ஈஸ்டர் முட்டை

ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட முட்டைகளே ஈஸ்டர் முட்டைகள் என்றழைக்கப்படுகின்றன.

உக்ரைனிய ஈஸ்டர் முட்டைகள் அல்லது பியாஸான்கி.

பேகன் நம்பிக்கையைச் சார்ந்தவர்களின் கொண்டாட்டத்தில், பூமியின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டை நம்பப்படுகிறது, இதனை தழுவி ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மறுபிறப்பின் அடையாளமாக முட்டைகளை ஏற்றனர்.[1]

பழங்கால வழக்கங்களில் சாயம் பூசப்பட்ட அடிக்கப்பட்ட அல்லது வண்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன, ஆனால் தற்கால வழக்கில், சாக்லெட் முட்டைகள், ஜெல்லி பீன்கள் போன்ற உண்ணக்கூடிய பொருட்களை உள்ளடக்கிய பிளாஸ்டிக் முட்டைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இந்த முட்டைகள், பெரும்பாலும் ஈஸ்டர் முயலால் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டு, ஈஸ்டர் அன்று காலையில் குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படும். இல்லையென்றால், அவை பொதுவாக புற்கள், வைக்கோல்களால் அலங்கரிக்கப்பட்ட பறவையின் கூடு போன்ற தோற்றத்தில் செய்யப்பட்ட கூடையில் வைக்கப்படுகின்றன.

தோற்றம் மற்றும் நாட்டுப்புறக் கதைகள்

தொகு
 
சொர்பியன் ஈஸ்டர் முட்டைகள்
 
போலிஷ் ஈஸ்டர் முட்டைகள்
 
ஃபேபெரெஜ் முட்டைகள் என்பவை, ரஷ்யாவைச் சார்ந்தா ஜார் மன்னர் அலக்ஸாண்டர் III -ஆல் அவருடைய மனைவி மரியா ஃப்யோடோரோவானவுக்கு பரிசளிப்பதற்காக உருவாக்கப்பட்டது [2]

முட்டையானது, ஒரு புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, ஒரு முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புது வாழ்வின் குறியீடாக இருக்கிறது.

பழங்கால ஜோரோஸ்டிரியன்கள், அவர்களுடைய புத்தாண்டு கொண்டாட்டமான நவ்ரூஸுக்காக முட்டைகள் மீது வண்ணம் பூசினார்கள், இந்த கொண்டாட்டம் வசந்தகால சம இரவுபகல் நாளில் நடக்கிறது. நவ்ரூஸ் பாரம்பரியம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு நடைமுறையிலிருந்தது. ஜோரோஸ்டிரியன்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தப்படும், ஹாஃப்ட் சீன் என்பதில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. பெர்ஸெபோலிஸ் சுவர்களில் உள்ள சிற்பங்களில், நவ்ரூஸ் கொண்டாட்டத்தில் மன்னனுக்கென மக்கள் முட்டைகள் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

யூத இனப் பண்டிகையான பாஸ்ஓவர் செடர் என்பதில், வேக வைக்கப்பட்ட முட்டை உப்பு நீரில் முக்கப்பட்டு, ஜெருசலேம் கோயிலில் பண்டிகைக் கால காணிக்கையாகத் தரப்படுகிறது.

