உத்ரா பத்வார்

உத்ரா பத்வார் (Uttara Padwar) மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்தியத் தொண்டுப் பணியாளராவார். இவருக்கு 2013 ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

உத்ரா பத்வார்
தேசியம் இந்தியா
பணிதொண்டுப் பணியாளர்
அறியப்படுவது2013இல் நாரி சக்தி விருது பெற்றவர்

வாழ்க்கை

தொகு

இவர்ர் மத்தியப் பிரதேசத்தில் "பிரயாஸ் சிக்சா சமிதி" க்கு தலைமை தாங்குகிறார். இந்த குழு பைகா மக்கள், கோண்டி மக்கள் மற்றும் அபுஜ்மரியாக்களுடன் இணைந்து செயல்படுகிறது. வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த பழங்குடி மக்களுக்கு இவரது குழு அதைப் போக்க முயற்சிக்கிறது.[1] இவர் குழந்தைகளுக்கு கற்பிக்கத் தொடங்கினார். இவரது சிறிய வகுப்பு "இராணி துர்காவதி பள்ளி" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட பள்ளியாக வளர்ந்தது.[2] உள்ளூரில் ஏற்படும் மரணத்திற்கான பொதுவான காரணங்களில் ஒன்று நெருப்பாக இருந்தது. ஏனெனில் மக்கள் உலர்ந்த புற்களில் மெத்தை ஒன்றை உருவாக்கி, பின்னர் நெருப்பின் அருகே தூங்கச் செல்வார்கள். பின்னர் அவர்களின் மெத்தை தீப்பிடிக்கும்போது அவர்கள் இறந்துவிடுவார்கள். ஒவ்வொரு குளிர்காலத்திலும் மக்களுக்கு சூடான ஆடையும் உணவும் வழங்க வேண்டியது அவசியமாகிறது. இவரும் இவரது குழுவும் "குளிர்கால கருவிகளை" வழங்கினர். கருவிகளில் சூடான உடைகள், கம்பளி மற்றும் போர்வைகள் அடங்கும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாயை சேமிக்க முடிந்தது.[3]

விருது

தொகு

2016ஆம் ஆண்டில் அனைத்துலக பெண்கள் நாள் அன்று நாரி சக்தி விருது பெற தேர்வு செய்யப்பட்டு [4] புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். இவருடன் சேர்த்து மேலும் பதினான்கு பெண்களும் ஏழு நிறுவனங்களும் அன்று கௌரவிக்கப்பட்டன.

பிரணப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோதியும் பெண்கள் அதிகாரத்திற்கு வரவேண்டியதன் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினர். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்வதால் அதிக எண்ணிக்கையிலான ஆண் குழந்தைகளின் பிரச்சினையை முகர்ஜி எடுத்துரைத்தார்.[5]

இவர் செய்த பணிக்காக ஊடகங்களால் இவர் பாராட்டப்பட்டார் [6] மேலும் இவர் மற்ற விருதுகளுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Nari Shakti Puraskar Awardees" (PDF). PIB.IN. 2016. பார்க்கப்பட்ட நாள் July 2020. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "She Inspires Us". WCD Ministry. 2016. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
  3. Indian, The Logical (2016-12-20). "6-Years-Old Girl Said "When I Feel Cold, I Hug The Dead Body And Sleep. It Does Not Trouble Me"". thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  4. "Meena Sharma - Jaipur Literature Festival". jaipurliteraturefestival.org/ (in ஆங்கிலம்). 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
  5. "Give women freedom to exercise choices at home, workplace:Prez". 2016-03-08. https://www.business-standard.com/article/pti-stories/give-women-freedom-to-exercise-choices-at-home-workplace-prez-116030800811_1.html. 
  6. Singh, Jyoti (16 Sep 2017). "Uttara Padwar, Social Activist !! Swayamsiddha".
  7. "Women's Achievers Awards 2016". July 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்ரா_பத்வார்&oldid=3479815" இலிருந்து மீள்விக்கப்பட்டது