ஈரோடு மகேஸ்

ஈரோடு மகேஸ் ஒரு மேடை நகைச்சுவையாளர். இவர் கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகள் மூலம் பரவலாக அறியப்பட்டவர். தொடர்ந்து நகைச்சுவைத் துணுக்குகளைச் சொல்ல வல்லவர். சிந்திக்கக்கூடியவாறு சொல்வது இவரின் சிறப்பு.

ஈரோடு மகேஷ் ஈரோட்டில் 1981 ஆம் ஆண்டில் பிறந்தார் . பெற்றோர் திரு. சந்திரசேகரன் ; திருமதி .மீனாட்சி ஆவார்கள் . பள்ளிப் படிப்பை ஈரோட்டில் உள்ள ரயில்வே காலனி நகரவை மேல் நிலைப் பள்ளியில் பயின்றார் . தமிழ் இள நிலை பட்டப் படிப்பை மயிலாடுதுறை ஆதினக் கல்லூரியிலும் தமிழ் மேல் நிலை பட்டப் படிப்பை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி யிலும் பயின்றார் . தற்பொழுது தமிழில் முனைவர் (Phd.,) பட்டப் படிப்பைத் தொடர்கிறார் .

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_மகேஸ்&oldid=2975711" இருந்து மீள்விக்கப்பட்டது