கிறிஸ்தவ சமயத்திற்கு முந்தைய, சாக்ஸோன்ஸ் என்ற மதத்தினர் இயோஸ்டர் என்ற வசந்தகால தேவதையை வணங்கினார்கள், இந்த தேவதையின் விருந்து, வசந்தகால சம இரவு பகல் நாளில் மார்ச் 21 -ஆம் தேதியை ஒட்டி நடத்தப்படுகிறது. இந்த தேவதையின் விலங்காக, வசந்தகால முயல் கருதப்படுகிறது. இயோஸ்டர் முட்டைகள் மற்றும் முயல்களுடன் இணைந்தது என்று சிலர் கூறுகின்றனர், மற்றும் வசந்தகாலத்தின் பூமி மீண்டும் பிறப்பது முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது என்றும் நம்புகின்றனர்.[3] பீட் வெனராபிலிஸ் என்ற ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெனக்டிக்டைன் துறவி எழுதிய புத்தகங்களிலிருந்து இயோஸ்டர் தேவதையைப் பற்றி தெரியவருகிறது. ஆங்கிலோ-சாக்ஸோன்கள் இடையே நடந்த இயோஸ்டரின் பேகன் வழிபாடு முறைகள் இவர் எழுதத் தொடங்குவதற்கு முன்பே அழிந்து விட்டதாக பீட் என்பவர் கூறுகிறார். பீட் எழுதிய டி டெம்போரம் ரேஷனெ என்பது இந்த தேவதையுடைய பெயர் பண்டிகைக்கு சூட்டப்பட்டதை விவரிக்கிறது, ஆனால் முட்டைகளைப் பற்றி எந்த விவரங்களும் அதில் இல்லை.[4]

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாக்கப் கிரிம் போன்றவர்களின் கருத்துப்படி, ஜெர்மானிய தேவதையான ஆஸ்டாரா என்பவர் மூலமாகத்தான் ஈஸ்டர் முட்டைகள் பேகன் நம்பிக்கையுடன் இணைந்தது என்று நம்பப்படுகிறது.

ஜெர்மானிய சொல்லான இயோஸ்டர் என்பதிலிருந்து இந்த விழாவுக்கான ஆங்கிலப் பெயர் ஈஸ்டர் என்பது மருவி வந்தது. ஜெர்மானிய மொழிகளில் மட்டும் இயோஸ்டர் என்பதன் மருவுகள் விடுமுறையைக் குறிக்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள், ஹீப்ரூ பண்டிகையான கடந்து செல்லுதல் என்று பொருள்படும், பாஷ் என்பதிலிருந்து இதற்கான சொல்லப் பெற்றன. எடுத்துக்காட்டாக, ஸ்பானிஷ் மொழியில் பாஸ்குவா ; பிரெஞ்சில் பாக்வஸ் ; டச்சு மொழியில் பாசன் , கிரேக்கம், ரஷ்ய மறும் பெரும்பாலான கிழக்கத்திய பழமையான நாடுகளில், பாஷ்ஷா . இடைக்கால ஆங்கிலத்தில், இந்த சொல் பாஷ் என்றே அழைக்கப்பட்டன, இது நவீனகால ஒலிப்பு சார் சொற்களில் வைக்கப்பட்டுள்ளது. செர்பியன் உஸ்க்ர்ஸ் போன்ற சில மொழிகளில், உயிர்த்தெழுதல் என்று பொருள்படும் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

போப் கிரிகோரி தி கிரேட் என்ற மதகுரு மிஷனரிகளிடம், பழங்கால மத இடங்கள் மற்றும் பண்டிகைகளைப் பயன்படுத்துமாறு கூறினார் மற்றும் அவற்றை சாத்தியமான இடங்களில் கிறிஸ்தவ சடங்குகளுடன் சேர்க்குமாறு கூறினார்.[சான்று தேவை] கிறிஸ்துவின் மறுபிறப்பு கொண்டாட்டங்களானது, இயோஸ்டரின் பேகன் விருந்துடன் இணைப்பதற்கு பொருத்தமாக இருந்தது. மேலும் பல மரபுகளும் கிறிஸ்தவ விழாக்களுடன் சேர்க்கப்பட்டன.[5] மேலும், நாட்டுப்புற கதைகளில், முயல்களின் (பின்னர் ஈஸ்டர் முயல்கள் என்றழைக்கப்பட்டன) வளர்ச்சி (அவை எங்கு தன்னுடைய குட்டிகளை வளர்க்கின்றன) மற்றும் ப்ளோவர் பறவைகளின் கூடுகள் ஆகியவை தொடர்பாக இருந்த குழப்பங்கள் மூலமாக முயல்களையும் முட்டைகளையும் கூட இணைப்பது சாத்தியமாயிற்று.[6]

கிறிஸ்தவ அடையாளங்கள் மற்றும் நடைமுறைகள்

தொகு
 
உக்ரைனின், லிவிவ் நகரத்தில், பஸ்கா (ஈஸ்டர்) பண்டிகையில் ஒரு பரம்பரிய மதகுறி ஈஸ்டர் கூடைகளை ஆசீர்வதிக்கிறார்.

