ஈவினை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 6 கிமீ தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அச்செழுவுக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 14 கிமீ. இவ்வூரைச் சுற்றிலும், புன்னாலைக்கட்டுவன், அச்செழு, சிறுப்பிட்டி, வசாவிளான், நவக்கீரி ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.

நிறுவனங்கள்

தொகு

இவ்வூரில் ஈவினை கற்பக விநாயகர் கோயில், ஈவினை கண்ணன் கோயில், ஈவினை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற இந்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுடன் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றும் இங்கே உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈவினை&oldid=2854167" இலிருந்து மீள்விக்கப்பட்டது