உதவி:பகுப்பு

அடிப்படை பெயர்வெளிகள் பேச்சு பெயர்வெளிகள்
0 (முதன்மை/கட்டுரை) பேச்சு 1
2 பயனர் பயனர் பேச்சு 3
4 விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு 5
6 படிமம் படிமப் பேச்சு 7
8 மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு 9
10 வார்ப்புரு வார்ப்புரு பேச்சு 11
12 உதவி உதவி பேச்சு 13
14 பகுப்பு பகுப்பு பேச்சு 15
100 வலைவாசல் வலைவாசல் பேச்சு 101
118 வரைவு வரைவு பேச்சு 119
710 TimedText TimedText talk 711
828 Module Module talk 829
பயன்படுத்தப்படாத பெயர்வெளிகள்
108 [[Wikipedia:Books|]] 109
446 [[Wikipedia:Course pages|]] 447
2300 [[Wikipedia:Gadget|]] 2301
2302 [[Wikipedia:Gadget|]] 2303
-1 சிறப்பு
-2 ஊடகம்

கட்டுரை ஆக்கம், நுட்ப கட்டமைப்பு, கொள்கைகள் போன்றே வகைப்படுத்தல் கூட ஒரு முக்கிய அம்சம். இந்தப்பக்கத்தின் நோக்கம் வகைப்படுத்தல் அணுகுமுறையை வரையறை செய்து விபரித்தல் ஆகும். அச்செயற்பாட்டில் அந்த அணுகுமுறையை விளங்கிகொண்டு மேம்படுத்தலும் உட்படும்.

பகுப்புகள் என்பது ஒரு கூற்றுடன் தொடர்புடைய பக்கங்களை வகைப்படுத்துதல் ஆகும். ஒரு பக்கம் எந்த பகுப்பில் அடங்கியுள்ளது எனது அந்த பக்கத்தில் அடியில் தோன்றும். அந்த பகுப்பை சொடுக்குவதன் மூலம், அந்தப் பகுப்புகளில் உள்ள பிற பக்கங்களின் பட்டியலை காணலாம்.

பகுப்புகளை இடுதல்

தொகு

ஒரு பக்கத்தை பகுப்புகளை இட [[பகுப்பு: ]] என்றவற்றிற்கு இடையில் பகுப்பின் பெயரை இடுதல் வேண்டும். பொதுவாக இதை பக்கத்தின் அடியில் இடுவதே வழக்கம். ஒரு பக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட பகுப்புகளில் இருக்கலாம். பல்வேறு பகுப்புகள் இட வேண்டுமோ அத்தனை முறை [[பகுப்பு: ]] என்ற கோர்வையை பயன்படுத்தவும். ஏற்கனவே உள்ள பகுப்புகளை சிறப்பு:Categories என்னும் சிறப்புப்பக்கத்தில் காணலாம். வேண்டிய பகுப்புகள் இல்லையெனில் தேவைக்கேற்ப புதுப்பகுப்புகளை உருவாக்கிக்கொள்ளவும்.

இதுவரை பகுக்கப்படாத பக்கங்களை சிறப்பு:Uncategorizedpages என்ற பக்கத்தில் காணலாம்.

பகுப்புகளுக்கு இணைப்பு

தொகு

ஒரு பகுப்பிற்கு நேரடி இணைப்பு தர விரும்பினால் [[:பகுப்பு: ]] என்றவாறு தருதல் வேண்டும்.

[[:பகுப்பு:விக்கி உதவி]] - பகுப்பு:விக்கி உதவி

: இடவில்லை என்றால் இணைப்பை தராது அந்த பக்கத்தை அந்த பகுப்பில் இட்டுவிடும்.

பகுப்புக்களை உருவாக்குதல்

தொகு

ஒரு உருவாக்கப்படாத பகுப்பை பக்கத்தில் இடும்போது, அது சிவப்பு இணைப்புகளில் தென்படும். இதற்கு அந்த பகுப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை என அர்த்தம். எனவே, அந்த சிகப்பு இணைப்பை சொடுக்கி அந்த பகுப்பை தேவையான தாய்ப்பகுப்பில் இடுவதன் மூலம் பகுப்பை உருவாக்க வேண்டும்.

உதாரணமாக, பகுப்பு:வேதியல் என இயற்றப்படாத பகுப்பை பக்கத்தில் இடுகிறோம் என வைத்துக்கொள்ளலாம். பக்கத்தை சேமித்து பார்க்கும் போது இது அடியில் சிகப்பாக தோன்றும். எனவே, இந்த பகுப்பை இயற்ற வேண்டின் அந்த பகுப்பை சொடுக்கி, தொகுத்தல் பெட்டிக்குள் இதன் தாய்ப்பகுப்பான பகுப்பு:அறிவியல் என இடுவதன் மூலம் இந்த பகுப்பை இயற்றலாம்.

இயற்ற வேண்டிய பகுப்புகளுக்கு காண்க: சிறப்பு:Wantedcategories என்பதில் பார்க்கலாம்.

பக்கங்களை மட்டுமல்லாது வார்ப்புருக்கள், படிமங்கள் போன்றவற்றையும் வகைப்படுத்த வேண்டும். அவற்றுக்கான சிறப்புப்பக்கங்களுக்கு மேற்கண்ட சிறப்புப்பக்கங்களில் Pagesஐ விடுத்து Images, Templates என சேர்த்துக்கொள்ளவும்.

பகுப்புகளை காணுதல்

தொகு

ஒரு பகுப்பில் அடங்கியுள்ள பகுப்புகளையும் துணைப்பகுப்புகளையும் அவற்றிலுள்ள பக்கங்களையும் மர வடிவில் காண சிறப்பு:CategoryTree என்ற பக்கத்தை பயன்படுத்தவும். இந்த பக்கத்தைப் பயன்படுத்த உலாவியில் ஜாவாஸ்கிரிப்ட் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

வழிகாட்டல்

தொகு

காண்க:

  1. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்
  2. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் செய்யக்கூடியதும் கூடாததும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதவி:பகுப்பு&oldid=3839320" இலிருந்து மீள்விக்கப்பட்டது