உரோமைப் பேரரசர்கள்
உரோமைப் பேரரசர்கள் கி.மு 27 ஆம் ஆண்டிலிருந்து உரோமப் பேரரசை ஆட்சி செய்த அரசர்கள் ஆவர். இப்பேரரசர்களில் முதலாவதாக உரோமப் பேரரசை ஆட்சி செய்தவர் ஒகஸ்டஸ் சீசர் ஆவார். [1]
பேரரசர் of ரோமப் பேரரசு | ||
---|---|---|
முன்னாள் மன்னராட்சி | ||
ரோமாபுரி போர் வீரர்கள் ஏந்திச் செல்லும் கொடி | ||
ஒகஸ்டஸ் | ||
முதல் மன்னர் | ஒகஸ்டஸ் | |
கடைசி மன்னர் | முதலாம் தியோடோசியஸ் (ஒன்றுபட்ட அல்லது பாரம்பரிய), ரொமியூலஸ் ஒகஸ்டஸ்லஸ் (மேற்கத்தேய), பதினோராம் கொன்ஸ்டைந்தன் (கீழைத்தேய) | |
மன்னராட்சி துவங்கியது | சனவரி 16, கிமு 27 | |
மன்னராட்சி முடிவுற்றது | சனவரி 17, கிபி 395 (ஒன்றுபட்ட அல்லது பாரம்பரிய), செப்டெம்பர் 4, கிபி 476 (மேற்கைத்தேய), மே 29, கிபி 1453 (கீழைத்தேய) | |
தற்போதைய வாரிசு | எவருமில்லை |
பேரரசர்கள்
தொகுயூலியஸ் சீசர்
தொகுயூலியஸ் சீசர் கிமு 59 தொடக்கம் 44 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உரோமப் பேரரசை ஆண்டார். யூலியஸ் சீசர் பேரரசராகும் முன்னர் பிரான்ஸின் ஆளுநராக இருந்தவர். கிமு 54ஆம் ஆண்டு இங்கிலாந்தை வெற்றிகொண்ட பின்னரே இவர் பேரரசர் ஆனார். இவர் எகிப்தை கைப்பற்றும் போது எகிப்தின் அழகிய இராணி செலோபத்ரா என்பவரை காதலித்தார். எகிப்தைக் கைப்பற்றிய பின் ரோமிற்குத் திரும்பியபோது இவர் சர்வாதிகாரி ஆனார். இவரே ரோமப் பேரரசில் சிறந்ததோர் நிர்வாகத்தை உருவாக்கினார். செனட் எனும் சையின் அங்கத்தவர்களின் தொகையையும் இவரே அதிகரித்தார். யூலியஸ் சீசர் கிமு 44 ஆண்டில் கொலை செய்யப்பட்டார்.
ஒகஸ்டஸ் சீசர்
தொகுஒகஸ்டஸ் சீசர் என்னும் பேரரசனே கோலோசியம் விளையாட்டரங்கு கெரகெல்லா நீச்சல் தடாகம் போன்றவற்றை நிர்மாணித்ததாகக் கருதப்படுகிறது. இவரே பாலங்கள், வீதிகள், பாரிய கட்டடங்கள் போன்ற பலவற்றை பேரரசின் காலத்தில் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒகஸ்டஸ் சீசரின் தந்தை யூலியஸ் சீசர் ஆவார்.
நீரோ மன்னன்
தொகுநீரோ மன்னன் இவன் கிமு 37ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். நீரோ மன்னனே யூலியர்-கலியுதின் வம்சத்தின் ஐந்தாவதும் இறுதியுமான உரோமப் பேரரசர் ஆவார். இவர் குளோடியசு எனும் உரோமப் பேரரசனின் வளர்ப்புப் பிள்ளை ஆவார். குளோடியசு இறந்த பின்னர் கிமு 54ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆந் திகதி அன்று ரோமப் பேரரசராகப் பதவியேற்றான். நீரோ மன்னன் தனது முப்பதாவது வயதில் கிமு 68ஆம் ஆண்டில் சூன் மாதம் ஒன்பதாம் திகதி மரணமுற்றான்.
குளோடியசு
தொகுகுளோடியசு மன்னனே உரோமப் பேரரசின் நான்காவது பேரரசன் ஆவான். இவர் கிமு பத்தாம் நூற்றாண்டில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் லக்டூனம் எனும் இடத்தில் பிறந்தார். இவருக்கு முன்பாக உரோமப் பேரரசராக கலிகுலா என்பவரும் இவருக்குப் பின்பாக உரோமப் பேரரசராக நீரோ என்பவரும் ஆட்சியில் இருந்தனர்.
படத்தொகுப்பு
தொகு-
உரோமப் பேரரசன் யூலியஸ் சீசர்
-
உரோமப் பேரரசன் ஒகஸ்டஸ் சீசர்
-
உரோமப் பேரரசன் நீரோ மன்னன்
-
உரோமப் பேரரசன் குளோடியசு
இவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புக்கள்
தொகு- ↑ Galinsky, Karl (2005). The Cambridge companion to the Age of Augustus. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-80796-8. பார்க்கப்பட்ட நாள் 2011-08-03.
மேலும் வாசிக்க
தொகு- Scarre, Chris. Chronicle of the Roman Emperors: The Reign-by-Reign Record of the Rulers of Imperial Rome. London: Thames & Hudson, October 1, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05077-5. (hardcover)
வெளி இணைப்புக்கள்
தொகு- De Imperatoribus Romanis
- Rulers of Rome
- "Decadence, Rome and Romania, and the Emperors Who Weren't", by Kelley L. Ross, Ph.D.
- UNRV.com
- The Roman Law Library பரணிடப்பட்டது 2012-08-31 at the வந்தவழி இயந்திரம்