உத்தவ் தாக்கரே
உத்தவ் பால் தாக்கரே (பிறப்பு: சூலை 27, 1960) ஓர் இந்திய அரசியல்வாதியும், சிவ சேனாவின் தலைவரும் ஆவார். இவர் தற்போது மகாராட்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்[1][2]. இவர் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் மகனும் ஆவார். [3]
உத்தவ் தாக்கரே | |
---|---|
![]() | |
19வது மகாராட்டிர முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 28 நவம்பர் 2019 | |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முன்னவர் | தேவேந்திர பத்னாவிசு |
சிவசேனா தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 23 சனவரி 2013 | |
முன்னவர் | பால் தாக்கரே |
சாமனா பத்திரிகை ஆசிரியர் | |
பதவியில் சூன் 2006 – 28 நவம்பர் 2019 | |
முன்னவர் | பால் தாக்கரே |
பின்வந்தவர் | சஞ்சய் ராவத் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 27 சூலை 1960 பம்பாய், மஹாராஷ்டிரா, இந்தியா (தற்போது மும்பை) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிவ சேனா |
வாழ்க்கை துணைவர்(கள்) | ராஷ்மி தாக்கரே |
பிள்ளைகள் | 2 (ஆதித்யா தாக்கரே உட்பட) |
பெற்றோர் | பால் தாக்கரே மினா தாக்ரே |
இருப்பிடம் | மும்பை , மகாராட்டிரம், இந்தியா |
பணி | அரசியல்வாதி |
2002ஆம் ஆண்டு முதல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் இவர், மராத்தி தினசரி செய்திதாளான தி இந்துவை நிர்வகித்துவந்தார். இவரது கட்சி 2002இல் பெருநகர மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றது, அதன்பிறகு, சனவரி 2003இல் கட்சியின், செயல்தலைவராக நியமிக்கப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கைதொகு
இவர் ராஷ்மி தாக்கரே என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஆதித்யா மற்றும் தேஜாஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் ஆதித்யா, யுவசேனாவின் தலைவராக இருக்கிறார் மற்றும் இளைய மகன் தேஜாஸ் நியூயார்க் மாநிலத்தின் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.
புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர், மகாராட்டிராவின் பல்வேறு கோட்டைகள் மற்றும் வான்வழி காட்சிகளின், புகைப்படங்களை ஜஹாங்கிர் கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.[4][5]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Uddhav Thackeray, first of his clan, takes oath as chief minister of Maharashtra" (in en). India Today. 28 November 2019. https://www.indiatoday.in/india/story/uddhav-thackeray-maharashtra-chief-minister-1623468-2019-11-28. பார்த்த நாள்: 17 December 2019.
- ↑ "Maharashtra: NCP gets Home, Finance as Uddhav allocates portfolios". The New Indian Express. 5 January 2020. https://www.newindianexpress.com/nation/2020/jan/05/maharashtra-uddhav-thackeray-allocates-portfolios-to-ministers-six-days-after-cabinet-expansion-2085386.html. பார்த்த நாள்: 7 June 2020.
- ↑ "Up close and personal with Uddhav Thackeray". Rediff.com (22 April 2004). பார்த்த நாள் 25 April 2014.
- ↑ "Thackeray's new conquest". India Today. Mumbai. 26 January 2004. 25 April 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Vijapurkar, Mahesh (14 January 2004). "Uddhav Thackeray and those scenic forts". The Hindu. http://www.hindu.com/2004/01/14/stories/2004011401302200.htm. பார்த்த நாள்: 25 April 2014.