உமா கிருஷ்ணசாமி

உமா கிருஷ்ணசாமி (Uma Krishnaswami) குழந்தைகளுக்கான பட புத்தகங்கள் மற்றும் புதினங்களை எழுதிய எழுத்தாளர் ஆவார். இவர் "சர்வதேச மற்றும் பன்முக கலாச்சாரங்களைக் கொண்ட இளம் வயது புனைகதை மற்றும் சிறுவர் இலக்கியங்களை விரிவாக்குவதில் குறிப்பிடத் தகுந்த நபராகக் கருதப்படுகிறார்." [1]

உமா கிருஷ்ணசாமி
2014 கைதர்ஸ்பர்க் புத்தக திருவிழாவில்
2014 கைதர்ஸ்பர்க் புத்தக திருவிழாவில்
தொழில்எழுத்தாளர்
காலம்1990கள்–தற்போதுவரை
வகைசிறுவர் இலக்கியம், அபுனைவு
இணையதளம்
umakrishnaswami.org

வாழ்க்கை தொகு

உமா கிருஷ்ணசாமி 1956 இல் இந்தியாவின் புதுதில்லியில் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் பட்டமும், இந்தியாவின் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். [2] 1979 ஆம் ஆண்டில், இவரும் இவரது கணவரும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர், அங்கு இவர் பட்டதாரி பட்டம் பெற்றார். [3]

விருதுகள் தொகு

  • 1997 சயின்டிஃபிக் அமெரிக்கன் [4]
  • 2013 குறுக்கெழுத்து புத்தக விருது (குழந்தைகள் இலக்கியம்) [5]
  • 2011 ஆசிய புத்தக விருது (புக் அன்கிள் அண்ட் மி)
  • 2017-2018 ஆசிய / பசிபிக் அமெரிக்க விருது [6]

நூலியல் தொகு

நாவல்கள் தொகு

  • ஸ்டெப் அப் டூ தெ பிளேட், மரியா சிங் (2017)
  • தெ கிராண்ட் பிளான் டூ ஃபிக்ஸ் எவ்ரிதிங் (2011)\
  • நேமிங் மாயா (2004)

மேற்கோள்கள் தொகு

  1. "Uma Krishnaswami and International Imaginings." Journal of Children's Literature. Fall 2006. p 60-65. Frederick Luis Aldama.
  2. http://www.childrenslit.com/childrenslit/mai_krishnaswami_uma.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-07. பார்க்கப்பட்ட நாள் 2021-03-16.
  5. "'Popular choice' ruled at book awards". Times of India. 7 December 2013. பார்க்கப்பட்ட நாள் 7 December 2013.
  6. "2017-2018 Awards Winners".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_கிருஷ்ணசாமி&oldid=3706030" இலிருந்து மீள்விக்கப்பட்டது