உருவுமீன்

மீன் இனம்
உருவுமீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டினோப்டெர்ஜி
வரிசை:
கேராங்கிபார்மிசு
குடும்பம்:
எக்கினிடே
பேரினம்:
இனம்:
நாகிரேட்சு
இருசொற் பெயரீடு
எக்கினிசு நாகிரேட்சு
லின்னேயஸ், 1758
வேறு பெயர்கள் [2]
  • லெப்டெக்கினீசு நாகிரேட்சு (லின்னேயஸ், 1758)
  • எக்கினீசு லுனாட்டா பேங்கிராப்ட், 1831
  • எக்கினீசு விட்டேட்டா ரூப்பெல், 1838
  • எக்கினீசு பேசியேட்டா குரோனவ், 1854
  • எக்கினீசு பசுகா குரோனவ், 1854
  • எக்கினீசு கைரோமேசர் துமெரில், 1858
  • எக்கினீசு சேகாபெகிரேட்சு துமெரில், 1858
  • எக்கினீசு குயாகன் போயே, 1860
  • எக்கினீசு மெட்டாலிகா போயே, 1860
  • லெப்டெக்கினீசு பிளேவிவெண்ட்ரிசு சீயேலே, 1906

உருவு மீன் (Live sharksucker) என்பது ஒரு கடல் மீன் இனம் ஆகும். இது எக்கெனீடீ குடும்பத்தைச் சேர்ந்தது.[2][3][4][5][6]

பரவலும், வாழ்விடமும் தொகு

உருவுமீனானது கிழக்கு பசிபிக் கடல் தவிர, உலகெங்கிலும் அனைத்து வெப்பமண்டல மற்றும் மித வெப்ப மண்ட நீர்நிலைகளில் காணப்படுகிறது.[1][2] இந்த இனங்கள் கடற்கரைக்கு அருகாமையிலும், அதிகபட்சமாக 50 மீ (160 அடி) ஆழத்திலும் காணப்படுகின்றன. [7] [8]

உருவுமீனானது சுறாக்கள், திருக்கைகள், பெரிய எலும்பு மீன்கள், கடல் ஆமைகள், திமிங்கலங்கள், ஒங்கில்கள், கப்பல்கள் மற்றும் சில சமயங்களில் கடலடிமூழ்கு வீரர்கள் போன்ற பலவற்றுடன் ஓம்புயிராக ஒட்டிக் கொள்ளக்கூடியது. இதற்கு ஏற்ற உறிஞ்சு வட்டாகப் பயன்படுமாறு இதன் முதுகுத் துடுப்பு பரிணாமம் பெற்றுள்ளது. அதன் மூலம் வெற்றிடத்தை உருவாக்கி தற்காலிகமாக இது பிற மீன்களுடன் ஒட்டிக் கொண்டு பயணிப்பதாக அறியப்படுகிறது.[2]

விளக்கம் தொகு

 
எச்செனிஸ் நாக்ரேட்ஸ்

உருவுமீனான்கள் 110 cm (43 அங்) நீளம் வரை வளரக்கூடிய நடுத்தர அளவிலான மீன் ஆகும். [9] இதன் உடல் நீளமானதாக உள்ளது. இதன் கீழ் தாடை முன்னோக்கி நீண்டு உள்ளது (இதன் மேல் தாடையையும் தாண்டி முன்னோக்கி நீண்டுள்ளது).[3] இதன் தாடைகள், நாக்கு ஆகியவற்றில் வெல்வெட்டு பட்டைகள் போன்ற சிறிய மெல்லிய பற்களைக் கொண்டுள்ளன. [3] இந்த மீனை மற்ற மீன்களிலிருந்து வேறுபடுத்துவதற்கான முக்கிய தனித்துவமான அம்சமாக இதன் தலையில் அமைந்துள்ள நீள்வட்ட வடிவ ஒட்டுறுப்பு உள்ளது. இது மாற்றியமைந்த முதுகுத் துடுப்பாகும். அது இதன் தலையின் மேற்பகுதியிலிருந்து உடலின் முன் பகுதி வரை நீண்டுள்ளது.[3]

இந்த மீனின் உடல் நிறமானது நிறம் அடர் சாம்பல் முதல் அடர் பழுப்பு வரை இருக்கும். இதன் அடிப்புறம் கருமையாக இருக்கும். உடலின் இருபுறமும் நீளமான கரிய கோடு வால்வரை செல்கிறது. இதன் வால் துடுப்பு கருப்பு நிறத்திலும் மூலைகளில் வெள்ளையாகவும் இருக்கும்.

உணவுமுறை தொகு

இதன் பருவம் அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப (எதனுடனாவது ஓட்டி இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும்) உணவு மாறுபடும்.[சான்று தேவை]

இது குஞ்சாக இருக்கும் போது சில சமயங்களில் தூய்மையாக்கி மீனாக செயல்படுகிறது. மேலும் இதன் உணவில் சிறிய ஒட்டுண்ணி ஓடுடைய கணுக்காலிகள் மீன்களின் உடலில் வாழும், கோபேபாட்கள், ஐசோபாட்கள் ஆஸ்ட்ராகோட்கள் போன்றவை உள்ளன . [10]

சுறாமீன் போன்றவற்றுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும்போது சுறா வேட்டையாடி உண்ணும்போது கிடைக்கும் உணவுக் கழிவுகள் அல்லது ஒட்டிக்கொண்டு பயணிக்கும்போது அதன் நுண்ணிய பற்கள் வழியாக தண்ணீரை வடிகட்டுவதன் மூலம் பிடிபடும் சில சிறிய உணவுகளை உண்கிறது. [11]

ஒட்டிக்கொள்ள ஏதும் இல்லாத நிலையில், கரைக்கு அருகில் இருக்கும் பிற உயிர்களுடன் சேர்ந்து கொள்கிறது. அப்போது இதன் உணவானது சுதந்திரமாக வாழும் ஓடுடைய கணுக்காலிகள், பீலிக்கணவாய் மற்றும் சிறிய மீன்கள் போன்றவை ஆகும். [11]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Collette, B.B.; Curtis, M.; Williams, J.T.; Smith-Vaniz, W.F.; Pina Amargos, F (2015). "Echeneis naucrates". IUCN Red List of Threatened Species 2015: e.T190393A76649216. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T190393A15603110.en. https://www.iucnredlist.org/species/190393/76649216. {{cite iucn}}: error: |doi= / |page= mismatch (help)
  2. 2.0 2.1 2.2 2.3 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Echeneis naucrates" in FishBase. August 2019 version.
  3. 3.0 3.1 3.2 3.3 "Slender Suckerfish, Echeneis naucrates (Linnaeus, 1758) - Australian Museum". australianmuseum.net.au.
  4. Slender Suckerfish, Echeneis naucrates (Linnaeus, 1758). australianmuseum.net.au
  5. Sharksucker பரணிடப்பட்டது 2016-01-04 at the வந்தவழி இயந்திரம். flmnh.ufl.edu
  6. "FLMNH Ichthyology Department: Sharksucker". ufl.edu. 2017-05-09. Archived from the original on 2016-01-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-28.
  7. Cervigón, F., R. Cipriani, W. Fischer, L. Garibaldi, M. Hendrickx, A.J. Lemus, R. Márquez, J.M. Poutiers, G. Robaina and B. Rodriguez, 1992.
  8. al Sakaff, H.; M. Esseen (1999). "Occurrence and distribution of fish species off Yemen (Gulf of Aden and Arabian Sea)". Naga ICLARM Q. 22 (1): 43–47. http://pubs.worldfishcenter.org/Naga/na_2193.pdf. பார்த்த நாள்: 2016-11-18. 
  9. Lieske, E. and R. Myers (1994). Collins Pocket Guide. Coral reef fishes. Indo-Pacific & Caribbean including the Red Sea. Harper Collins Publishers.
  10. Sazima, I.; R.L. Moura; M.C.M. Rodrigues (1999). "Juvenile sharksucker, Echeneis naucrates (Echeneidae), acting as a station-based cleaner fish". Cybium 23 (4): 377–380. https://www.researchgate.net/publication/275963680. 
  11. 11.0 11.1 security. "DORIS - FFESSM - Biologie et plongée - Faune et flore sous-marines et dulcicoles". ffessm.fr.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவுமீன்&oldid=3545200" இலிருந்து மீள்விக்கப்பட்டது