உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) தமிழ், தமிழர் தொடர்பாக நுண்ணிய திறனாய்வுகளை முதன்மையாக மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது 1968-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது சென்னை தரமணியில் அமைந்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புது வளாகத்தின் முகப்பு

"உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நோக்கும் போக்கும் மற்ற தமிழாய்வு நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இவ்வமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும்."

வரலாறுதொகு

பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்தொகு

பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2016 மார்ச் 1 இல் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது.[1] [2] இதில் தொல்காப்பியர் அரங்கு,திருவள்ளுவர் அரங்கு, கபிலர் அரங்கு,ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கம்பர் அரங்கு, தமிழ்த் தாய் ஊடக அரங்கு ஆகியவற்றில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

சுவடியியல் பாதுகாப்பு மையம்தொகு

2014-ஆம் ஆண்டு, "தமிழ்நாடு முழுவதும் கண்டறியப்படும் சுவடிகள், தாள் சுவடிகள் மற்றும் அரிய நூல்கள் அனைத்தையும்" பாதுகாக்கும் வண்ணம் சென்னை தரமணியில் சுவடியியல் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டது.[3]

இயக்குநர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு