முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஈ. கிருஷ்ண ஐயர்

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

ஈ. கிருஷ்ண ஐயர் (ஆகத்து 9, 1897 - சனவரி 1968) இந்திய வழக்கறிஞரும், விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். பரதநாட்டிய வரலாற்றிலே ஒர் இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து அக் கலைக்கு பெரும் தொண்டாற்றியவர். சட்ட பூர்வமாக ஒழிக்கப்படும் நிலையிலிருந்த சதிர் ஆட்டத்திற்குப் பரதநாட்டியம் எனப் பெயர் சூட்டி அது மேலும் வளரச் செயற்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

தமிழ்ப் பிராமணக் குடும்பத்தில் சென்னை மாகாணம் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர்.[1] இவரது பெற்றோருக்கு 14 பிள்ளைகளில் இவர் 8வது பிள்ளை. ஆரம்பக் கல்வியை அம்பாசமுத்திரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, பின்னர் சென்னை கிருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று[1] சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக 1943 வரை பணியாற்றினார்.

1930களில் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்து விடுதலைப் போராட்டங்களில் பங்குபற்றினார்.[1] சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களைப் பிரபலப் படுத்தினார்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 Weidman, பக். 119
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._கிருஷ்ண_ஐயர்&oldid=2694445" இருந்து மீள்விக்கப்பட்டது