ஒரு புவியியல் இடத்தின் ஏற்றம் அல்லது உயர ஏற்றம் (elevation) என்பது ஒரு நிலைத்த புள்ளியில் இருந்து மேல் நோக்கிய அல்லது கீழ் நோக்கிய உயரம் ஆகும், இது புவியியல் தொடர்பான சொல் ஆகும். கடல் மட்டம் சார்பான அளவீடுகளுக்கான கணிதரீதியிலான கட்டமைப்பாகும். ஏற்றம் பிரதானமாக புவி மேற்பரப்பை நிலைத்த புள்ளியாக கருதும் அளவீடுகளுக்கு பயன்படுகிறது. புவி மேற்பரப்பில் மேலே அளவீடு செய்யப்படும் சந்தர்பங்கள் விமானப்பாதைக்கான உயரங்கள், விண்கலங்களின் சுற்றுபாதை உயரங்கள் என்பவற்றை குறிப்பிடலாம். அத்துடன் ஆழங்கள் அளக்க புவிபரப்பில் இருந்து கீழ் அளவுகள் எடுக்கப்படுகின்றன.

பூமியின் மேற்பரப்பு உயர அளவீட்டு வரைபடம் - பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட 71% நீரால் சூழப்பட்டுள்ளது.
பெர்நார்டினோ மலைகள் 8000 அடியினை குறிக்கும் (2438 மீட்டர்) ஒரு அடையாளம்.
இப் படம் ஒரு 2 நிமிட அட்சரேகை / கட்டம் நிலம் மற்றும் கடல்-தரை உயர அளவீட்டுக்கான இலத்திரனியல் தரவு தளங்கள் இருந்து NOAA மூலம் உருவாக்கப்படுள்ளது.

வரைபடங்கள் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு

தொகு
 
நாசா எஸ்ஆர்டிஎம் உயர அளவீடு மீது லாண்ட்சாட் படம், முன்புறமாக கேப் தீபகற்பம் மற்றும் கேப் ஆஃப் குட் ஹோப், தென் ஆப்ரிக்கா காண்பிக்கப்படுகிறது.
 
 பூமியின் மேற்பரப்பில் equirectangular திட்ட (நீர் மற்றும் பனி உட்பட) உயர அளவீட்டு வரைபடம், மெல்லிய பெறுமானங்கள் கூடிய உயர அளவீட்டை குறிக்கிறது, 8-bit நிழல் படம்.

உயர அளவீட்டினை சித்தரிக்கும் பிரதான வரைபடமாக மேற்பரப்பு வரைபடங்கள் அமைகின்றன, இவற்றிற்காக பொதுவாக சமநிலைக்கோடுகள் பயன்படுத்தபடுகிறது. புவியியல் தகவல் அமைப்பில் பொதுவாக இலத்திரனியல் உயர அளவீட்டு மாதிரிகள் ஒரு இடத்தின் மேற்பரப்பினை (இடவியல்பின்) குறிப்பதற்கு உதவுகின்றன,நிலப்பரப்பு பிரதிநிதித்துவதில் உயரத்திற்கான ஒரு ராஸ்டெர் (கட்டம்) தரவுத்தொகுப்பின் மூலமான இலத்திரனியல் நிலப்பரப்பு மாதிரிகள் புவியியல் தகவல் அமைப்பில் மற்றொரு முறையாகும்.

பிரதேசவியல்

தொகு

ஒரு மலையின் ஏற்றமானது பொதுவாக அதன் உச்சி வரை குறிக்கிறது. ஒரு குன்றின் ஏற்றமும் அதன் உச்சி வரை குறிக்கிறது. பள்ளத்தாக்கின் ஏற்றமும் பொதுவாக அதி தாழ் புள்ளியில் இருந்து எடுக்கப்பட்டு, அடிக்கடி பள்ளத்தாக்கு முழுவதும் அளவீடு எடுக்கப்படுகிறது.

அகில 1 கிலோமீட்டர் வரைபடம்

தொகு

இந்த வரைபடம் 30 arcseconds (சுமார் 1 கி.மீ.) இடைவெளியில் பூமியின் நிலப்பரப்பு உயரத்தினை விவரிக்கும் GTOPO30 யில் இருந்து தரவு பெறப்பட்டது. அது உயர அளவீட்டை குறிக்க சமநிலைக்கோடுகளுக்குப் பதிலாக நிறங்கள் பயன்படுத்தபட்டுள்ளது.

                       
                       
                       
                       
                       
                       
Each tile is available at a resolution of 1800 × 1800 pixels (approximate file size 1 MB, 60 pixels = 1 degree, 1 pixel = 1 minute)

நிலவியல்துறை

தொகு

நிலவியல்துறை என்பது புவியின் உயர மட்டங்களின் பரம்பலினை பற்றிய கற்கையாகும்.சிலசந்தர்பங்களில் இப் பத பிரயோகமனது செவ்வாய் அல்லது சுக்கிரன் போன்ற மற்ற கிரகங்களிலும் பயன்படுத்தப்படுத்தபடுகிறது.இது "hypsos" என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து உருவானதாகும் இதற்கு உயரம் என பொருள் .பெரும்பாலும் இது நிலத்தில் இருந்தான உயர அளவீட்டினை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ஆனால் திடமான புரபர்ப்புகளிற்கு கடல் மட்டத்திலிருந்தான அளவீடுகள் முழுமையான விளக்கத்தினை முன்வைக்க தேவையனவையாகும்.

 
பூமியின் Hypsography. பூமியின் உயரத்தில் இரண்டு சிகரங்கள் காட்டப்பட்டுள்ளன,ஒன்று கண்டங்கள், கடல் மற்றது என்று கவனிக்க.

வெப்பநிலை

தொகு
 
செங்குத்து தூரம் ஒப்பீடு

ட்ரோபோஸ்பியர், வெப்பநிலையானது உயரத்துடன் குறையும். இந்த இழப்பு விகிதம் அண்ணளவாக சுமார் 6.5 ° செல்சியஸ் / கிமீ ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-10-30. பார்க்கப்பட்ட நாள் 2016-04-22.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர_அளவீடு&oldid=3611722" இலிருந்து மீள்விக்கப்பட்டது