முட்டையானது, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது. முட்டையானது மறுபிறப்பின் குறியீடாகும்: செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.

மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது, அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.

பாரம்பரிய மற்றும் கிழக்கத்திய கத்தோலிக்க திருச்சபைகளில், பாஸ்கால் விரதத்தின் இறுதியில் ஈஸ்டர் முட்டைகள் சபை குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலிருந்து, ஈஸ்டர் கூடைகளும், தேவாலயத்துக்கு கொண்டு வரப்படும், அதில் ஈஸ்டர் முட்டைகள் மட்டுமின்றி, பஸ்கா, குலிச் அல்லது ஈஸ்டர் ரொட்டிகள் போன்ற பிற பஸ்கா உணவுகள் கொண்டுவரப்பட்டு அது சபைகுருவால் ஆசீர்வதிக்கப்படும்.

சில மரபுகளில், பாஸ்கால்டைடின்போது, ஈஸ்டர் முட்டைகளுடனான பஸ்கா வாழ்த்துக்கள் இறந்தவர்களுக்காகவும் கூறப்படுகிறது. பஸ்காவின் இரண்டாவது திங்கள் அல்லது செவ்வாய் அன்று, நினைவுகூறுதல் சேவையில் மக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட முட்டைகளை கல்லறைக்கு கொண்டுவந்து, மகிழ்ச்சியான பஸ்கா வாழ்த்தான, "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்", என்று இறந்துபோன தங்கள் உறவினர்களிடம் கூறுவார்கள்.

தெய்வீக புராணங்கள்

தொகு

குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் சார்ந்து, ஈஸ்டர் முட்டைகளின் தோற்றத்தை மேலே கூறப்பட்டவாறு விவரிக்கலாம். ஆனால் கிழக்கத்திய கிறிஸ்தவ மார்க்கத்தினர், கிறிஸ்துவின் கல்லறைக்கு வந்தபோது, மற்றொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்வதற்காக மகதலேனா மரியாள் வேகவைக்கப்பட்ட முட்டைகளைக் கொண்டு வந்ததாகவும், அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைப் பார்த்தவுடன் அந்த முட்டைகள் சிவப்பாக மாறி விட்டதாகவும் கூறுகின்றனர்.[7]

ஒரு வேறுபட்ட, ஆனால் முரண்பாடுகள் ஏதுமற்ற புராணத்தின்படி, மகதலேனா மரியாள் நற்செய்தியைப் பரப்புவதற்காக செய்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த மரபின்படி, இயேசு விண்ணுலகிற்கு சென்ற நாளுக்கு பின்னர், மரியாள் ரோம மன்னனிடம் சென்று, அவனை வாழ்த்தி, "இயேசு உயிர்த்தெழுந்தார்" என்று கூறினாள் என்றும், அங்கு மன்னன், மேசை மேல் இருந்த ஒரு முட்டையைச் சுட்டிக்காட்டி, "இந்த முட்டை சிவப்பாக மாறாத வரை, இயேசு உயிர்த்தெழுந்திருக்கவில்லை" என்று கூறினான். அவன் இவ்வாறு கூறிய உடனே, முட்டையானது இரத்த சிவப்பாக மாறியது.

