உருளைக்கலன் கண்ணிமுடிச்சு

(உருளைக்கலன் தாங்குகயிறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உருளைக்கலன் கண்ணிமுடிச்சு அல்லது உருளைக்கலன் தாங்குகயிறு என்பது கப்பலில் ஏற்றியிறக்கும்போது பொருட்களை உயர்த்துவதற்குப் பயன்படும் ஒருவகை முடிச்சாகும். இப் பயன்பாடு காரணமாகவே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. பொருட்கள் நிலைக்குத்தாக இருக்கும்படி வைத்துத் தூக்குவதற்கும் இது எளிமையானதும், திறம்பட்டதுமான ஒரு முறையாகும். தூக்கவேண்டிய பொருளைச் சுற்றி ஒரு தாங்கு கயிற்றை உருவாக்குவதன் மூலம் இது செயற்படுகிறது. இது அப்பொருளைப் பக்கங்களிலும் அடியிலும் தாங்குகிறது.

உருளைக்கலன் கண்ணிமுடிச்சு
பெயர்கள்உருளைக்கலன் கண்ணிமுடிச்சு, உருளைக்கலன் தாங்குகயிறு
வகைகண்ணி
தொடர்புOverhand knot, வளைய முடி
ABoK
  1. 459, #2176 and #2177

கட்டும் முறை

தொகு
 
உருளைக்கலன் கண்ணிமுடிச்சுக் கட்டும் முறை
  • செயல் முனையில் போதிய அளவு இடம் விட்டுப் பெருவிரல் முடிச்சு அல்லது Overhand knot எனப்படும் முடிச்சைப் போடவேண்டும். முடிச்சின் நடுப்பகுதியில் கயிறு தன்னைத்தானே குறுக்கிடும் இடத்தில், கயிற்றைப் பிடித்து முதலாவது படத்தில் காட்டியுள்ளபடி முன்னோக்கி இழுக்கவேண்டும். இரண்டாவது படத்தில் காட்டியுள்ள இடம்வரை இழுத்து அப்படியே வைக்கவேண்டும்.
  • தூக்கவேண்டிய பொருளை நடுவில் குறுக்காக அமைந்துள்ள கயிற்றுப் பகுதிமீது வைக்கவேண்டும்.
  • கயிற்றின் செயல்பகுதியையும், நிலைப்பகுதியையும் பிடித்துக் கவனமாகத் தூக்கிப் படத்தில் காட்டியவாறு பக்கங்களிலும், அடிப்பகுதியிலும் தாங்குமாறு அமைக்கவேண்டும்.

உருளைக்கலன் கண்ணிமுடிச்சு மூலம் கட்டித்தூக்கும்போது அது அசைந்தாடினாலும் பொருள் நிலைக்குத்தாக நிற்கும். ஆனால், வலுவான குலுக்கம் ஏற்பட்டால் முடிச்சுக் குலைந்துவிடக்கூடும்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு


வெளியிணைப்புக்கள்

தொகு