லது நீரில் கரைக்கப்பட்ட அயோடோசில் சல்பேட்டு ((IO)2SO4) ஆகியவை வினைபுரிந்தாலும் ஈரயோடின் நான்காக்சைடு உருவாகும்.:[2]

4(IO)2SO4 + 4H2O → I2O4 + I2 + 4H2SO4

இயற்பியல் பண்புகள்

தொகு

ஈரயோடின் நான்காக்சைடு மஞ்சள் நிறத்தில் சிறுமணிகளாலான தூளாகக் காணப்படுகிறது. 85 °செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையில் இது ஈரயோடின் ஐந்தாக்சைடு மற்றும் அயோடினாக சிதைகிறது:

5I2O4 → 4I2O5 + I2

இந்த செயல்முறை 135 ° செல்சியசு வெப்பநிலையில் இன்னும் வேகமாக இருக்கும். இது சூடான நீரில் கரைந்து அயோடேட்டு மற்றும் அயோடைடை உருவாக்குகிறது.[1] கட்டமைப்பு ரீதியாக, இச்சேர்மமானது அயோடைல் அயோடைட்டு O2I-OIO (அயோடின்(V,III) ஆக்சைடு) ஆகும்.[1] வளைந்த IVO2 அலகுகள் (I-O தூரங்கள் 1.80 மற்றும் 1.85 Å; ∠OIO கோணம் 97°) மற்றும் வளைந்த IIIIO2 அலகுகள் (IOIO2 தூரம்) 1.93 Å, OIO கோணம் 95.8°). இரண்டு அலகுகளும் I—O—I பாலங்கள் வழியாக இணைக்கப்பட்டு பல்லுருவ கோணல் மாணல் சங்கிலிகளை (I2O4)x உருவாக்குகின்றன.[1]

a = 8.483 b = 6.696 c = 8.333 Å மற்றும் β = 124.69°. அலகு செல் தொகுதி = 389.15 Å3. Z = 4. அடர்த்தி 2.57 மில்லிகிராம்/மீ3 என்ற அலகு செல் பரிமாண அளவுகளுடன் ஈரயோடின் நான்காக்சைடு இடக்குழு P21/c (குழு எண் 14) உடன் ஓர் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பைக் கொண்டுள்ளது.[2][3]

வினைகள்

தொகு

ஐதரோகுளோரிக் அமிலத்தை ஈரயோடின் நான்காக்சைடு ஆக்சிசனேற்றம் செய்கிறது:[4]

I2O4 + 8H+ + 8Cl -> 2ICl + 4H2O + 3Cl2

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Holleman-Wiberg inorganic chemistry. San Diego, Calif. London: Academic. 2001. pp. 465–466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0123526515.
  2. 2.0 2.1 Fjellvåg, Helmer; Kjekshus, Arne; Persson, Ingmar; Figgis, Brian N.; Liaaen-Jensen, Synnøve; Balzarini, Jan; Fransson, Bengt; Ragnarsson, Ulf et al. (1994). "The Crystal Structure of I2O4 and its Relations to Other Iodine--Oxygen-Containing Compounds.". Acta Chemica Scandinavica 48: 815–822. doi:10.3891/acta.chem.scand.48-0815. 
  3. Wu, Zhongqing; Kalia, Rajiv K.; Nakano, Aiichiro; Vashishta, Priya (28 May 2011). "First-principles calculations of the structural and dynamic properties, and the equation of state of crystalline iodine oxides I2O4, I2O5, and I2O6". The Journal of Chemical Physics 134 (20). doi:10.1063/1.3590278. பப்மெட்:21639450. 
  4. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1 January 1963. p. 77-78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057854-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரயோடின்_நான்காக்சைடு&oldid=4086627" இலிருந்து மீள்விக்கப்பட்டது