அலங்கரித்தல் நுட்பங்கள்

தொகு
 
ஹனாக்கே கிராஸ்லைஸ், செக் குடியரசைச் சேர்ந்த ஹனா பகுதியினரின் ஈஸ்டர் முட்டைகள், மூங்கில்களால் அலங்கரிக்கப்பட்டவை
 
துளையிடப்பட்ட முட்டை, தூங்கும் அழகி

பல்கேரியா, ரஷ்யா, ருமேனியா, உக்ரைன், போலந்து மற்றும் பிற ஸ்லாவிக் நாடுகளின் நாட்டுப்புற வழக்கங்களின்படி ஈஸ்டர் முட்டைகள் புதிய வாழ்வின் பிரசித்திப் பெற்ற அடையாளமாகும். ஒரு பட்டிக் (மெழுகுப் பொருள்) செயல்முறையின் மூலம் அழகான, சிறந்த வண்ணங்கள் கொண்ட முட்டைகள் உருவாக்கப்படுகின்றன, இதற்கான பிரபலமான எடுத்துக்காட்டு, உக்ரேனியன் பியாஸான்கா. ரஷ்யன் இம்பீரியல் கோர்ட்டிற்காக, பேபெர்ஜ் வொர்க்ஷாப்கள் சிறப்பாக நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் இந்த பொருட்களில், சிறிய பறவைகள் அல்லது கப்பல்கள் போன்றவை மறைவாக வைக்கப்படுகின்றன. அல்பெர்ட்டாவில் உள்ள வெஜிரிவில்லே என்ற இடத்தில் 27 அடி (9 மீ) பியாஸான்கா சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

நட்பு, அன்பு அல்லது நல்வாழ்த்துக்களின் அடையாளமாக தரப்படுவதர்காக இவற்றை அலங்கரிக்கும் பல வழிமுறைகளும் மரபுகளும் உள்ளன. யுனைடெட் கிங்டமில் சில பகுதிகளில் (ஸ்காட்லாந்து மற்றும் வட கிழக்கு இங்கிலாந்து) ஈஸ்டர் ஞாயிறுகளில் உயரமான செங்குத்தான மலைகளிலிருந்து வண்ணம் பூசப்பட்ட ஈஸ்டர் முட்டைகளை உருட்டி விடும் பழக்கம் தற்போதும் காணப்படுகிறது. அமெரிக்காவில் இது போன்ற ஈஸ்டர் முட்டை உருட்டிவிடுதல் நிகழ்வு பெரும்பாலும் சமதளத்தில் நடத்தப்படுகிறது, இது ஒரு ஸ்பூனால் தள்ளி விடப்படுகிறது. ஈஸ்டர் முட்டை உருட்டி விடுதல், வெள்ளை மாளிகையின் கூடத்தில் நடத்தப்படும், அனைவரால் விரும்பப்படும் ஆண்டு நிகழ்வாக மாறி விட்டது. ஈஸ்டர் முட்டை வேட்டை என்பது, பொதுவானதொரு விழாக்கால நிகழ்வாக மாறி விட்டது, இதில் சிறுவர்கள் வெளிப்புறங்களில் (அல்லது தட்பவெப்பம் மோசமாக இருந்தால் உட்புறங்களில்) மறைத்து வைக்கப்பட்ட ஈஸ்டர் முட்டைகளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதில் யார் அதிகம் முட்டைகளைச் சேகரிக்கிறார்கள் என்ற போட்டியும் உண்டு.

ஈஸ்டருக்காக முட்டைகளை வேக வைக்கும்போது, அவற்றுடன் வெங்காய சருகுகளைச் சேர்த்து வேக வைப்பதன் மூலம் சிவப்பு நிறத்தைப் பெற முடியும். வெவ்வேறு நிறமான உல்லன் நூற்கண்டுகளுடன், வெங்காய தோலைச் சேர்த்து கட்டுவதன் மூலம் பல வகைகளில் நிறங்கள் பெறப்படுகின்றன. இங்கிலாந்திற்கு வடக்கே இவற்றை பேஸ் முட்டைகள் அல்லது பேஸ்ட் முட்டைகள் என்று அழைக்கின்றனர், இது இடைக்கால ஆங்கில சொல்லான பேஸ்க் என்பதிலிருந்து தோன்றியது. இவை பெரும்பாலும் ஒரு முட்டை உடைத்தல் போட்டிக்கு பின்னர் உண்ணப்படுகின்றன.

