உலக மலேரியா நாள்
உலக மலேரியா நாள் (World Malaria Day, WMD) ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மலேரியா நோயினால் சுமார் 7 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் 3.3 பில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிப்படைகின்றனர்.[1] மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007இல் ஏப்ரல் 25 ம் நாளை மலேரியா நாளாக அறிவித்தது.
உலக மலேரியா நாள் | |
---|---|
கடைபிடிப்போர் | உலக சுகாதார அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகள் |
நாள் | ஏப்ரல் 25 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
2012 ஆம் ஆண்டில் அண்ணளவாக 627,000 பேர் மலேரியாவ் நோயால் இறந்துள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழும் குழந்தைகள் ஆவர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ World Health Organization,World Malaria Report 2010 பரணிடப்பட்டது 2011-12-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ World Health Organization, Malaria. WHO Fact sheet N°94, updated March 2014. Accessed 8 April 2014.