உப்சாலா பொதுப் பெயர்ப்பட்டியல்

உப்சாலா பொது பெயர்ப்பட்டியல் (Uppsala General Catalogue, UGC) என்ற பெயர்ப்பட்டியலில்வட துருவத்தில் இருந்து தெரியக்கூடிய 12921 விண்மீன் திரள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அட்டவணை முதன்முதலில் 1973 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[1]. வடக்கில் நடுவரை விலக்கம் -02°30' மற்றும் 1.0 கட்டுப்படுத்தும் கலை கோண விட்டம் அல்லது 14.5 கட்டுப்படுத்தும் தோற்ற ஒளிப்பொலிவு கொண்ட அவசியமான அனைத்து விண்மீன் திரள்களையும் இப்பட்டியல் உள்ளடக்கியுள்ளது. இத்தரவுகளூக்கான முதன்மை ஆதாரமாக இருப்பது பாலோமர் வானாய்வக விண் அளக்கைத் துறையின் (POSS) வரைபட நிழ்ற்படங்களாகும். மேலும் இப்பட்டியலில் 1.0 கலை கோண விட்டத்திற்கு குறைவாக உள்ள விண்மீன் திறள்களும் பெயர்ப்பட்டியலில் 14.5 தோற்ற ஒளிப்பொலிவுக்கு அதிகமாக உள்ள விண்மீன் திறள்கள் மற்றும் விண்மீன் திறள் கொத்துகளூம் உள்ளடங்கியுள்ளன (CGCG).

Dwarf galaxy UGC 1281.[2]

இந்த அட்டவணையில் விண்மீன் திரள்கள் பற்றிய விவரிப்புகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல், பாரம்பரிய வகைப்பாட்டுத் திட்டங்கள் மற்றும் தட்டையான விண்மீன் திரள்களின் இருப்பிடக் கோணங்கள் ஆகியத் தரவுகள் இடம்பெற்றுள்ளன. அச்சில் காணப்பட்ட விண்மீன் திறள்களின் படங்களில் விண்மீன் திறள்களின் விட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இவை தவிர வகைபாடுகள், விவரிப்புகள் முதலியன அளிக்கப்பட்டு இயன்றவரையில் விண்மீன் திறள்களின் தோற்றத்தை துல்லியமாகக் கணக்கிட வழிசெய்தன. விண்பொருட்களை அடையாளம் காண்பதற்கு எது அவசியமாகத் தேவைப்பட்டதோ அவை மட்டுமே ஆள்கூறுகளின் துல்லியமெனக் கொள்ளப்பட்டது.

பின்னிணைப்பு

தொகு

உப்சாலா பொது பெயர்ப்பட்டியல் பின்னிணைப்பு சுருக்கமாக ( உபொபெபி) ஒன்றும் இப்பட்டியலுடன் இணைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Peter Nilson. "The Uppsala General Catalogue of Galaxies". http://nedwww.ipac.caltech.edu/level5/March02/Nilson/Nilson_contents.html. பார்த்த நாள்: 2011-01-30. 
  2. "A slashing smudge across the sky". www.spacetelescope.org. ESA/Hubble. பார்க்கப்பட்ட நாள் 2 December 2014.

இவற்றையும் காண்க

தொகு