ஈஸ்டர் முட்டை மரபுகள்

தொகு
 
ஆஸ்திரியாவிலுள்ள வியன்னாவின் ஈஸ்டர் முட்டைகள்

முட்டை வேட்டையின்போது வீட்டினுள்ளும், வெளியேயும் வேகவைக்கப்பட்ட அல்லது செயற்கை முட்டைகளில் சாக்லெட் மிட்டாய்கள் நிரப்பப்பட்டு பல வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் குழந்தைகள் கண்டுபிடிப்பதற்காக மறைத்து வைக்கப்படுகின்றன.[1][8]

இந்த வேட்டை முடிந்தவுடன், அதிகப்படியான முட்டைகளைக் கண்டுபிடித்தவர்கள் அல்லது மிகப்பெரிய அல்லது மிகச்சிற முட்டையைக் கண்டுபிடித்தவர் என்ற வரிசையில் பரிசுகள் வழங்கப்படலாம்.[8]

உண்மையான முட்டைகளைக் கொண்டு முட்டை உடைத்தல் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.

வடக்கு இங்கிலாந்தில், ஈஸ்டர் காலங்களில், வேகவைக்கப்பட்ட பேஸ் முட்டைகள் எல்லாருக்கும் தரப்பட்டு, அவர்கள் மற்றவர்களுடைய முட்டைகளை உடைக்க வேண்டும் என்பது ஒரு விளையாட்டாக கடைபிடிக்கப்படுகிறது. இது "முட்டை தட்டுதல்", "முட்டை அமுக்குதல்" அல்லது "முட்டை ஜார்ப்பிங்" என்றழைக்கப்படுகிறது. உடையாத முட்டையை வைத்திருப்பவரே வெற்றியாளர். தோல்வியடைந்தவர்கள் உடைந்த முட்டையை உண்ண வேண்டும். ஈஸ்டரை முன்னிட்டு வருடாந்திர முட்டை ஜார்ப்பிங் உலக சாம்பியன்ஷிப் பீட்டர்லீ கிரிக்கெட் கிளப்பில் நடத்தப்படுகிறது. பல்கேரியா, ஹங்கேரி, குரோஷியா, லெபனான், மாசிடோனியா, ருமேனியா, செர்பியா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. அவர்கள் இதனை டுகாஞ்சி என்றழைக்கின்றனர். ஆஸ்திரியாவின் சில பகுதிகள், பவாரியா மற்று ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்து பகுதிகள் ஆகியவற்றில் இதனை ஆஸ்டெரீயர்டிட்சென் அல்லது இயர்பெக்கன் என்றழைக்கின்றனர். தெற்கு லூசியானாவில், இந்த நடைமுறைக்கு, போக்கிங் எக்ஸ்[9][10] என்று பெயர், இது சற்று வேறுபட்டது. காஜுன்ஸ் வழக்கத்தின்படி வெற்றிபெறுபவர் தோற்றவரின் முட்டையை ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் உண்ண வேண்டும்.

முட்டை உருட்டுதல் என்பதும், ஈஸ்டர் நாளில் முட்டைகளால் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய முட்டை விளையாட்டாகும். இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளில், ஈஸ்டர் காலத்தில் சிறுவர்கள் முட்டைகளை மலைகளிலிருந்து உருட்டு விடுவார்கள்.[11]

ஐரோப்பாவிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறியவர்களால் இது புதிய உலக நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.[11][12]

இந்த விளையாட்டை வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு விதமாக விளையாடுகின்றனர்.

முட்டை நடனம் என்பதும் ஜெர்மனியில் தோன்றிய ஒரு பாரம்பரிய ஈஸ்டர் விளையாட்டாகும், இதில் தரையில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளை உடைக்காமல் அதன் நடுவே நடனம் ஆட வேண்டும்.[13] இதற்கு யுகேவில் ஹாப்-எக் என்று பெயர்.

பேஸ் எக் நாடகங்கள் என்பவை மறுபிறப்பை கருப்பொருளாகக் கொண்ட பாரம்பரிய கிராம நாடகங்கள் ஆகும். இதில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே சண்டை நடக்கும், அதில் ஹீரோ கொல்லப்படுவார் பின்னர் மீண்டும் உயிர்த்தெழுவார், இது இங்கிலாந்தில் ஈஸ்டர் காலங்களில் நடத்தப்படுகிறது.

