உதவி:அண்மைய மாற்றங்கள்

அண்மைய மாற்றங்கள் என்னும் சிறப்புப் பக்கம் இத்தளத்தில் நடக்கும் சமீபத்திய மாற்றங்களை பட்டியலிடுகிறது. இந்தப் பக்கத்தில் அண்மையில் நடந்த பக்கத் தொகுப்புகள், பதிவேற்றங்கள், புதுப்பயனர் உருவாக்க பதிகைகள், போன்றவற்றைக் காணலாம். இதன் மூலம் தேவையற்ற தொகுப்புகளைக் கண்கானித்து அவற்றை அகற்ற முடியும்.

பக்க வடிவமைப்புதொகு

 

இந்த அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பக்கத்தின் பெயர், தேதி எத்தனை மணிக்கு மாற்றங்கள் நிகழந்தன, யாரால் நிகழ்த்தப்பட்டது போன்றவை அனனத்துத் தகவல்களும் அட்டவணைக்கு ஒத்த வடிவமைப்பில் இடப்பட்டிருக்கும்.

(வேறுபாடு) (வரலாறு) . . பக்கம்‎; நேரம் . . (மாற்றம் அளவு) . . பயனர் பெயர் (பேச்சு | பங்களிப்புகள் | தடு)

உதாரணம்,

(வேறுபாடு) (வரலாறு) . . உதவி:விக்கி குறியீடு‎; 09:09 . . (+1,187) . . Vinodh.vinodh (பேச்சு | பங்களிப்புகள் | தடு)

புதிய பக்கங்களுக்கு பக்கப்பயரின் முன்னால் பு என்ற குறியும் , சிறு தொகுப்புகளுக்கு சி யும், தானியங்கி தொகுபுகளுக்கு தாவும் தோன்றும்

தகவல்கள் சேர்க்கப்பட்டிருப்பின் கூட்டல் குறியும் நீக்கப்பட்டிருக்கும் கழித்தல் குறியும் தென்படும். குறிப்பிட்ட எண், எத்தனை பைட்டுகளுக்கு மாற்றங்கள் நிகழ்ந்த என குறிப்பிடும்

இயல்பிருப்பாக, தளத்தில் நிகழ்ந்த கடைசி 50 மாற்றங்கள்தான் இடப்பட்டிருக்கும், இதற்கு மேலான மாற்றங்களை காண 50 | 100 | 250 |500 என வரிசையில் தேவைக்கேற்றார்ப்போல் எத்தனை மாற்றங்களை காணவேண்டுமோ அதற்கேற்ற எண்ணை சொடுக்கவும். ஒரு வேளை, 500க்கு மேற்பட்ட மாற்றங்களைக் காண விரும்பினால், அண்மைய மாற்ற முகவரியில் உள்ள எண்ணை மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, 1000 மாற்றங்களைக் காண்பதற்கான முகவரியைக் கீழே காணலாம்.

 

வேறுபாடுகளைக் காணுதல்தொகு

மாற்றம் நடைபெற்ற பக்கத்திற்கு இடது புறம் (வேறுபாடு) (வரலாறு) என இரு இணைப்புகளைக் காணலாம். வேறுபாடு என்ற இணைப்பைச் சொடுக்கினால் முந்தைய பதிப்புக்கும் தற்போதைய பதிப்புக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் ஒரு பக்கத்தைக்காட்டும். வரலாறு என்பதைச் சொடுக்கினால், குறிப்பிட்ட பக்கத்தின் பக்க வரலாற்றுக்கு இட்டுச்செல்லும்

பயனர் இணைப்புகள்தொகு

பக்கத்தின் பெயருக்கு வலது புறம், மாற்றத்தைச் செய்த பயனர், அவருடைய பயனர் பக்கத்திற்கான இணைப்பு, அவருடைய பேச்சுப்பக்கத்திற்கான இணைப்பு, மற்றும் அவருடைய பங்களிப்புகளுக்கான இணைப்பு ஆகியவை இருக்கும். இவற்றைச் சொடுக்குவதன் மூலம் வேண்டிய பக்கத்திற்கு செல்லலாம்

மாற்றங்களை மறைத்தல்/காட்டுதல்தொகு

 

சிறிய தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | புகுபதிகை செய்த பயனர்களை மறை | மறை கவனிக்கப்பட்ட தொகுப்புக்கள் | என் தொகுப்புகளை மறை

மேலே இருப்பவையே இயல்பிருப்பாகும். இயல்பான தேர்வுகளாக இவையே இருக்கும்.

