இலங்கைத் தமிழர் இனப்படுகொலை

(ஈழத்தமிழர் இனவழிப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈழப் போராட்ட
காரணங்கள்
தனிச் சிங்களச் சட்டம்
பெளத்தம் அரச சமயமாக்கப்படல்
இலங்கைக் குடியுரிமைச் சட்டம்
கல்வி தரப்படுத்தல் சட்டங்கள்
திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்
அரச பயங்கரவாதம்
யாழ் பொது நூலக எரிப்பு
சிங்களமயமாக்கம்
வேலைவாய்ப்பில் இனப்பாகுபாடு
சிங்களப் பேரினவாதம்
ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்
அரச சித்திரவதை
பாலியல் வன்முறை
இலங்கைத் தமிழர் இனவழிப்பு
இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள்

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.[1] மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.[2] கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென கருதப்படுகிறது.

பின்புலம் தொகு

1948 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களப் பெரும்பான்மை அரசு பிரித்தானியா அரசிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்றது. அந்நாள்முதல் தமிழர்களின் மனித உரிமைகளை மீறி திட்டமிட்ட இனவழிப்பை நடத்திவருகிறது. சிங்கள மொழிக்கு, சிங்களவர்கள் பின்பற்றும் பெளத்த சமயத்துக்குச் சிறப்புரிமைகள் தந்து, தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்புக்களை அபகரித்து, திட்டமிட்ட குடியேற்றங்களை நிகழ்த்தி, நியாமற்ற முறையில் கைதுசெய்து சிறையில் அடைத்து தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கை பெரும்பான்மைச் சிங்கள அரசுகள் மீறின. இதன் உச்ச கட்டமாகத் தமிழர்கள் தொகை தொகையாகக் கொல்லப்பட்டனர்.

படுகொலைகள் தொகு

1958, 1977, 1983 ஆண்டுகளில் நடந்த இனக்கலவரங்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. ஈழப் போராட்டம் வெடித்த பின்பு வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டுவீசுதல், எறிகணை வீச்சு, நேரடித் தாக்குதல் போன்றவற்றின் மூலம் இதுவரை 100 000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

தமிழரை வெளியேற்றல் தொகு

இலங்கை சிங்களவர்களுக்கு உரியது, ஆகவே தமிழர் வெளியேற வேண்டும் என்பது ஒரு நெடுங்கால திட்டமாக சிங்கள தீவரவாத செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெரும்பான்மையானோர் 1950 களில் இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர். இலங்கைத் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடே எனவே அங்கு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. இலங்கை அரசு மேற்கொண்ட போர் உட்பட பல நடவடிக்கைகள் 1.3 மில்லியன் தமிழர்களை வெளியேற்றி விட்டது. தமிழ் முஸ்லீம்களுக்கும் தமிழருக்கும் இடையேயும், கிழக்கிலங்கைத் தமிழர் வடக்கிலங்கைத் தமிழருக்கு இடையேயும் விரிசல்களை ஏற்படுத்தி விட்டுள்ளது.[3]

தமிழர் படுகொலைகளை நியாயப்படுத்தல் தொகு

குறிப்பிட்ட தமிழர்களின் புலிகளுக்கான ஆதரவு பயங்கரவாதத்தை விளைவிக்கின்றது என்றும், போரில் புலிகளை அழிக்கையில் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்றும் இலங்கை அரசத் தரப்பால் கூறப்பட்டது. மேலும், புலிகள் பொது மக்களை கட்டாயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும், அதனாலேயே பெருமளவு மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டது.

இலங்கை அரசை விட விடுதலைப் புலிகள் பெரும் தொகையான தமிழர்களையும் சிங்களவர்களையும் கொன்று குவித்துள்ளார்கள். அதனால் அவர்களை எந்த முறையினாலும் அழிப்பது தவிர்க்கமுடியாது எனப்பட்டது.

தந்திரோபாய வழிகளின் தமிழினவழிப்புச் செய்தல் தொகு

இலங்கைத் தமிழ் பெண்களின் கட்டாயக் கருக்கலைப்பு தொகு

இலங்கைத் தீவில் தமிழர்களை முற்றிலுமாக அழுத்தொழிக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இலங்கை சிங்கள அரசு போரினால் மட்டுமன்றி பல்வேறு வழிகளில் தமிழர் இனத்தையும் வளர்ச்சியையும் முடக்கி வருகின்றது. இதற்கான பல்வேறு உத்திகளைத் திட்டமிட்டு மிகத் தந்திரோபாயமாக கையாண்டு வருகின்றது.

இலங்கையில் போர் நடைபெற்று வரும் வன்னிப் பகுதிகளில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.[4][5] போரினால் அவலப்பட்டு வவுனியா வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், சிங்களம் மொழி தெரியாதத் தமிழர்களிடம் சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டது.

இது தமிழர்களின் வருங்காலச் சந்ததியினர்களும் இலங்கை இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டம்மிட்ட நடவடிக்கையாகும். ஒரு இனத்தைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயலுமாகும்.

இலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை (வட மாகாண சபையின் தீர்மானம் தொகு

இலங்கையின் தமிழருக்கு எதிரான இனப்படுகொலை தீர்மானம் என்பது இலங்கை பிரித்தானியாவில் இருந்து சுதந்திரம் அடைந்தது முதல் இலங்கை அரசு தமிழருக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி வருகிறது என்பதை நிலைநிறுத்தியும், சுதந்திரமான அனைத்துலக விசாரணையையும் நீதியையும் வேண்டியும் பெப்ரவரி 10, 2015 அன்று வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒர் அதிகாரப்பூர்வ தீர்மானம் ஆகும். இந்தத் தீர்மானம் சட்டத்துறை வல்லுனர்கள், பேராசிரியர்கள், அரசியல் வல்லுனர்களின் உள்ளீடு பெறப்பட்டு, போதிய தரவுகள் திரப்பட்டு நிறைவேற்றியதாக இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து வட மாகாண சபை முதல்வர் க. வி. விக்னேஸ்வரன் நிறைவேற்றிய உரையில் குறிப்பிட்டார்.[6] இந்தத் தீர்மானம் தொடர்பாக தமிழர் அமைப்புகள், இலங்கையின் அரசு, கட்சிகள், வெளிநாடுகள் பலதரப்பட்ட கருத்துக்களை வெளியிடுள்ளன.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

செய்திகள் தொகு