உணவாக பயன்படுத்துவது

தொகு
 
கேட்பர்ரியின் சாக்லெட் ஈஸ்டர் முட்டைகள்

மேற்கத்திய நாடுகளில், ஈஸ்டர் முட்டை மரபானது, லெந்து காலத்தின் இறுதி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. வரலாற்றில், வீட்டிலுள்ள எல்லா முட்டைகளையும் லெந்து காலம் தொடங்குவதற்கு முன்பாக பயன்படுத்தி விட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. மேற்கத்திய கிறிஸ்தவ மரபுகளின்படி, பாரம்பரியமான விரத நாட்கள் மற்றும் லெந்து காலத்தில் முட்டை தடைசெய்யபட்ட உணவாக இருந்தது (சில கிழக்கத்திய கிறிஸ்தவ திருச்சபைகளில் இந்த மரபு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது). இதேபோல, கிழக்கத்திய கிறிஸ்தவ மரபில், லெந்து விரத நாட்களில் இறைச்சி மற்றும் பால் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன, முட்டையும் "பால்பொருளாகவே" (ஒரு விலங்கின் ரத்தத்தைச் சிந்தாமல் அதிலிருந்து பெறப்படும் உணவு) கருதப்படுகிறது பாவ மன்னிப்பின் செவ்வாயில் இந்த விரிவான பான்கேக் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், லெந்து காலம் ஆரம்பமாகும், சாம்பல் புதன் கிழமைக்கு முன்பான செவ்வாய் ஆகும், இதனை பிரஞ்சில் "ஃபேட் செவ்வாய்" என்ற பொருள்பட மார்டி கிராஸ் என்றும் அழைக்கின்றனர், இந்த நாளில்தான் லெந்துகாலம் தொடங்குவதற்கு முன்பு கடைசியாக முட்டையை உண்பார்கள்.

பாரம்பரியமான திருச்சபையின்படி, கிரேட் லெந்து என்பது புதன்கிழமைக்கு பதிலாக சுத்தமான திங்கள் முதலே தொடங்குவதாக நம்பப்படுகிறது, இதனால் வீட்டிலுள்ள பால்பொருட்களை அடுத்த வாரம் வரைப் பயன்படுத்தலாம், அந்த வாரம் சீஸ்ஃபேர் வீக் என்றழைக்கப்படுகிறது. லெந்து காலத்தின்போது, கோழிகள் முட்டையிடுவதை நிறுத்துவதில்லை என்பதால், அவை அடைக்காக்கும்படி வைக்கப்படவில்லை என்றால், கடைகளில் அதிக அளவிலான முட்டைகள் இருப்பில் இருக்கும். இந்த கூடுதல் முட்டைகள், அழுகிவிடாமல் தவிர்ப்பதற்காக உடனடியாக உண்ணப்பட வேண்டும். எனவேதான் பஸ்காவில் முட்டைகள் உண்ணப்படுவது மீண்டும் தொடங்குகிறது.

முட்டைகளையும் உணவையும் வீணாக்காமல் தவிர்க்க அனைவரும் கட்டாயமாக முட்டையை உண்பது அவசியமாகிறது. இதற்காக, ஹார்னாஜோ (பொதுவாக ஈஸ்டர் அன்று அதை சார்ந்த நாட்களில் உண்ணப்படுகிறது) என்ற முட்டையை முதற்பொருளாக கொண்ட ஸ்பானிஷ் உணவு தயாரிக்கப்படுகிறது. ஹங்கேரியில், ஈஸ்டர் முட்டைகள் நறுக்கப்பட்டு உருளைக்கிழங்கு கேஸர்ரோல்களில் வைத்து உண்ணப்படுகின்றன.

கண் பார்வை இல்லாதோருக்கான ஈஸ்டர் முட்டைகள்

தொகு

ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் என்பவை, பலவகையான கிளிக் மற்றும் இரைச்சல் சத்தங்களை வெளிவிடும் முட்டைகளாகும், இவற்றை கண்பார்வை இல்லாத சிறுவர்கள் எளிதாக கண்டறிய முடியும்.