மறை அல்லது காட்டு என்பதைச் சொடுக்குவதன் மேலும் தகுந்த மாற்றங்களை இந்தப் பக்கத்தில் காணவோ மறையவோ செய்ய முடியும்

சிறிய தொகுப்புகள் - தொகுத்தலில் இது ஒரு சிறு தொகுப்பு என தெரிவு செய்யப்பட்ட அனைத்தும் சிறிய தொகுப்புகள் ஆகும். தானியங்கிகள் - இவை கணினி தானியங்கி நிரல்கள் செய்யும் தன்னியக்கத் தொகுப்புகள். கவனிக்கப்பட்ட தொகுப்புகள் - கவனிக்கப்படும் பக்கங்களில் நிகழும் தொகுப்புகள் என் தொகுப்புகள் - புகுபதிகை செய்த பயனர் செய்த தொகுப்புகள்

பொதுவாக, உங்கள் தொகுப்புகளையும் தானியங்கிகளின் தொகுப்புகளையும் சிறு தொகுப்புகளையும் மறைத்து விட்டுக் காண்பது போதுமானதாக இருக்கும். பிறரது மாற்றங்களைக் கண்காணித்து உதவும் விருப்பம் இருந்தால், சிறு தொகுப்புகளையும் காணலாம். எனினும், இது உங்கள் அண்மைய மாற்றப் பக்கத்தை நெரிசல் மிக்கதாக ஆக்கக் கூடும்.

பெயர்வெளிதொகு

இயல்பாக அனைத்து பெயர்வெளிகளில் நடக்கும் மாற்றங்களும் பட்டியலிடப்படும். ஒரு குறிப்பிட்ட பெயர்வெளியில் நடைபெற்ற மாற்றங்கள் மட்டும் வேண்டின் அதற்கேற்றார் போல் தெரிவுப்பெட்டியில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்க. எடுத்துக்காட்டாக, பேச்சுப் பக்கக் கருத்துகளை மட்டும் காண விரும்பினால், பெயர்வெளி என்று உள்ளதற்கு அடுத்த விரி பட்டியலில் பேச்சு என்பதைத் தெரிவு செய்யுங்கள். குறிப்பிட்ட ஒரு பெயர்வெளியைத் தவிர, மற்ற அனைத்தையும் காண விரும்பினால், அப்பெயர்வெளியைத் தேர்ந்தெடுத்த பிறகு, தெரிவைத் தலைகீழாக்கு என்பதைப் பயன்படுத்துங்கள்.

விருப்பத் தெரிவுகள்தொகு

புகுபதிகை செய்த பயனர்கள் அண்மைய மாற்றங்கள் பக்கத்தை இலகுவாகவும் மேம்பட்டும் காண, தங்கள் விருப்பத் தெரிவுகளைப் பயன்படுத்தலாம்.

 

மேம்படுத்தப்பட்ட அண்மைய மாற்றங்கள் என்பதைத் தவறாது தெரிவு செய்யவும். இதன் மூலம் அண்மைய மாற்றங்களை இலகுவாகக் காண முடியும்.

 

அண்மைய மாற்றங்கள் பயன்பாட்டை இலகுவாக்கதொகு

  • மின்வெட்டு, கணினியை விட்டு நகர்ந்து செல்ல வேண்டிய காரணங்கள் தவிர்த்து, சிறு சிறு தொகுப்புகளாக அடிக்கடிச் செய்யாமல் இயன்ற அளவு தொகுப்பு எண்ணிக்கைகளைக் குறைத்து ஒரே மூச்சில் பதிவேற்றலாம். புதிய கட்டுரைகளைத் தங்கள் கணினியில் ஒரு உரைக் கோப்பாக எழுதி மொத்தமாகப் பதிவேற்றுதுவதும் உதவும்.
  • பல கட்டுரைகளில் பகுப்பு மாற்றம், வார்ப்புரு சேர்ப்பு போன்ற பணிகளைச் செய்யும் போது சிறிய தொகுப்பு என குறியுங்கள். இதுவே, நூற்றுக் கணக்கில் அடிக்கடி செய்ய நேர்ந்தால் விக்கி தானுலாவி பயன்படுத்துங்கள்.
  • மறக்காமல் தங்கள் கணக்கில் புகுபதிந்த பிறகு தொகுப்புப் பணியில் ஈடுபடுங்கள்.
  • தெளிவான தொகுப்புச் சுருக்கம் அளியுங்கள்.