உடனொளிர்வு விளக்கு

மின்சாரத்தின் மூலம் அருட்டப்படுகின்ற பாதரச அயன்கள் புற ஊதாக்கதிர்களை வெளிவிடுகின்றன. இக் கதிர்கள் பொஸ்பர் போன்ற உடனொளிர் பூச்சுக்களில் படும்போது கண்ணுக்குப் புலப்படக்கூடிய ஒளியாக மாற்றப்படுகின்றது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடனொளிர்வு விளக்கு (fluorescent lamp) வகையாகும். ஆரம்பகால இவ்வகை விளக்குகள், ஆர்கன், அல்லது நியான் வாயுவுடன் பாதரச ஆவி நிரப்பப்பட்ட நீண்ட குழாய் அமைப்புக் கொண்டவை. இதனாலேயே இவ் விளக்குகள் பொதுவாக குழாய் விளக்குகள் (Tube Lights) எனப்படுகின்றன. இக் குழாய்களின் உட் பகுதியில் பொஸ்பர் பூச்சுப் பூசப்பட்டிருக்கும். மின்சாரத்தைப் பாய்ச்சும்போது குழாயின் முழு நீளத்திலிருந்தும் ஒளி வெளிவிடப்படுகின்றது.[1][2][3]

சில உடனொளிர்வு விளக்கு வகைகள்

உடனொளிர்வு விளக்குகள் கூடிய செயல் திறன் கொண்டவை. வெள்ளொளிர்வு விளக்குகளுடன் ஒப்பிடும்போது, சம அளவு மின்சாரத்தைப் பயன்படுத்திப் பல மடங்கு ஒளிச் சக்தியை இவற்றிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mercury-containing Lights and Lamps as Universal Waste". Washington State Department of Ecology. Archived from the original on 2016-06-04. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
  2. M. A. Laughton. Electrical Engineer's Reference Book Sixteenth Edition, Newnes, 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-4637-3, pp. 21–12.
  3. Mercury-Containing Light Bulb (Lamp) Recycling | Universal Waste | US EPA பரணிடப்பட்டது 2015-06-29 at the வந்தவழி இயந்திரம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடனொளிர்வு_விளக்கு&oldid=4164053" இலிருந்து மீள்விக்கப்பட்டது