சில ஒலியெழுப்பும் ஈஸ்டர் முட்டைகள் ஒரே, அதிக சத்தமான ஒலியை எழுப்புகின்றன, சிலவற்றில் இனிமையான ஒலி வெளிவிடப்படுகின்றன.[14]

இதையும் பாருங்கள்

தொகு
 • ஸ்லாவிக் கலாச்சாரத்தின்படி முட்டை அலங்காரம்
 • ஃபேபெர்கி முட்டை
 • ஃபெஸ்டம் ஓவரம்
 • பாஸ்
 • பிஸானிக்கா (குரோஷியன்)
 • பிஸான்கா (போலிஷ்)
 • பியாஸ்ன்கா (உக்ரைனியன்)
 • ஷாம் எல் நெஸ்ஸிம்
 • ஸ்வெய்கோன்கா

குறிப்புதவிகள்

தொகு
 1. 1.0 1.1 வார்விஷைர் கவுன்டி கவுன்சில்: ஈஸ்டர் முட்டையின் வரலாறு பரணிடப்பட்டது 2010-11-22 at the வந்தவழி இயந்திரம் 2008-03-17 அன்று எடுக்கப்பட்டது
 2. முதல் கோழி முட்டை பற்றிய கட்டுரை http://www.mieks.com/Faberge2/1885-Hen-Egg.htm பரணிடப்பட்டது 2008-10-16 at the வந்தவழி இயந்திரம் -இலிருந்து
 3. சேனல் 4 - டைம் குழு
 4. பேடா வெனராபிலிஸ்
 5. இங்கிலாந்து துல்லியமாக: ஈஸ்டர் பரணிடப்பட்டது 2008-03-24 at the வந்தவழி இயந்திரம் 2008-03-14 அன்று எடுக்கப்பட்டது
 6. BBC - h2g2 - தி ஈஸ்டர் புன்னி
 7. கிரேட் லெந்து மற்றும் ஆசீர்வாத வாரத்தின் மரபுகள் [1] பரணிடப்பட்டது 2012-01-22 at the வந்தவழி இயந்திரம் நியூட்டனின் கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
 8. 8.0 8.1 "ஒரு ஏப்ரல் பிறந்தநாள் விழா", மார்க்ரெட் ரெமிங்டன் எழுதியது, தி புரிடான், ஏப்ரல்-செப்டம்பர் 1900.
 9. "If Your Eggs Are Cracked, Please Step Down: Easter Egg Knocking in Marksville". பார்க்கப்பட்ட நாள் 2008-03-20.
 10. "Pocking eggs or la toquette". பார்க்கப்பட்ட நாள் 2008-03-20.
 11. 11.0 11.1 http://inventors.about.com/od/estartinventions/a/easter_2.htm[தொடர்பிழந்த இணைப்பு] -இலிருந்து 2008-03-15 அன்று எடுக்கப்பட்டது
 12. ஈஸ்டர் முட்டைகள்: அவற்றின் தோற்றம், மரபு மற்றும் குறியீடுகள் பரணிடப்பட்டது 2008-05-17 at the வந்தவழி இயந்திரம் 2008-03-15 அன்று எடுக்கப்பட்டது
 13. வெனிஷியா நியால் (1971) ஈஸ்டரில் ஒரு முட்டை: ஒரு நாட்டுப்புற ஆய்வு , ப. 344
 14. Tillery, Carolyn (2008-03-15). "Annual Dallas Easter egg hunt for blind children scheduled for Thursday". The Dallas Morning News இம் மூலத்தில் இருந்து 2008-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080319015005/http://www.dallasnews.com/sharedcontent/dws/dn/latestnews/stories/DN-elfocus_15met.ART.North.Edition1.462ecab.html. பார்த்த நாள்: 2008-03-27. 

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Easter egg
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்டர்_முட்டை&oldid=3730926" இலிருந்து மீள்விக்கப்பட்டது