உயிரி நிலக்கீல்
உயிரி நிலக்கீல் என்பது பெட்ரோலியம் அல்லாத, புதுப்பிக்கவல்ல வளங்களிலிருந்து தயாரிக்கப்படும் மாற்று நிலக்கீலாகும்.
சீனி, வெல்லப்பாகு, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு மாப்பொருள், இயற்கை மரப்பிசின்கள், இயற்கை மரப்பால் ரப்பர் மற்றும் தாவர எண்ணெய்கள், செல்லுலோஸ், பாமாயில் கழிவுகள், தேங்காய் கழிவுகள், கடலை எண்ணெய்க் கழிவுகள், கனோலா எண்ணெய்க் கழிவுகள் உள்ளிட்ட கரிமக் கழிவுகளிலிருந்து உயிரி நிலக்கீல் பெறப்படுகிறது[1][2]. தார்ச்சாலைகள் இடுவதற்கு இந்த நிலக்கீல் பயன்படுத்தப்படுகின்றது. பெட்ரோலியம் அல்லாத மூலப்பொருள்களிலிருந்து இது பெறப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு உகந்தது எனக் கருதப்படுகிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sustainability in Pavement Technology (பக். 6)" (PDF). Archived from the original on 2008-07-20. பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2022.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Asphalt compositions and products comprising tall oil derived materials, and methods for making and using same".