உலக சித்தர்கள் நாள்
உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
பின்புலம்
தொகுதமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 2009 ஏப்ரல் 14 இல் சித்திரைப் புத்தாண்டு நாளை உலக சித்தர்கள் நாளாக அறிவித்தார். இதனை அடுத்து முதலாவது உலக சித்தர்கள் தினம் 2009 ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு உரையாற்றினார்[1]. 2வது உலக சித்தர்கள் நாள் 2010 ஏப்ரல் 14 இல் சென்னை, அடையாறில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 2000 த்திற்கும் அதிகமான சித்த மருத்துவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்[2]. மூன்றாவது சித்தர்கள் நாள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் 2011 ஏப்ரல் 14, 15 ஆம் நாட்களில் கொண்டாடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "World Siddha Day". த இந்து (ஈரோடு). 16 ஏப்ரல் 2009 இம் மூலத்தில் இருந்து 2012-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120313125046/http://www.hindu.com/2009/04/16/stories/2009041651490300.htm.
- ↑ "Siddha Day to be observed on 14 April". நியூஸ் டுடே (சென்னை). 24 மார்ச் 2010 இம் மூலத்தில் இருந்து 2012-02-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120226174227/http://www.newstodaynet.com/newsindex.php?id=21749%20&%20section=7.