உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம்
உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் (Russian Federal Space Agency, உருசியம்: Федеральное космическое агентство России), வழமையாக உரோசுகோசுமோசு (Роскосмос Russpace) [ஆங்கில சுருக்குப் பெயர்களாக FKA (ФКА) மற்றும் RKA (РКА)] உருசியாவின் விண்வெளி அறிவியல் திட்டத்திற்கும் பொதுவான விண்வெளியியல் ஆய்வுக்கும் பொறுப்புள்ள அரசு அமைப்பாகும். இது முன்னதாக உருசிய வான்பயண விண்வெளி நிறுவனம் (உருசியம்: Российское авиационно-космическое агентство) என அழைக்கப்பட்டு வந்தது.
உரோசுகோசுமோசின் சின்னம் | |
உரிமையாளர் | உருசியா |
---|---|
நிறுவியது | 1992 (முன்னதாக சோவியத் விண்வெளித் திட்டம், 1931-1991) |
தலைமையகம் | இஷ்செப்கின் சாலை 42, மாஸ்கோ |
முதன்மை விண்வெளி நிலையம் | பைக்கனூர் விண்வெளி நிலையம் பிளெசெட்ஸ்க் விண்வெளி நிலையம் |
மேலாளர் | ஒலெக் ஓசுடாபென்கோ |
செலவு | 169.8 பில்லியன் RUB ($5.6 பில்லியன்) (2013)[1] |
இணையதளம் | roscosmos |
இதன் தலைமையகம் மாஸ்கோவில் அமைந்துள்ளது. முதன்மையான திட்டக் கட்டுப்பாடு விண்பயண இயக்க மையம் அண்மையிலுள்ள கோரோலெவ் நகரில் அமைந்துள்ளது. காகரின் வானோடிகள் பயிற்சி மையம் (GCTC) இசுடார் சிட்டியில் அமைந்துள்ளது. விண்வெளி உந்துகைகளுக்கு கசக்ஸ்தானில் உள்ள பைக்கனூர் விண்வெளி நிலையமும் (பெரும்பாலான ஏவல்கள், ஆளுள்ளதும் ஆளில்லாததும், இங்கிருந்தே நிகழ்கின்றன) வடக்கு உருசியாவிலுள்ள பிளெசெட்ஸ்க் விண்வெளி நிலையமும் (Plesetsk Cosmodrome) (முதன்மையாக ஆளில்லா படைத்துறை பயன்பாடுகளுக்கு) பயன்படுத்தப்படுகின்றன.
அக்டோபர் 10, 2013 முதல் பொது இயக்குனராக ஒலெக் ஓஸ்டாபென்கோ பொறுப்பேற்றுள்ளார்.
உருசிய (சோவியத்) விண்வெளி வரலாற்றுக் காட்சிக்கூடம்
தொகுநபர்கள்
தொகு-
முதல் செயற்கைக்கோள், மனிதனை முதன்முதலாக விண்சுழல் பாதையில் இட்ட விண்கலம் மற்றும் முதலில் விண்வெளியில் நடந்த அலெக்சி லியோனொவ் பயணித்த விண்கலம் ஆகியவற்றின் வடிவமைப்பின் சூத்திரதாரியான செர்ஜி கோரொலையோவ்.
-
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனும் புவியை சுற்றிய முதல் மனிதனுமாகிய யூரி ககாரின்.
-
வானோடி வலன்டீனா டெரெஷ்கோவா முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்மணியாவார். சூன் 16, 1963 அன்று வோசுடாக் 6இல் விண்வெளிக்குப் பயணித்தார்.
விண்கலங்கள்
தொகு-
வஸ்தோக் விண்வெளியில் மனிதரை ஏற்றிச் சென்ற முதல் விண்கலம் ஆகும்
-
சோயூசு வரலாற்றில் மிக நீண்ட நாட்களாக சேவையில் இருக்கும் ஆளுள்ள விண்கல வடிவமைப்பு ஆகும்(1967– ); அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
-
புரோகிரசு மிக நீண்ட நாட்களாக சேவை புரியம் ஆளில்லா சரக்கு விண்கலமாகும் (1978– )
-
1986இலிருந்து 2001 வரை உலகைச் சுற்றிவந்த முதல் நிரந்தரமான ஆளுள்ள விண்வெளியிலுள்ள நிலையம் சோவியத்/உருசிய மீர்.
-
பியூரான் திட்டம் கைவிடப்பட்டதையொட்டி பயன்படுத்தாத விண்வெளியிடைப் போக்குவரத்திற்கான சோவியத் பியூரான் விண்கலம்.
ஏவுகை வாகனங்கள்
தொகு-
உருசிய விண்வெளித்துறையின் பெரும் எடைகளுக்கான கடினப் பயன்பாட்டுக்கு புரோட்டான் ஏவுகலங்கள் பயனாகின்றன.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Бюджет на 2013 год предполагает рекордное финансирование космонавтики. Spacecorp.ru. Retrieved on 2013-08-02.
வெளி இணைப்புகள்
தொகு- (உருசிய மொழியில்) RKA உருசிய முகப்புப் பக்கம் பரணிடப்பட்டது 2013-08-09 at the வந்தவழி இயந்திரம்
- RKA ஆங்கில முகப்புப் பக்கம் பரணிடப்பட்டது 2013-08-17 at the வந்தவழி இயந்திரம்
- உருசிய விண்வெளித் திட்டம்
- உருசிய விண்வெளித் திட்டத்தின் வருங்காலம் பரணிடப்பட்டது 2013-05-12 at the வந்தவழி இயந்திரம். Infographics from RIA Novosti.