உலகப் புள்ளியியல் நாள்
உலகப் புள்ளியியல் நாள் (World Statistics Day) என்பது புள்ளிவிவரங்களின் முக்கியத்துவத்தினைக் கொண்டாடும் ஒரு பன்னாட்டுக் கொண்டாட்ட நாளாகும். ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் இந்நாள் ஆரம்பிக்கப்பட்டது.[1] இந்நாள் முதன் முதலில் 2010 அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்நாள் கொண்டாடப்படுகிறது.[2]
உலகப் புள்ளியியல் நாள் World Statistics Day | |
---|---|
நாள் | 20 அக்டோபர் |
நிகழ்வு | ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை |
2010 தரவுகளின் படி, 103 நாடுகள் தேசிய புள்ளியியல் நாளைக் கொண்டாடுகின்றன. இதில் 51 ஆப்பிரிக்க நாடுகள் கூட்டாக ஆண்டுதோறும் நவம்பர் 18 அன்று ஆப்பிரிக்கப் புள்ளியியல் நாளைக் கொண்டாடுகின்றன.[3] புள்ளியியல் வல்லுநர் பிரசாந்த சந்திர மகாலனோபிசின் பிறந்த நாளான சூன் 29 அன்று இந்தியா தனது புள்ளிவிவர நாளைக் கொண்டாடுகிறது.[4] இங்கிலாந்தில் உள்ள அரச புள்ளியியல் சமூகம் இதே நாளில் 20:10 மணிக்கு (20 அக்டோபர் 2010 அன்று) புள்ளியியல் கல்வியறிவு பிரச்சாரத்தைத் தொடங்கியது.[5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ World Statistics Day
- ↑ "World Statistics Day". www.timeanddate.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-13.
- ↑ "United Nations Statistics Division".
- ↑ ""Statistics Day" will be celebrated on 29th June, 2018".
- ↑ http://www.getstats.org.uk
- ↑ "World Statistics Day | Statistics". statistics.unwto.org (in ஆங்கிலம்). Archived from the original on 2018-10-14. பார்க்கப்பட்ட நாள் 2018-10-13.