உடுவில் சிவஞானப் பிள்ளையார் ஆலயம்

உடுவில் சிவஞானப் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள உடுவில் கிராமத்தில் உடுவில்-மானிப்பாய் வீதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவன், அம்பாள், நடராசர், நவக்கிரகம் மற்றும் பைரவர் ஆகிய பரிவாரமூர்த்திகள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை ஆனிப் பௌர்ணமியைத் தீர்த்தமாகக் கொண்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒன்பதாம், பத்தாம் நாட்களில் முறையே தேர், தீர்த்தத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.